February 12, 2015

செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்திகள்

காரைக்குடி அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு!….

காரைக்குடி:-சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் தமிழ்நாடு கெமிக்கல் என்ற பெயரில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி ஆலையை அகற்றுமாறு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ஆலையில் திடீரென வெடிசத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து கரும்புகை வெளியானது. ஆலையில் இருந்த பாய்லர் வெடித்து விட்டதாக பலரும் அச்சம் அடைந்தனர். ஆலையில் இருந்து வெளியான கரும்புகையால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களிடையே பதட்டம் ஏற்பட்டது. ஆனால் பாய்லர் வெடிக்கவில்லை என்றும், காற்றழுத்தம் அதிகமானதால் பாய்லரில் ஏற்பட்ட விரிசலால் சத்தம் எழுந்து கரும்புகை வந்ததாகவும் அது தானாகவே சரியாகிவிடும் என்றும் ஆலை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தீயணைப்பு படையினர் சம்பவ இடம் விரைந்து சென்று கரும்புகைக்கான காரணங்களை ஆராய்ந்தனர்.

செய்திகள், திரையுலகம்

‘புலி’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யின் அதிரடி!…

சென்னை:-நடிகர் விஜய் என்றாலே எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என்று சொல்வார்கள். ஆனால், அவருடைய நெருங்கிய நண்பர்கள் அப்படி தான் ஒன்றும் இல்லை விஜய் மிகவும் கலகலப்பானவர் என்று கூறுவார்கள். இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்தில் காட்டுக்குள் சிலர் விஜய்யை தேடி வருவது போல் ஒரு காட்சியாம். இதை சிம்புதேவன் சமீபத்தில் கேரளா காட்டுப்பகுதியில் படமாக்கியுள்ளார். இந்த காட்சி எடுத்து முடித்தவுடன் விஜய்யிடம் போட்டு காண்பித்துள்ளார் சிம்புதேவன். பொறுமையாக பார்த்த அவர், ஒரு கட்டத்திற்கு மேல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாராம். அப்பறம் என்ன இயக்குனருக்கு ஒரே சந்தோஷம் தான்.

செய்திகள், விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் அணிகளின் செல்லப்பெயர்கள் – ஒரு பார்வை…

சர்வதேச கிரிக்கெட் அணிகள் செல்லப்பெயரிலும் அழைக்கப்படுவது உண்டு. அது வருமாறு:- இந்தியா-மென் இன் புளூ (இந்திய வீரர்களின் சீருடை அடிப்படையில் இந்த பெயர்) ஆஸ்திரேலியா- தி பேக்கி கிரீன் (பாரம்பரிய மிக்க டெஸ்ட் தொப்பியின் அடிப்படையில்), தி கங்காரூஸ்(ஆஸ்திரேலிய தேசிய விலங்கு) இலங்கை அணி- தி லயன்ஸ் நியூசிலாந்து-தி பிளாக் கேப்ஸ் (கருப்பு நிற சீருடை), தி கிவிஸ் (நியூசிலாந்தின் தேசிய பறவை) பாகிஸ்தான்-மென் இன் கிரீன் தென்ஆப்பிரிக்கா-தி புரோட்டீஸ் (அழகிய பூக்கள் கொண்ட ஒருவகை தென்ஆப்பிரிக்க தாவரம்) வெஸ்ட் இண்டீஸ்- தி இண்டீஸ், கரீபியன் வங்காளதேசம்-தி டைகர்ஸ்

செய்திகள், திரையுலகம்

‘அனேகன்’ பட வழக்கிற்கு அதிரடி தீர்ப்பு!…

சென்னை:-தமிழ் சினிமா சமீப காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு பெரிய நடிகரின் படம் வந்தால் போதும் உடனே யாராவது வழக்கு கொடுக்க வந்து விடுவார்கள். அந்த வகையில் அனேகன் படத்தில் வண்ணார் சமூகத்தினரை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதை நீக்க கோரி வழக்கு போட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி படம் தணிக்கை சென்று வந்து விட்டது, இனி உங்களுக்கு பிரச்சனை என்றால் தணிக்கை குழுவினரை தான் அனுக வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள்

சசிதரூரிடம் மீண்டும் விசாரணை!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு சமீபத்தில் கொலை வழக்காக மாற்றப்பட்டது. சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சுனந்தாவின் மகனிடம் கடந்த 5ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல சசிதரூரிடம் கடந்த மாதம் 19ம் தேதி டெல்லி சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் 50 கேள்விகள் கேட்கப்பட்டது. இதுவரை 15 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கிடையே சசிதரூரிடம் இன்று மீண்டும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. இதற்காக அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி அவர் இன்று டெல்லி சரோஜினிநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ஐ.பி.எல். கோணத்திலும் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். சுனந்தா மகன் சிவ்மேனன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் சசிதரூரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு: 101 டிகிரி காய்ச்சல்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக நாளை மறுநாள் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு பிறகு மத்திய மந்திரிகள், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார் கெஜ்ரிவால். இதனால் அவருக்கு போதிய ஓய்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை கெஜ்ரிவாலின் உடலை பரிசோதித்த அவரது குடும்ப மருத்துவர் முழு ஓய்வெடுக்குமாறு பரிந்துரை செய்தார். அவருக்கு 101 டிகிரி காய்ச்சல் இருப்பதாகவும், இருமலால் அவர் அவதிப்படுவதாகவும் தெரிகிறது. 14ம் தேதி நடைபெறும் பேரணியிலும் பங்கேற்கவேண்டாம் என்று அவருக்கு மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

செய்திகள், திரையுலகம்

நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்கள்!…

சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது ஆதர்ஸ் நாயகர்களின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளனர். அதிலும் அஜித், விஜய் ரசிகர்களின் பாசத்தை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கடந்த வருடம் கத்தி படம் ரிலிஸான சமயத்தில் விஜய்க்கு சென்னையில் பிரபல திரையரங்கு முன்பாக சிலை வைத்தனர். அதேபோல் தற்போது அஜித் ரசிகர்களும் என்னை அறிந்தால் வெளியானதை தொடர்ந்து அஜித்துக்கு சேலத்தில் சிலை வைத்துள்ளனர். என்னை அறிந்தால் கெட்டப்பில் அஜித் உள்ள இந்த சிலையை வேனில் ஊர்வலமாக கொண்டு வந்து பிரபல திரையரங்கு முன்பு வைத்தனர்.

செய்திகள், திரையுலகம்

மீண்டும் சர்ச்சையான படத்தின் ரீமேக்கில் நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-நடிகர் அமீர் கான் நடிப்பில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் பிகே. இப்படம் பல சர்ச்சையை உண்டாக்கியது. இதில் குறிப்பாக இந்து சமயத்தை மிகவும் கிண்டல் செய்திருந்ததாக கூறப்பட்டு பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரீமேக்கில் விஜய் நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கவுள்ளனர்.

செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்திகள்

இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…

ரோம்:-வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து குடியேற பொதுமக்கள் அகதிகளாக படகுகளில் புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு லிபியாவில் இருந்து காற்றடைத்த 4 ரப்பர் படகுகளில் சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டு வந்தனர். அவை இத்தாலியில் லாம்பெருசா தீவு அருகே மத்திய தரைக்கடலில் வந்தபோது தட்பவெப்ப நிலை மோசம் அடைந்தது. கடலில் அலை அதிகமானது. இதனால் படகுகள் தத்தளித்தன. இதை அறிந்த இத்தாலி கடலோர பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். 4 படகுகளில் 2 படகில் வந்தவர்களை மீட்டனர். அவர்களில் 29 பேர் படகுகளில் இறந்து கிடந்தனர். பலநாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்ததாகவும், தண்ணீர் தாகத்திலும் உயிரிழந்தனர். இந்த நிலையில் உடன் வந்த மேலும் 2 படகுகளை காணவில்லை. தொடர்ந்து தேடியும் அவை கிடைக்கவில்லை. எனவே அப்படகுகளில் வந்தவர்கள் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் 300 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா.சபையின் மனித வளத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய தரைக்கடலை கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 300 பேர் இதுபோல் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 115 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் 27 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.

செய்திகள், திரையுலகம்

ஹாங்காங் சுட்டி பெண் நடிகர் அஜித்திற்கு கொடுத்த பட்டம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ ஒரு தமிழ் திரைப்படம் என்றாலும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதில் ஹாங்காங்கில் அஜித்தின் மார்க்கெட் இந்த படத்தின் மூலம் உச்சத்தை தொட்டுள்ளது. இப்படத்தை திரையரங்கில் பார்த்த பலரும் அஜித்தின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதில் ஒரு குட்டி பெண் அஜித்திற்காக ஒரு சில வாசகங்களை எழுதி வந்தது. இதில் அஜித் தான் சூப்பர் ஸ்டார், அவர் சிறந்த நடிகர் என்று எழுதியிருந்தது. இதேபோல் லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Scroll to Top