செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்ம மரணம்!…

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்ம மரணம்!…

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்ம மரணம்!… post thumbnail image
கலிபோர்னியா:-ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்மான முறையில் மரணம் அடைந்தார்.கலிபோர்னியாவின் மாரின் கவுண்டியில் உள்ள ராபின் வில்லியம்ஸ் வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வில்லியம்ஸ் தற்கொலை செய்து இருக்கலாம் என்று உள்ளூர் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காலை 11:55 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது ஒருவர் சுயநினைவற்ற மற்றும் மூச்சு இல்லாமல் வீட்டில் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவசர குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சென்ற குழு அவர் வில்லியம்ஸ் என்று கண்டுபிடித்தது. பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று மதியம் 12:02 மணிக்கு டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். என்று போலீஸ் தரப்பு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்கர் விருது பெற்ற வில்லியம்ஸ், தனது அபாரமான நகைச்சுவை நடிப்பினால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வசீகரித்தவர். ரசிகர்களை மகிழ்வித்த வில்லியம்ஸ் இறந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ராபின் வில்லியம்ஸ் சமீப காலமாக மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.63 வயதான ராபின் வில்லியம்ஸ் கடந்த 1997-ல் வெளிவந்த ‘குட் வில் ஹான்டிங்’ படத்தின் நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றவர். இந்த படத்தில் அவர் மனகோளாறுகளுக்கு சிகிச்சை தரும் நிபுணராக தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். என் கணவர் மற்றும் சிறந்த நண்பரை இன்று காலை இழந்துவிட்டேன். இந்த உலகம் அன்புக்குரிய கலைஞரையும், அன்பான மனிதரையும் இழந்துவிட்டது. என் இதயம் நொறுங்கிவிட்டது என ராபின் வில்லியம்ஸ்சின் மனைவி சூசன் ஷைனிடர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி