காளிதாசன் கண்ணதாசன்

காளிதாசன் கண்ணதாசன் post thumbnail image

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய… ஓய்
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
தாமரை மடலே தளிருடலே அலை தழுவ
பூநகை புரிய இதழ் விரிய மது ஒழுக
இனிமைதான்…இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

ஆதி அந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய… ஓய்
மேலும் கீழும் கண் பார்வை அபிநயம் புரிய
பூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க
பால்கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க
சமயம்தான்…சமயம்தான் அமைந்ததே அழைத்ததே

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி