செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…

இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…

இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?… post thumbnail image
ரோம்:-வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து குடியேற பொதுமக்கள் அகதிகளாக படகுகளில் புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு லிபியாவில் இருந்து காற்றடைத்த 4 ரப்பர் படகுகளில் சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டு வந்தனர். அவை இத்தாலியில் லாம்பெருசா தீவு அருகே மத்திய தரைக்கடலில் வந்தபோது தட்பவெப்ப நிலை மோசம் அடைந்தது. கடலில் அலை அதிகமானது. இதனால் படகுகள் தத்தளித்தன.

இதை அறிந்த இத்தாலி கடலோர பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். 4 படகுகளில் 2 படகில் வந்தவர்களை மீட்டனர். அவர்களில் 29 பேர் படகுகளில் இறந்து கிடந்தனர். பலநாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்ததாகவும், தண்ணீர் தாகத்திலும் உயிரிழந்தனர். இந்த நிலையில் உடன் வந்த மேலும் 2 படகுகளை காணவில்லை. தொடர்ந்து தேடியும் அவை கிடைக்கவில்லை. எனவே அப்படகுகளில் வந்தவர்கள் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மொத்தம் 300 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா.சபையின் மனித வளத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய தரைக்கடலை கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 300 பேர் இதுபோல் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 115 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் 27 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி