நியூடெல்லி:-அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் கூறும்போது, டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார். சோனியா காந்திக்கு கடந்த 2011ம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சோனியா காந்தி, தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி