செய்திகள்,திரையுலகம் கத்தி படத்தில் விஜய்யுடன் இணைந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்!…

கத்தி படத்தில் விஜய்யுடன் இணைந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்!…

கத்தி படத்தில் விஜய்யுடன் இணைந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. இந்த படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர தயாராகிக் கொண்டிருப்பதால் வசன காட்சிகள் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், ஏற்கனவே துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து கூகுள் கூகுள் பாடலை பாடிய ஆண்ட்ரியாவை மீண்டும் அவருடன் ஒரு பாடலை பாட வைத்துள்ளார் அனிருத். செண்டிமென்ட்டுக்காக இதை செய்தாலும், இன்னொரு பாடலை ஸ்ருதிஹாசனுக்கு கொடுக்க திட்டமிட்ட அனிருத், அந்த டியூனை விஜய்யிடம் ஓ.கே செய்தபோதே, இந்த பாடலில் உங்களுடன் இணைந்து பாடப்போகிறார் ஸ்ருதிஹாசன் என்ற தகவலையும் சொல்லி விட்டாராம்.

இதையடுத்து, தெலுங்கு படப்பிடிப்புக்காக லண்டனில் முகாமிட்டிருந்த ஸ்ருதிஹாசனை தொடர்பு கொண்டு விசயத்தை கூறியிருக்கிறார் அனிருத். அதைக்கேட்டதும், எப்போது ரெக்கார்டிங் என்ற சொல்லுங்கள், நான் எங்கிருந்தாலும் சென்னைக்கு பறந்து வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம். அதனால் அந்த பாடலின் டியூனையும் அவர் பயிற்சி எடுப்பதற்காக முன்கூட்டியே அனுப்பி வைத்துவிட்டாராம் அனிருத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி