Author name: கரிகாலன்

தமிழ்ப்பேழை, முதன்மை செய்திகள்

தென்னாட்டின் மொழியினம் பாகம்-6

கோலமி,பார்ஜி, நாய்கி: மத்திய பிரதேசத்திலும் ஐதராபாத்திலும் உள்ள சிலர் பேசும் மொழி கோலமி .இவர்களை அடுத்த இனத்தவர் பேசுவன பார்ஜியும் நாய்கியும். மால்டா: வங்காளத்தில் ராஜ்மகால் மலைகளில் வாழும் சில ஆயிரம் மக்கள் பேசும் மொழி இது. இம் மொழி பேசுவோர் மாலர் என்றும், இராஜ்மஹாலர் என்றும் அழைக்கப்பெறுவர். ஒரவொன், கட்பா, குரு: சோடாநாகபுரியிலும் அதன் சுற்றுப் புறத்திலும் வாழும் சில மக்கள் பேசும் மொழிகள் இவை.பாட்ஸ்க் பாதிரியார் ஒரவொன் இலக்கணத்தை எழுதியுள்ளார். இத்திருந்தா மொழிகளைப் பேசுவர்களேயன்றி வங்காளத்திலும் ஒரிசாவிலும் வாழும் பூயியர்கள் கொச்சர்கள் ஆகியோரும் திராவிடர்களே என்பர். பிராஹூய் மொழி: இந்தியாவின் வடமேற்கே பலுசிஸ்தானத்தின் ஒரு சார் மக்கள் பேசும் மொழி இது. இம் மொழியில் திராவிட மொழியின் அடிப்படைக்கூறுகள் சில உள்ளன.மூவிடப்பெயர்களும் பெரும்பாலும் ஒத்துள்ளன.திராவிட இலக்கண அமைப்புகளும் உள்ளன. இம்மொழியில் திராவிட மொழிக்கூறுகள் சிலவே என்றும் ,மற்றவகைக்கலப்புகள் பல என்றும் கூறி திராவிட மொழி வகைகளுள் இதனை ஒன்றாகச் சேர்க்காமல் விட்டு விட்டார் டாக்டர் கால்டுவெல். பிராஹீய் மொழி இந்தியாவின் வடமேற்குக் கணவாயை அடுத்துள்ள பகுதியில் வழங்குவதால் திராவிடர்கள் இவ்வழியாகவே இந்தியாவிற்குள் புகுந்து சிந்து நதிக்கரையில் பரவினர் என்பர் கால்டுவெல்.ஆனால் திராவிடர் தென் இந்தியாவில் சிந்துநதிக்கரைவரையிலும் பரவியபின் வடமேற்குக் கணவாய் வழியாக நடு ஆசியாவிற்குச் சென்றனர் என்ற கொள்கைக்கும் இதனைச் சான்றாகக் கூறலாம். திராவிடர்களும் பிராஹூய் மக்களும் ஒரே இனத்தவர் என்பதற்குச் சான்றுகள் இல்லை .ஆனால் திராவிட மொழி பேசுவோரின் கலப்பு அவர்களிடையே ஏற்பட்டு நிலை பெற்றது. என்பதற்கு இந்த ஒற்றுமைக் கூறுகள் சான்றாகும் என்பர் வி.ஆர்.ஆர்.தீட்சிதர்.

சங்ககாலம், முதன்மை செய்திகள்

சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்

நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து-தொல்காப்பியம்-பாயிரம். தொல்லாணை நல்லாசிரியர் புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு தருவின் நெடியோன்-மதுரைக்காஞ்சி. தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ் நனைமறுவின் மதுரை-சிறுபாணாற்றுப்படை. இமிழ்குரல் முரசம் மூனறுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே-புறநானூறு. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என்நிலவரை-புறநானூறு. பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள -சிலப்பதிகாரம் புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற் பொதியில் தென்றல் போலாது, ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் -சிலப்பதிகாரம். தென் தமிழ் நன்நாட்டுத் தீதுதீர் மதுரை -சிலப்பதிகாரம். தென் தமிழ் மதுரை -மணிமேகலை. நிலநாவில் திரிதரூஉம் நீண்டமாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுதன்றோ -கலித்தொகை. செதுமொழி சீத்த செவி செறுவாக, முதுமொழி நீராப், புலன் நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் மதுரை-கலித்தொகை ஈண்டு நலந்தருதல் வேண்டிப் பாண்டியன் பாடு தமிழ் வளர்த்த கூடல் -புறத்திரட்டு-ஆசிரியமாலை உறைவான் உயர்மதிற் கூடலில் ஆய்ந்த ஒண் தமிழன் துறைவாய் நுழைந்தனையோ -திருவாசகம் .

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

சே! என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது?

சேகுவாராவின் இளமைப்பருவம்….!! சேகுவாரா 1928ஆம் ஆண்டு ,ஜூன் மாதம் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவில் பிறந்தார் . ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவராக பிறந்தார் . அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா என பெயர் சூட்டினர். அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை, தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். இவர் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்குஇவருக்கு கிடைத்தது. இவரது தந்தை , சோசலிசத்தில் ஆதரவாளராக இருந்தார் .இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது. ஆஸ்துமா நோய்: “சே”வுக்கு இரண்டு வயது இருக்கும் . நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய் , ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார் .நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராட வைக்க , ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி ,ஆஸ்துமா இவரை இறுகப்பற்றியது . வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப்பெயர் இட்டு அழைத்தனர். தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப்பழகிய சே குவேரா ,12வது வயதில் உள்ளூர் சுற்றுப்போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் .வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் .நெருடா, கீட்ஸ், மாச்சாடோ. லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்களின் மீது இவருக்கு சிறந்த ஆர்வம் இருந்தது.

முதன்மை செய்திகள், விளையாட்டு

இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்!!

சாய்னா நேவால் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் .மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார். இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார். மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்!!

கல்பனா சாவ்லா இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார் . இவருடைய பள்ளி சான்றிதழில் 1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்-87ல் ஆறு வீரர்கள் கொண்ட குழுவுடன் முதல்முறையாக விண்வெளிக்கு சென்றார். இந்த விண்கலம் விண்வெளியில் 372 மணிநேரம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது. மீண்டும் 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் -107ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு சென்றனர் .பிப்ரவரி 1ஆம் தேதி , பயணம் முடித்து விண்கலம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக , விண்கலம் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். வானத்தை வசப்படுத்திய கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக கர்நாடக அரசும் , இந்திய அரசும் சாதனை புரியும் பெண்களுக்கு இவரது பெயரில் விருது வழங்கி வருகிறது.

அரசியல், முதன்மை செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெற்றுள்ள நிலையில் , அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் ,சாலிகிராமம் சென்று கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும் சந்தித்து பேசினார். இரு சந்திப்புகளும் மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்த பிறகு ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் என்கிற முறையில் விஜய காந்தை சந்திக்க வந்தேன். அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வந்த போது தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன்.அவர் உடல் நலத்துடன் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் பலம் கூட்டணியின் வெற்றியாக அமையும். த.மா.கா. வின் தேர்தல் அறிக்கை வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சங்ககாலம், முதன்மை செய்திகள்

சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன். ஆலவாய் பெருமான்-சிவன். குன்று எறிந்த வேள்-முருகன். துவரைக்கோமான்-கண்ணன். நிதியின் கிழவன்-குபேரன். மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள்:89+59+49=197 பேர். மொத்த காலம்:4440+3700+1850=9990ஆண்டுகள். மொத்த புலவர்கள்:4449+3700+449=8598 பேர். காய்சின வழுதி-கடுங்கோன்-முதற்சங்கம். வெண்டேர்ச் செழியன்-முடத்திருமாறன்-இடைச்சங்கம். இடை, கடைச் சங்கத்திற்கு உருய மன்னன்-முடத்திருமாறன். முச்சங்கத்திற்கும் உரிய நூல்-அகத்தியம். முத்தமிழ் இலக்கண நூல்-அகத்தியம். இயற்றமிழ் இலக்கண நூல்-தொல்காப்பியம். இசைத்தமிழ் இலக்கண நூல்-முதுநாரை. நாடகத்தமிழ் இலக்கண நூல்- இந்திரகாளியம்,பஞ்சமரபு. புலவர் தலைவர் அகத்தியர். அகத்தியர் மாணவர் 12 பேர். தொல்காப்பியர், அதங்கோட்டாசான், பனம்பாரனார்,காக்கை பாடினியார்,நத்தத்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அகத்தியரின் மாணவர்கள் 12 பேரும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம். இது ஒரு புற நூல். அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம். இது 12000 நூற்பாக்களைக் கொண்டது.தற்போது 103 நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இது 12 பகுதிகளை உடையது.அவை எழுத்து, சொல், பொருள்,யாப்பு , சந்தம். வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், ஜோதிடவியல், கந்தர்வம், கூத்து. “எள்ளின் நின்று எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தின்றும் எடுபடும் இலக்கணம்” என்பது அகத்திய நூற்பா.

திரையுலகம், முதன்மை செய்திகள்

பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தமா?….

நடிகர் விஷாலுக்கு இன்று(மார்ச்-16) நிச்சயதார்த்தம்! நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி இதனை தெரிவித்துஇருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். இவர்களது நிச்சயதார்த்தம் இன்று (16-ந்தேதி) ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள். அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லிசூப்லு, அர்ஜூன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகே திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் கூறியிருந்தார்.தற்போது கட்டிட பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை இன்று முடிவு செய்கிறார்கள். விஷால் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் , தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.2004-ல் செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.கடந்த சட்ட மன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்றார் .ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடியானது.தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

புரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்?

சேகுவாரா!!! உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும் , அது ஏன்?எதற்கு?எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது. அப்படியான ஒரு உருவம்தான் ,முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு ,சிகார் சகிதமாக ,கம்பீரமான ஆளூமையாக ,டி-சர்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் செருப்பு வரை ஒரு உருவம் பிரபலம் என்றால் அது சேகுவாரா தான். கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன். சேகுவாரா புரியாதவர்களுக்கு புதிர் புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன். சேகுவாரா யார்? ஏழைகளை அன்போடு அரவணைப்பவர் . ஒரு சோசலிசப் புரட்சியாளர் ,மருத்துவர், அரசியல்வாதி. மேலும் , கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்கு பெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர். சேகுவாரா என்றால் விடுதலை ,ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்பதாகும். சேகுவாரா எனகிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது. இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்திற்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி ஆவார். வெனிசுலா, கொலம்பியா, பிரேசில் கியூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சேகுவாரா நின்று இருந்தார். அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியாகவும் இருந்தார்.ஆனால், மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது. அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியதுதான் அதோடு கார்ல் மார்க்கசையும் , லெனினையும் உள்வாங்கி படித்த அவர் ஏழைகளும் , பாட்டாளிகளும் படும் துன்பங்களை அறிந்த போதுதான் போராளியானார். தொடரும்……..

தமிழ்ப்பேழை, முதன்மை செய்திகள்

தென்னாட்டின் மொழியினம் பாகம்-5

துளு: இதற்குக் கிரந்தத்தை ஒட்டிய எழுத்து முறை உண்டு .தனி இலக்கிய வளம் இல்லை.கிறித்துவப் பாதிரிமார்கள் முதன் முதலில் இம்மொழியில் நூல்கள் எழுதினர் .ஆனால் இவை கன்னட எழுத்துக்களில் எழுதி அச்சிடப்பெற்றன. கருநாடக மாநிலத்தை அடுத்துள்ள கல்யாணபுரி, சந்திரகிரி என்னும் இரண்டு ஆறுகளுக்கிடையேயுள்ள பகுதியில் வாழும் மக்கள் இம்மொழி பேசுகின்றனர். பிரிகெல் என்னும் ஐரோப்பிய அறிஞர் முதன் முதலாக இம்மொழிக்கு இலக்கணம் எழுதினார். குடகு: இம்மொழிக்கும் எழுத்தும் இலக்கிய வளமும் இல்லை. கன்னட மொழி பேசும் பகுதியை அடுத்துள்ள போதிலும் தமிழோடும் மலையாளத்தோடும் உறவு உடையதாக விளங்குவதாக டாக்டர் மோக்லிங் என்ற ஜெர்மனி அறிஞர் கூறுகிறார் .இது பழங்கன்னடத்திற்கும் துளுவிற்கும் இடைப்பட்டது என்பது கால்டுவெல் கருத்து. மேஜர் கோல் என்பவர் இதன் இலக்கணத்தையும் சில பாட்டுக்களையும் எழுதி வெளியிட்டு உள்ளார். கோத மொழி: நாகரிகத்தில் பின் தங்கியுள்ள நீலகிரியில் வாழும் மக்களே இம்மொழியைப் பேசுகின்றனர். தோத மொழி: நீலகிரிமலையில் வாழும் பழங்குடி மொழி இது. இம்மொழி பேசும் மக்கள் நாகரிகத்தில் பின் தங்கியவர்கள். இம்மொழி பேசுவோர் தொகை மிகவும் குறைவு. படக மொழி: இம்மொழி கன்னடத்தின் கொச்சைக் கிளை மொழி போன்றது.நீலகிரி மலையில் வாழ்வோர் பேசுவது. கோந்தி மொழி: மத்திய இந்தியாவில் சில மலைகளிலும் காடுகளிலும் வாழும் மக்கள் பேசும் மொழி. கூ,குவி,கோண்ட்: ஒரிசாவின் குன்றுகளில் வாழும் மக்கள் பேசும் மொழி. தொடரும்………..

Scroll to Top