செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘ஜெயம்’ ரவியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை கேத்ரீன் தெரசா…!

‘ஜெயம்’ ரவியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை கேத்ரீன் தெரசா…!

‘ஜெயம்’ ரவியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை கேத்ரீன் தெரசா…! post thumbnail image
சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், கேத்ரீன் தெரசா இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

கார்த்திக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கேத்ரீன் தெரசா. கேரளாவில் உள்ள கோட்டையத்தில் பிறந்த கேத்ரீனுக்கு வயது 23தான் ஆகிறது. கேத்ரீன் தெரசா இதுவரை மலையாளம், தெலுங்கு, தமிழ் உட்பட 11 படங்களில் நடித்துள்ளார். ‘மெட்ராஸ்’ படத்திற்கு பிறகு அடுத்தடுத்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன.’மெட்ராஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் கேத்ரீன் தற்போது அதர்வாவுடன் ‘கணிதன்’ படத்தில் நடித்து வருகிறார். அதில் இவரது பெயர் அனு.

தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடித்து வரும் படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 27வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி