பரபரப்பு செய்திகள்

செய்திகள், திரையுலகம், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

என்னை நடிக்க விடாம துன்புறுத்தினார் – வடிவேலுவின் உண்மைமுகத்தை கிழித்த காமெடி நடிகர் பெஞ்சமின்..!

காமெடி நடிகர் பெஞ்சமினை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இயக்குனர் சேரன் இயக்கத்தில், பார்த்திபன், முரளி, வடிவேலு கூட்டணியில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்டபம் “வெற்றிக்கொடிகட்டு” இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் பெஞ்சமின். சமீபத்தில், சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வந்துள்ள இவர் ஒரு பேட்டியில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்டபோது அவர் பார்த்த வடிவேலுவின் சுயரூபத்தை பற்றி விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது, கே.பாலச்சந்தரின் நடிப்புப் பட்டறையில் நடித்துக்கொண்டிருந்த என்னை ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது இயக்குனர் சேரன் பார்த்துவிட்டு வெற்றிக்கொடி கட்டு படத்தில் நடிக்க வரச் சொல்லியிருந்தார்.சேரன் சார் சொன்னமாறியே நானும் வெற்றிக்கொடிகட்டு படப்பிடிப்புக்கு சென்றேன். என்னை, 18 நாட்கள் ஒரு புளிய மரத்து அடியில் நாற்காலியைப் போட்டு உட்கார வைத்து விட்டார். எந்த காட்சியிலும் நடிக்க அழைக்கவில்லை. ஏன் சார் என்று காரணம் கேட்டதற்கு, வடிவேலு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் உங்களுடைய காட்சியும் அவருடைய காட்சியும் ஒரே நாளில் எடுக்கப்படவேண்டும். அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வடிவேலு நாளைக்கு வந்து விடுவார் என கூறினார். வடிவேலு வராததால் 18 நாட்கள் பெஞ்சமினை ஒரு புளிய மரத்தடியில் உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் சேரன். ஒருவழியாக வடிவேலு படப்பிடிப்புக்கு வந்தவுடன் எங்களுக்கு இடையேயான காட்சி எடுக்கப்பட்டது.அப்போது, என்னை நடிக்க விடாமல் வடிவேலு தனது முக பாவனையால் கிண்டல் செய்ததார். அதனால், நான் வடிவேலுவை பார்த்து திட்ட வேண்டிய காட்சி கிட்டத்தட்ட 5 ரீல் பெட்டிகளுக்கு மேல் வீணாக்கப்பட்டது. மேலும், அதன் மதிப்பு மட்டும் 60 ஆயிரம் ரூபாய், கடைசியில் நடிகர் பார்த்திபனின் உதவியுடன் வடிவேலுவை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்திவிட்டு பின் வடிவேலுவை திட்டுவது போல இருந்த காட்சியை படமாக்கினோம்.இவ்வாறு தான் ஒரு புதுமுக நடிகர் என்றும் பாராமல் என்னை நீ திட்டி விடுவாயா?? திட்டி விட்டு உயிரோடு ஊருக்கு போய்டுவியா..? என்ற தொணியில் மிரட்டி என்னை பயமுறுத்தி பல டேக்குகள் வாங்க வைத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வீணடித்து விட்டார் அந்த ஒரு காட்சிக்காக. அனைவரும் ரசித்து பார்த்த அந்த நகைச்சுவை காட்சிக்கு பின் இவ்வளவு பெரிய சம்பவம் உள்ளதா..? என இந்த பேட்டியை பார்த்தபின் அனைவரும் ஆச்சரியப்பட்டும், பெஞ்சமினுக்காக பரிதாபப்பட்டும் வருகின்றனர்.சமீப காலமாக, வடிவேலு மீதான புகார்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகர் பெஞ்சமினின் புகாரும் தற்போதுதீயாக பரவி வருகின்றது.

செய்திகள், தமிழாய்வு, பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

பிரான்மலையை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கைது.

பறம்புமலையை (பிரான்மலையை)உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் கைது கைது செய்தது கண்டனத்திற்குரியது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! பாரி மன்னன் ஆண்ட பறம்புமலை எனறு தமிழறிஞர்களாலும், ஆய்வாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் – பிரான்மலைக்குச் சேதம் உண்டாக்கக்கூடிய வகையில், தனியார் கல்குவாரி அமைத்து, மலைக்கான பாதையை உடைத்து வருகிறார்கள். அடுத்து, அவர்கள் பிரான்மலையின் பகுதிகளையும் உடைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. சங்ககாலக் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் இப்பறம்புமலை பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர் வரலாற்றுச் சின்னமாகும். பறம்புமலையைப் பாதுகாக்க வேண்டும், அதைச் சுற்றிலும் மலையை உடைக்கும் தனியார் வணிகத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்று அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மலை உடைப்பு வேலை தொடர்கிறது. இந்நிலையில், இன்று (21.07.2020) காலை, பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் முன்னணிப் பொறுப்பாளர்களும், ஆர்வலர்களும் பிரான்மலையில் என்ன நடக்கிறது என்று கள ஆய்வு செய்யப் போனவர்களை, காவல்துறையினர் வழிமறித்துத் தளைப்படுத்தி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களைக் கைது செய்தது கண்டனத்திற்குரிய செயலாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் கவனம் செலுத்தி பறம்புமலைக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் அங்கே நடைபெறும் தனியார் மலை உடைக்கும் வேலைகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும், இன்று தளைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் – சிறுமியர் உட்பட 65 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். ======================================தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பேச: 9443918095, புலனம் : 9841949462முகநூல் : www.fb.com/tamizhdesiyamஊடகம் : www.kannottam.comஇணையம் : www.tamizhdesiyam.comசுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள்..

தனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம்!தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை! வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! திராவிடர் கழகத்தின் நாளேடான “விடுதலை” இதழின் ஞாயிறு மலரில் (வெளியூர் 21.06.2020) சிறப்பு வினா ஒன்றும், அதற்கான சிறப்பு விடையும் வெளிவந்துள்ளன. சிறப்புக் கேள்வியைக் கேட்டவர் சி.பி.எம். கட்சியின் பேராசிரியர் அருணன் அவர்கள். சிறப்பு விடையளித்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஐயா வீரமணி அவர்கள். “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது வினா! இந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டிய காலக்கட்டாயத்தில் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன், “தமிழ்த்தேசியவாதிகள் அல்ல, அவர்கள் தமிழ்த்தேசிய வியாதிகள்” என்று மொட்டையாக வீரமணி அவர்கள் சாடிச் சென்றதுபோல் – இன்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. தமிழ்த்தேசியம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், அவர் அகவைக்கும் அனுபவங்களுக்கும், தலைமைக்கும் உரிய பண்புடன் இப்போதும் விடை கூறவில்லை! “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக!” “இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்”. மேற்கண்ட பாணியில் திராவிட முகாமின் புதிய வரவுகள் பேசினால் புரிந்து கொள்ளலாம். எவ்வளவோ அனுபவங்களைக் கொண்ட தலைவர் இப்படிப் பேசுவது பொருத்தமன்று. மற்றபடி எந்த பாணியில் பேசலாம் என்று தேர்ந்தெடுப்பது அவர் உரிமை! “தந்தை பெரியார் கூறும் திராவிடம் என்பதும், திராவிடர் என்பதும் தந்தை பெரியாரின் கற்பனையல்ல. அது வரலாற்று ரீதியான உண்மை. வரலாறு நெடுக ஆரிய – திராவிடப் போராட்டம் நடந்துள்ளது” என்று ஆசிரியர் வீரமணி அவர்கள் அந்த விடையில் கூறுகிறார். ஆனால், “வரலாறு நெடுக நடந்ததாகச் சொல்லப்படும் ஆரிய – திராவிடப் போராட்டத்திற்கு ஒரு வரலாற்றுச் சான்றைக்கூட இதுவரை பெரியாரும் காட்டியதில்லை, அண்ணாவும் காட்டியதில்லை, “திராவிட” ஆய்வாளர்களும் காட்டியதில்லை! தமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் சங்ககாலத்திலிருந்து வரலாறு நெடுக நடந்து வந்த ஆரியர் எதிர் தமிழர் போராட்டத்திற்கான சான்றுகள் பலவற்றைக் கூறியுள்ளோம். ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரிய மன்னர்களான கனகன், விசயன் ஆகியோர் தலையில் இமயக்கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த தமிழ் வேந்தன் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டிய தமிழ்ப் பேரரசன் கரிகால்சோழன் போன்ற வரலாறுகளை நாங்கள் காட்டி வருகிறோம். ஆன்மிகத்திலும் ஆரியத்தை எதிர்த்த திருமூலர், வள்ளலார் எனப் பல வரலாற்றுச் செய்திகளைக் கூறி வருகிறோம். “திராவிடர்கள்” ஆரியர்களை எதிர்த்ததற்கு ஒரு வரலாற்றுச் செய்தியைக் கூட இதுவரை – பெரியாரியர்கள் கூறியதே இல்லை. இப்போது வீரமணி ஐயா அவர்களும் கூறவில்லை! பெரியாரும் அண்ணாவும் திராவிடர் என்பது மனுநீதியில் கூறப்பட்டுள்ளது, மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது, சனகனமண பாட்டில் கூறப்பட்டுள்ளது, உ.வே.சா. சிலைக்குக் கீழே எழுதப்பட்டுள்ளது என்றார்கள். இவை ஆரியச் சான்றுகள்! தமிழ்ச் சான்றுகள் கொடுங்கள் என்று இக்காலத் திராவிடவாதிகளிடம் நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் அவ்வாறான அகச்சான்று கொடுக்கவில்லை. தமிழர்கள் – தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதை இழிவாகக் கருதியதால் நமது சங்க கால – காப்பியக்கால – பக்திக்கால – சித்தர் கால இலக்கியங்கள் எதிலும் “திராவிடர்” என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை. விசயநகர ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் தெலுங்கு பிராமணர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோதுதான் தமிழ்நாட்டில் “திராவிட” என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. அச்சொல்லை 20ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டு அரசியலில் புகுத்திப் பிரபலப்படுத்தியவர் பெரியார். திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள்; தமிழர் என்றால் எங்களுக்கும் தமிழ் தாய்மொழி என்று கூறிக் கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே வந்து விடுவார்கள் என்று பெரியார் சொன்னார். திராவிடர்கள் என்ற பெயர் அசலாக யாருக்கு வந்தது? தென்னாட்டுப் பிராமணர்களுக்கு! இதைத் “தென்னாட்டுக் குலங்களும் குடிகளும்” என்ற தலைப்பில் கள ஆய்வு நூல் எழுதிய தர்ஸ்ட்டன், “திராவிடர்” என்பது தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே அசலாகக் குறித்த சொல் என்று குறிப்பிடுகிறார். பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் “திராவிடியன்” என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போது, தர்ஸ்ட்டனின் மேற்கோளை அப்படியே அது காட்டுகிறது (Encyclopaedia Britannica, Vol. 7, Edn. 15 – 1947). வடமேற்கே இருந்து வந்து குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய தாய்மொழிகள் பேசும் ஐந்து தாயக மண்டலங்களில் குடியேறிய பிராமணர்கள் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைக்கப்பட்டனர். இதைப் பெரியாரிய ஆதரவாளரான பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களும் ஒரு நூலில் எழுதியுள்ளார். ஆதிசங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய “சௌந்தர்ய லகரி”யில், “திராவிட சிசு” என்று 75ஆம் எண் பாடலில் கூறுகிறார். அதில் வரும் “திராவிட சிசு” என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கிறது என்றும், இல்லை ஆதிசங்கரரையே குறிக்கிறது என்றும் விளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள். இவ்விருவருமே பிராமணர்கள்! சென்னையில் “தென் கனரா திராவிட பிராமணர் சங்கம்” (The South Kanara Dravida Brahmin Association) செயல்பட்டு வருகிறது. 1953 அக்டோபரில் இச்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (காண்க : www.skdbassociation.com). இவ்வாறு ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள புதூரில் அவ்வட்டார பிராமணர்களுக்கு மட்டுமே உரிய “புதூரு திராவிட பிராமண சங்கம்” செயல்படுகிறது. (காண்க : www.pudurdravida.com). இவை மட்டுமல்லாமல், ஐதராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் தெலுங்கு பிராமணர் அமைப்பான “சிறீ கோனசீமா திராவிட சங்கம்” (காண்க : https://www.facebook.com/skds1928), தும்மங்கட்டா திராவிட பிராமணர் சங்கம் – (காண்க http://www.thummagunta.org), உடுப்பி ஸ்தனிகா திராவிட பிராமண சங்கா (Stanika Dravida Brahmana Sangha), உடுப்பி தென்கனரா காசர்கோடு திராவிட பிராமணர் சங்கம் (USKDBES) எனப் பல திராவிட பிராமண சங்கங்கள் இப்போதும் செயல்பட்டு வருகின்றன. சென்னை மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிராமணப் பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட் சாஸ்த்திரி! மட்டைப் பந்து வீரர் பெங்களூர் பிராமணரின் பெயர் இராகுல் திராவிட்! ஓர் இராகுல் திராவிட், ஒரு மணி திராவிட் சாத்திரி – இவர்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறோம் என்று குறைபட்டுக் கொள்ளக்கூடிய திராவிடவாதிகள், “திராவிட பிராமண மணமக்கள் சேவை” (Dravida Brahmins Matrimony) என்பதை இணையதளத்தில் தேடிப் பாருங்கள். (https://www.brahminmatrimony.com/brahmin-dravida-grooms, http://www.dravidamatrimony.com/brides). ஆயிரக்கணக்கான திராவிட பிராமண மணமகன் – மணமகள் பெயர்கள் “திராவிட” பின்னொட்டுடன் வந்து விழும்! தென்னாட்டுப் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய பெயர்தான் “திராவிடர்” என்று இத்தனை சான்றுகள் தருகிறோம். திராவிடர் என்பது தூய தமிழரைக் குறிக்கும் என்பதற்கு ஒரு சான்றுகூட பெரியாரியர்கள் இதுவரை காட்டியதில்லை! “தமிழர்” என்று தனித்தன்மையுள்ள இனப்பெயர் இருக்கக்கூடாது; அதைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் கலந்த கலப்பினமாகச் சித்தரிக்க வேண்டும் என்பது பெரியாரின் திட்டம்! பெரியார் தமிழினத்தில் பிறக்கவில்லை என்பதற்காக இந்த வேலையைச் செய்தார் என்று நான் கருதுகிறேன். அதேவேளை பெரியாரின் தாய்மொழி “கன்னடம்” என்பதால் அவரை அயலாராக எள்ளளவும் நானோ, எங்களின் தமிழ்த்தேசியப் பேரியக்கமோ கருதவில்லை. பெரியாரை மட்டுமல்ல, நானூறு – ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுப் போக்கில் தமிழ்நாட்டில் குடியேறி நிலைத்துவிட்ட தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களையும் அயலாராக நாங்கள் கருதவில்லை. மரபுவழித் தமிழர்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என்கிறோம். அதேபோல் பிராமண வகுப்பில் பிறந்து, பிராமணிய ஆதிக்கக் கருத்தியலை மறுத்து, சமற்கிருத – இந்தித் திணிப்புகளை எதிர்க்கின்றவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கின்றோம். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும், கல்விமொழியாகவும் தமிழை ஏற்க வேண்டும் என்பதே நாங்கள் முன்வைக்கும் நிபந்தனை! பார்ப்பனத் தூசு கூட உள்ளே நுழைய முடியாதபடி “திராவிடர் கழகம்” என்ற பெயர் சூட்டினார் பெரியார் என்று இந்த வினா விடையில் “வீரம்” பேசுகிறார் வீரமணி ஐயா! ஆனால், இவர்தாம் “பார்ப்பன” செயலலிதா அம்மையார்க்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார். திராவிடத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளில் ஒன்றான கலைஞரின் தி.மு.க. 1999இல் ஆரிய பிராமணத்துவா கட்சியான பா.ச.க.வுடன் கூட்டணி சேர்ந்து நடுவண் ஆட்சியில் பங்கு வகித்தது. தி.மு.க.வில் தலைமையின் ஏற்புடன், சாதிவாதமும் சாதி முகாம்களும் வெளிப்படையாகச் செயல்படுகின்றன. இவ்வாறு திராவிட முகாமில் “பார்ப்பனத் தூசு” அல்ல – பிராமணியச் சாக்கடையே ஓடிக் கொண்டுள்ளது! “பிராமண மாசு படிந்த சொல் தமிழர்” என்கிறீர்கள். தமிழர் என்ற சொல்லைப் பயன்படுத்தித், “தமிழர்” தலைவர் என்று வீரமணியார் போட்டுக் கொள்வது ஏன்? ஏமாளித் தமிழர்களை மட்டும் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளச் சொல்வது ஏன்? இந்த வினாவிடை வந்துள்ள இதே “விடுதலை”யில் முதல் பக்கத்தில், தலைப்புச் செய்தி – “காணொலியில் தமிழர் தலைவர் உரை!” என்று செய்தி போடப்பட்டுள்ளது. தனக்குத் “தமிழர்” தலைவர் பட்டம்! தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை! வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா? ஆசிரியர் வீரமணி அவர்கள், தேசிய இனத்திற்குக் கொடுக்கும் விளக்கம் உலக வரலாற்றாசிரியர்கள் யாரும் கூறாத விளக்கமாகும். அதே விளக்கத்தை, இக்கேள்வி கேட்ட பேராசிரியர் அருணனும் கூறியுள்ளாராம்! “தமிழன் – மொழிப்பெயர்; திராவிடன் – இனப்பெயர்” என்கிறார் ஆசிரியர். தமிழ் என்பதுதான் மொழிப்பெயர் என்று இதுவரை மொழியியல் அறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் கூறியுள்ளார்கள். ஆசிரியர் வீரமணி அவர்களோ, தமிழன் என்பது மொழிப்பெயர் என்கிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தெலுங்கர்களாக இருக்கலாம்; கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடர்களாக இருக்கலாம்; மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளிகளாக இருக்கலாம். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர்களாக இருக்கக்கூடாது! தமிழினத்திற்கு ஏன் இப்படி இரண்டகம் செய்கிறீர்கள்?தமிழர்கள் பெரியாரையும், வீரமணியாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதற்குத் தண்டனையா இது? நீங்கள் சொல்லும் திராவிடத்தில் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்கள் பெரியாரையோ, வீரமணியாரையோ தலைவராக ஏற்றுக் கொண்டதே இல்லை! தமிழர் திருநாள் என்று தமிழறிஞர்களாலும், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் வரையறுக்கப்பட்ட “பொங்கல் விழா”வை – “திராவிடர் திருநாள்” என்று சூழ்ச்சியாக மாற்றி வருகிறீர்கள்! ஓர் இனத்தின் பெயரை அழிப்பது இனப்படுகொலைக்குச் சமம்! ஐயா வீரமணி அவர்களே, கருத்துக் களத்தில் தமிழினப் படுகொலை செய்யாதீர்கள்! =====================================தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பேச: 9443918095, புலனம் : 9841949462முகநூல்

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழக பாரதீய சனதா,நாம் தமிழர் கட்சியின் அறிக்கை போர்!

காவிரி மேலாண்மை ஆணையம் சல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டதால் ஆணையம்

திரைப்படப்பாடல், திரையுலகம், பரபரப்பு செய்திகள், பாடல்கள், முதன்மை செய்திகள்

இளங்காத்து வீசுதே – Elangaathu Veesudhey

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

திரைப்படப்பாடல், திரையுலகம், பரபரப்பு செய்திகள், பாடல்கள், முதன்மை செய்திகள்

காளிதாசன் கண்ணதாசன்

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய… ஓய்ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளையதாமரை மடலே தளிருடலே அலை தழுவபூநகை புரிய இதழ் விரிய மது ஒழுகஇனிமைதான்…இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ ஆதி அந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய… ஓய்மேலும் கீழும் கண் பார்வை அபிநயம் புரியபூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்கபால்கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்கசமயம்தான்…சமயம்தான் அமைந்ததே அழைத்ததே காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

சீமான் சென்ற வருடம் சொன்னது, இன்று பலிக்கிறது!

தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் சொன்னது எதிரொலிக்கிறது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்கு சென்ற இந்தியர்கள் அந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கு பெரும் பிரச்னையை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கில் முழங்கப்பட வேண்டிய தமிழ் மந்திரங்கள்!

தஞ்சை இராசராசேச்சரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழாவை தமிழில் நடத்தும்பொருட்டு, தமிழ்நாடு அரசுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் ஐயா இறைநெறி இமயவன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள தமிழ் மந்திரங்களின் தொகுப்பு

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர்!

தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவும் மற்ற நண்பர்களும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்திருந்தோம். அவ்வழக்கில் இந்து அறநிலையத்துறையும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும் குடமுழுக்கு தமிழ் வழியிலும், சமற்கிருத வழியிலும் சம அளவில் நடத்தப்படும் என்று உறுதி கொடுத்தன. அதன்படி, பெருவுடையார் கோயிலில் சமற்கிருத மந்திரங்கள் சொல்வோரும், தமிழ் ஓதுவார்களும் வழிபாடுகள் செய்து வருகின்றனர். வழிபாட்டு மந்திரங்களும் பாடல்களும் ஓதி வருகின்றனர். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கடந்த 01.02.2020 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரையும், விழாக்குழுத் தலைவர் திரு. துரை. திருஞானம் அவர்களையும் இன்று (03.02.2020), தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்களையும், அரண்மனை தேவஸ்தான அதிகாரியையும், விழாக் குழுவினரையும் சந்தித்தோம். நானும், தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு பொருளாளர் பழ. இராசேந்திரன், வழக்கறிஞர் அ. நல்லதுரை, இறைநெறி இமயவன், ந. கிருஷ்ணக்குமார், முனைவர் துரை. செந்தில்நாதன், வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு, பி. தென்னவன், மா. இராமதாசு ஆகியோர் இதற்காகச் சென்றிருந்தோம். வேள்விச் சாலையில் (யாக சாலையில்) தமிழ் ஓதுவார்களும், சமற்கிருத சுலோகங்கள் சொல்வோரும் முறையே தமிழிலும், சமற்கிருதத்திலும் ஓதி வருகின்றனர். நடராசர் சன்னதியில் முழுக்க முழுக்க தமிழ் ஓதுவார்கள் பாடி வருகின்றனர். அதேவேளை, வேள்விச் சாலைக்குள் வேதிகை மற்றும் குண்டம் இருக்குமிடத்தில் தெய்வப் படிமங்களை காலையில் எழுந்தருளச் செய்யும் வழிபாட்டில் சமற்கிருத சுலோகங்கள் மட்டுமே சொல்லப்படுகின்றன. தமிழ் மந்திரம் ஓதப்படவில்லை. இந்தக் குறைபாட்டை விழாக்குழுத் தலைவர் அவர்களிடமும், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்களிடமும், அரண்மனை தேவஸ்தான அதிகாரியிடமும் தெரிவித்துள்ளோம். நாளையிலிருந்து வேதிகையிலும், குண்டத்திலும் தமிழ் மொழி மந்திரங்களும் சொல்ல ஏற்பாடு செய்வோம் என உறுதி கூறியிருக்கிறார்கள். அதற்கான, தமிழ் மந்திரங்களை தமிழ்ச் சான்றோர்களிடமிருந்து பெற்று, தட்டச்சு செய்து உரிய அதிகாரிகளிடமும், விழாக் குழுத் தலைவரிடமும் கொடுத்துள்ளோம். அடுத்து, பெருவுடையார் கோயில் வளாகத்திற்குள் தென்னகப் பண்பாட்டு மையம் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறது. பல்வேறு மொழிகளில் அந்நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். குடமுழுக்குக் காலமானதால், திருமுறைகள் போன்ற சிவ வழிபாட்டுப் பாடல்களையும், அதையொட்டிய கலை நிகழ்ச்சிகளையும் நடத்துமாறு தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு அறிவுறுத்த வேண்டுமென்று உரிய பொறுப்பாளர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். அடுத்து, உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டபடி கருவறை, கோயில் கலசம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் மந்திரங்கள் சொல்ல தமிழ் அர்ச்சகர்களை ஏற்பாடு செய்துள்ளோம் என்று அதிகாரிகள் கூறினார்கள். இவை அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுமாறு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் குடமுழுக்கு விழா பொறுப்பாளர்களைக் கேட்டுக் கொண்டோம். தமிழ்வழிக் குடமுழுக்கில் அக்கறையுள்ள நண்பர்கள் தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகிறதா என்று நேரில் கவனித்து அதில் குறைபாடு இருந்தால் உரிய அதிகாரிகளிடமோ, பொறுப்பாளர்களிடமோ அதிலுள்ள குறைபாடுகளைப் போக்க கோரிக்கை வைப்பது தேவையானது. அதேவேளை, நடைமுறையைச் சரி பார்க்காமல் தமிழ்வழியில் குடமுழுக்கு நடைபெறவே இல்லை என்பதுபோன்ற கருத்துகளை வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். கருவறையிலிருந்து கலசம் வரை சொல்லக்கூடிய தமிழ் மந்திரங்களை தனிச் சிறு நூலாக தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு அச்சிட்டுள்ளது. அந்த நூல்கள் குடமுழுக்கு விழாவுக்கு வரும் மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

செயலலிதாவின் தோழி சசிகலாவின் 1600 கோடி சொத்துக்கள் முடக்கமா ?

செயலலிதாவின் தோழி சசிகலா அவர்கள் தற்சமயம் பெங்களூரு சிறையில் இருக்கின்றார். அவர் மீது ரூ.1,600 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும்,

Scroll to Top