இன்று வரக்கூடிய சந்திரகிரகணம் பகுதி நேர சந்திரகிரகணம். பகுதி நேர சந்திரகிரகணம் வருடத்திற்கு 3 முறையும், முழு சந்திரகிரகணம் வருடத்திற்கு ஒரு முறையும் தெரியும். இன்று வரக்கூடிய சந்திரகிரகணம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஐரோப்பியா முதலிய நாடுகளில் நன்றாக தெரியும். ஆனால் இந்தியாவில் தெரியாது. காரணம் சந்திரன் உதிக்கும் நேரத்திற்கு முன்பே சந்திரகிரகணம் முடிந்து விடுகிறது. எனவே இது வெளிநாடுகளில் தெரியும்.
சந்திரகிரகணம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரை இருக்கும். இந்தியாவில் இந்த சந்திரகிரகணம் தெரியாத காரணத்தால் தமிழ்நாட்டிலும் சந்திரகிரகணம் தெரியாது. எனவே நாங்கள் இந்த சந்திரகிரகணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
இவ்வாறு பி.அய்யம்பெருமாள் தெரிவித்தார்.ஆனால் சந்திரகிரகணம் காரணமாக இன்று கோவில்களில் வழிபாட்டு நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி