செய்திகள்,திரையுலகம் விஐபி வசூல் சாதனையை அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் இணைந்து கொண்டாடிய தனுஷ்!….

விஐபி வசூல் சாதனையை அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் இணைந்து கொண்டாடிய தனுஷ்!….

விஐபி வசூல் சாதனையை அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் இணைந்து கொண்டாடிய தனுஷ்!…. post thumbnail image
மும்பை:-நடிகர் தனுஷ் நடித்து வெளியான சமீபத்திய தமிழ் திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. முதல் நாள் காட்சியில் இந்த படம் ரூ.5.18 கோடி வசூல் செய்தது. இது தனுஷின் திரைப்பட வரலாற்றில் அதிகபட்ச வசூலாகும். இதற்காக நடிகர் தனுஷ் டுவிட்டர் வழியே தனது மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
தற்பொழுது, ஆர். பால்கியின் இயக்கத்தில் உருவாகி வரும் ஷமிதாப் இந்தி படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.

அவருடன் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார். உடன் நடிகர் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரி படம் வசூலில் செய்த சாதனையை தொடர்ந்து நடிகர் தனுஷ் அந்த வெற்றியை தன்னுடன் பணியாற்றும் ஷமிதாப் பட குழுவினருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.இந்தியில் ராஞ்சனா படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக நடித்து வரும் இந்தி படத்தின் குழுவினருடன் தனது பட வசூல் சாதனையை கொண்டாடியதை புகைப்படமாக எடுத்து வைத்துள்ளார். அதில், அவருடன், அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன், ஆர். பால்கி மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஆகியோர் உள்ளனர். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்பின், வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை ஷமிதாப் பட குழுவினருடன் கொண்டாடினேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பி.சி. ஸ்ரீராம் சார், அமிதாப் பச்சன் சார், பால்கி சார் ஆகியோருக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷின் கடந்த இரு தமிழ் படங்களும் பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தராத நிலையில், வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து அதனை ஷமிதாப் பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி