அரசியல்,செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…

ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…

ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!… post thumbnail image
சென்னை:-இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க. வினர் தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். கறுப்புக்கொடி போராட்டங்களும் நடந்தது.

தமிழ் திரையுலகினரும் இன்று போராட்டத்தில் குதித்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் எதிரில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர் நடிகைகள் காலை 10.30 மணிக்கு திரண்டார்கள். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் தலைமையில் டைரக்டர்களும் வந்தனர். பெப்சி தொழிலாளர்களும் கூடினார்கள்.இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட அவர்கள் முண்டியடித்தனர். போலீசார் தடுத்தனர். லயோலா கல்லூரி எதிரில் போடப்பட்ட சேமியானா பந்தலில் இலங்கைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.நடிகர்கள் சிவகுமார், விஜய், சூர்யா, சிவா, ரித்தீஷ், வையாபுரி, குண்டு கல்யாணம், தாமு, பட்டாபி, அனுமோகன், நடிகை குயிலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இப்ராகிம் ராவுத்தர், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் டி.வி. நடிகர் நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் தலைமையில் தயாரிப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்கள் அடங்கிய பேனர்கள் வைத்து இருந்தனர். தாயை வணங்குபவன் தமிழன், தாயை பழிப்பவன் சிங்களவன், தாயை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடோம் பத்து கோடி தமிழர்களின் புறநானூற்று தாய் அம்மா. குரங்கு கையில் பூமாலை கோத்தபய கையில் இலங்கை, உலகாண்ட தமிழனை அழிக்க நினைக்காதே. ஆட்டம் போடும் சிங்களனே ஓட்டம் எடு இலங்கைக்கு என்பன போன்ற வாசகங்கள் அதில் இருந்தன.போராட்டத்தை தொடர்ந்து இலங்கை துணை தூரகத்தை சுற்றி ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி