செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இந்தியிலும் வெளிவரும் கூகுல் மேப்…!

இந்தியிலும் வெளிவரும் கூகுல் மேப்…!

இந்தியிலும் வெளிவரும் கூகுல் மேப்…! post thumbnail image
ஜெய்ப்பூர்: கூகுள் நிறுவனம் தனது பூகோள வரைபட சேவையை இந்தியிலும் வழங்குகிறது. இணைய உலகின் முடிசூடா மன்னனாக திகழும் கூகுள் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் தனது கூகுள் மேப் சேவையை கொடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களை காட்டும் நேவிகேஷன் சேவையை நேற்று முதல் இந்தி மொழியிலும் கூகுள் கொண்டு வந்துள்ளது. இந்த சேவையை கம்ப்யூட்டர் மற்றும் ஆண்டிராய்டு மொபைல் பயன்படுத்துபவர்கள் பெற முடியும். இதற்காக பயனாளர்கள் தங்கள் இணையத் தொடர்பில் இந்தி மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது குறித்து, ஜெய்ப்பூரில் கூகுள்-இந்தியா நிறுவனத்தின் டைரக்டர் சுரேன் ருகேலா கூறுகையில், ‘கூகுள் மேப் சேவையை பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளோம். இந்தி மொழி மட்டும் அறிந்தவர்கள் இதனால் அதிக பயன் அடைவார்கள்’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி