அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??

மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??

மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ?? post thumbnail image

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் .

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விவரித்தார் .

அதில் ” எம்ஜிஆர் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவை மானியங்களை விரைந்து வழங்க வேண்டும்.

மேகதாது நீர் தேக்க திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது , காவிரியில் அணை கட்ட அது தொடர்பான மற்ற மாநிலங்களின் சம்மதத்தை பெற்றாக வேண்டும்.

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான போஸ்ட் மெட்ரிக்ஸ் திட்டத்தில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் அதே தொகையை வழங்க வசதியாக நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்,எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும்..

தமிழகத்தில் திட்டங்களின் நிலை குறித்து தெரிவித்து நிலுவை நிதியை அளிக்க வேண்டும்.மீனவர்கள் மீட்பு பணிக்கு குமரியில் நிரந்தர கடற்படைத் தளம் அமைக்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.” என்று அவர் கூறினார் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி