ப்ரமோஸ் ஏவுகணை குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளான்.
நாக்பூரில் உள்ள ப்ரமோஸ் ஏவுகணை குழுவில் நிஷாந்த் அகர்வால் என்ற பெயரில் பணியாற்றி வந்துள்ளான்.இவன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .அந்த அமைப்பிற்கு தகவல்களும் பரிமாறி வந்துள்ளான்.
இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பிரமோஸ் குழுவிலேயே இப்படி ஒரு உளவாளி இருந்தது இந்திய பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.
இவன் கொடுத்த பெயரான நிஷாந்த் அகர்வால் உண்மையானதா என்று தெரியவில்லை.தனது பெயர் ,ஊர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் போலியாக உருவாக்கியுள்ளான்.
இவன் நான்கு வருடமாக பிரமோஸ் குழுவில் பணியாற்றி உள்ளான். இன்ஜினியராக இவன் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
நான்கு வருடமாக சிறிய சிறிய விஷயங்களை ஐஎஸ்ஐக்கு அனுப்பி உள்ளான்.இவன் தகவல்களை FaceBook மூலம் பகிர்ந்துள்ளான்.ஏற்கனவே தகவல்கள் கசிவதால் தீவிர கண்காணிப்பில் இருந்த அதிகாரிகளிடம் வசமாக மாட்டியுள்ளான் .
பிரமோஸ் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை தொழில்நுட்பம் ஆகும். இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை கொள்ளையடிப்பதற்காக உளவாளி பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி