July 15, 2014

செய்திகள், திரையுலகம்

நடிகை ஹன்சிகாவுக்கு எச்சரிக்கை மணி அடித்த அவரின் தாய்குலம்!…

சென்னை:-தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் எப்போதுமே பிரண்ட்ஷிப்பை மெயின்டெயின் பண்ணுபவர் ஹன்சிகா. அதற்கு அவரது தாய்குலமும் பூரண அனுமதி அளித்து விடுவார். அதனால், ஹன்சிகா தங்கள் படத்தின் நாயகி என்றால் கதாநாயகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். அந்த அளவுக்கு ஸ்பாட்டில் போரடித்தால் ஹன்சிகாவுடன் ஜாலி அரட்டையடித்து அந்த பொழுதை ஜாலியாக கழித்து விடுவார்கள். அப்படித்தான் பவர் என்ற படத்தில் ஹன்சிகா நாயகி என்றதும் சந்தோசமாக நடித்துககொண்டிருந்தார் தெலுங்கு நடிகர் ரவிதேஜா. இவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு சமீபத்தில் பல்கேரியா நாட்டுக்கு சென்று பாடல் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருநாள், இரவு நேரத்தில் ரவிதேஜாவின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாராம் ஹன்சிகா. அந்த நேரம் பார்த்து அந்த ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் சென்றதையடுத்து, ஒவ்வொரு அறையாக ரெய்டு நடத்தினார்களாம். அப்போது ரவிதேஜா-ஹன்சிகா இருவரும் ஒரே அறையில் இருப்பதைப்பார்த்து போலீசார் விசாரித்தார்களாம். இதையடுத்து படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் ஆகியோர் விரைந்து சென்று அவர்கள் ஒரே படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகை என்பதை போலீசாருக்கு விளக்கி கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றினார்களாம். இந்த சம்பவத்தினால் பெரிய அளவில் அதிர்ச்சியடைந்து போனாராம் ஹன்சிகா. அதோடு, அவரது தாய்குலமோ, இனிமேல் ஹீரோக்களுடன் ஸ்பாட்டில் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஹோட்டலில் அவர்கள் அறைக்கு சென்று பேசுவது கூடாது என்று ஹன்சிகாவுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளாராம்.

அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள்

சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

போர்ட்டலசா:-பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த அமைப்பு ‘பிரிக்ஸ்’ ஆகும். ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, பிரேசில் நாட்டில் போர்ட்டலசா நகரில் இன்று நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் அங்கு சென்றார். அவருடன் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங், நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் ஆகியோரும் சென்றுள்ளனர். அங்கு, சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பு 80 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த சந்திப்பின்போது எல்லைப்பிரச்சனைக்கு தீர்வு காண சீனாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சந்திப்பின்போது எல்லையில் அமைதியை பராமரிப்பது மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா-சீனா நட்புடன் எல்லை பிரச்சனைக்கு தீர்வுகாண்டால் இது உலகிற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்துள்ளார். மோடியையும் சீனா அந்நாட்டிற்கு வர அழைப்பு விடுத்துள்ளது. சீனா அதிபர் செப்டம்பர் மாதத்தில் இந்தியா வரலாம் என்றும் நவம்பர் மாதம் மோடி சீனா செல்லாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பா.ஜனதா அரசு பதவியேற்பு விழாவிற்கு சீன அதிகாரிகள் கலந்து கொண்டதற்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

அற்புதம் அம்மாள் வேடத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணிமா!…

சென்னை:-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரரிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம் அம்மாள் கடந்த 22 வருடங்களாக போராடி வருகிறார். இந்த போராட்டத்தை கதை களமாக கொண்டு உருவாகும் படம்தான் வாய்மை. இதில் பூர்ணிமா பாக்யராஜ் மகன் சாந்தனுவும், அவனது நண்பர்கள் பிரித்வியும் , மனோஜ் ஆகியோரும் செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை பெறுகிறார்கள். பூர்ணிமா தனி மனுஷியாக போராடி எப்படி அவர்களை மீட்கிறார் என்பதுதான் வாய்மை படத்தின் கதை. இதில் கவுண்டமணி தூக்குத் தண்டனைக்கு எதிராக பேசும் டாக்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இது நேரடியாக அற்புதம் அம்மாளின் கதையோ, பேரரிவாளன், சாந்தன், முருகன் கதையோ அல்ல அந்த சாயலில் உருவாகி இருக்கும் படம். அற்புதம் அம்மாளை மனதில் வைத்துதான் பூர்ணிமா மேடம் கேரக்டரை உருவாக்கி இருக்கிறேன். மகனின் மரண தேதியை அறிந்து துடிக்கும் ஒரு தாயின் போராட்டமாகவும், மனித நாகரீகம் வளர்ந்துவிட்ட காலத்தில் தூக்குத் தண்டனை காட்டுமிராண்டித்தனமானது என்பதை வலியுறுத்தியும் இந்தப் படத்தை எடுத்து வருகிறேன் என்கிறார் இயக்குனர் செந்தில் குமார்.

செய்திகள், திரையுலகம்

பிரபல இயக்குனர்கள் பாரதிராஜா, அகத்தியன் இணையும் திரைப்படம்!…

சென்னை:-1991ல் மாங்கல்யம் தந்துனானே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அகத்தியன். அதையடுத்து மதுமதி, வான்மதி ஆகிய படங்களை இயக்கியவருக்கு காதல் கோட்டை படம் தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் அஜீத்-தேவயானி ஜோடியாக நடித்திருநதனர். தொடர்ந்து விடுகதை, கோகுலத்தில் சீதை, காதல் கவிதை போன்ற படங்களும் அவர் இயக்கத்தில் வெளியாகின. பின்னர் அவர் இயக்கிய காதல் சாம்ராஜ்ஜியம் என்ற படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து அகத்தியனின் சினிமா பயணத்தில் தொய்வு நிலை ஏற்பட்டது. இருப்பினும் பலவித போராட்டங்களுக்கிடையே ராமகிருஷ்ணா, செல்வம் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். அந்த படங்கள் வெற்றி பெறாததால், பின்னர் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது ஒரு படத்தை இயக்கயிருக்கிறார் அகத்தியன். இந்த படத்தை டைரக்டர் பாரதிராஜா தயாரிக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதால் தற்போது கதை விவாதம் உள்ளிட்ட முதல்கட்ட வேலைகளில் தீவிரமாக நடந்து வருகிறது.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…

சென்னை:-ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி ஏரியாவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சண்டை காட்சிகளில் அவ்வப்போது சின்னச்சின்ன விபத்துக்களை சந்தித்தாலும், தான் ஒருநாள் படப்பிடிப்புக்கு லீவு போட்டாலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பல லட்சங்கள் விரயமாகி விடும் என்பதால் வலிகளையும் பொறுத்துக்கொண்டு நடித்து வருகிறார் விஷால். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காரைக்குடியில் இருந்தபோது, அங்குள்ள ஒரு கேபிள் டிவியில் சமீபத்தில் திரைக்கு வந்த பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில், ஜெய் நடித்த வடகறி ஆகிய படங்கள் ஒளிபரப்பானதை பார்த்த விஷாலுக்கு பெருத்த அதிர்ச்சியாம். இப்படி தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே கேபிள் டிவிக்களில் வந்து விட்டால் மக்கள் எப்படி தியேட்டர் பக்கம் செல்வார்கள் என்று வரிந்து கட்டியவர். உடனடியாக அந்த ஏரியா காவல் நிலையத்துக்கு சென்று புகார் செய்தாராம். அதையடுத்து சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டரை போலீசார் கடுமையாக தண்டித்தார்களாம்.விஷாலின் இந்த முயற்சியை கேள்விப்பட்ட கோலிவுட்டின் தயாரிப்பாளர்கள் அவருக்கு போன் போட்டு பாராட்டினார்களாம்.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!…

சென்னை:-சிறந்த நடிகர், நடிகைகளுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ‘ராஜாராணி’ படத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெற்றார். சிறந்த நடிகருக்கான விருதை ‘மரியான்’ படத்தில் நடித்த தனுஷ் பெற்றார். இதுபோல் ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வாவும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். ‘கடல்’ படத்தில் நடித்த கௌதம் கார்த்திக்கும், ‘நேரம்’ படத்தில் நடித்த நவீன் பாலியும் சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதுகளை பெற்றனர்.சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை நஸ்ரியா பெற்றார். ‘நேரம்’ படத்தில் நடித்ததற்காக இவ்விருது கிடைத்தது.’ராஜாராணி’யில் நடித்த சத்யராஜ், ‘பரதேசி’யில் நடித்த தன்சிகாவுக்கும் விருதுகள் கிடைத்தன. சிறந்த இயக்குனருக்கான விருதை பாலா பெற்றார். ‘பரதேசி’ படத்துக்காக இவ்விருது கிடைத்தது. சிறந்த படத்துக்கான விருது ‘தங்கமீன்கள்’ படத்துக்கு கிடைத்தது. ‘கடல்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ராஜீவ்மேனன் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெற்றார்.ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. ‘மரியான்’ படத்தில் இசையமைத்ததற்காக இவ்விருதை பெற்றார்.’தங்க மீன்கள்’ படத்தில் ஆனந்தயாழை மீட்டுகிறாய் பாடலை எழுதிய நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார்.இந்த பாடலை பாடிய ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.

செய்திகள்

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!…

மெக்சிகோ:-மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் உள்ள சான் பெட்ரோ ஹம்லூல நகர மேயர் ஜோயல் வாஸ்க்வெஸ் ரோஜஸ் இவர் முதலையை திருமணம் செய்து கொண்டார். இதற்கான திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதலைக்கு வெள்ளை கவுன் அணிவித்து கொண்டுவரபட்டது. அங்கு எல்லோர் முன்னிலையிலும் மணமகன் முதலையுடன் உள்ளூர் மக்கள் முன் நடனமாடினார். இது குறித்து உள்ளூரை சேர்ந்த ஒருவர் கூறும் போது, இது உள்ளூர் பாரம்பரிய வழக்கமாகும். உள்ளூர் மீனவர்களுக்கு பசிபிக் கடலில் மீன்கள் நிறைய கிடைக்க இத்தகைய திருமணத்தை மேயர் நடத்தி உள்ளார். இது எங்கள் முன்னோர்களால் விட்டு செல்லப்பட்ட அரிய பொக்கிஷமாகும்.இந்த இளம் தமபதிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.விழாவில் நடனமும் வான வேடிக்கையும் நடைபெற்றது.

செய்திகள், பொருளாதாரம், முதன்மை செய்திகள்

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 2 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!…

புதுடெல்லி:-டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி பஸ்சில் இருந்து தூக்கி வீசியது. உயிருக்குப் போராடிய அந்த மாணவி 29ம்தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாணவியை ஓடும் பஸ்சில் கொடூரமாக கற்பழித்து கொலை செய்த நபர்கள் 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. இதனை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான். இந்நிலையில் தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளான அக்சய் தாக்கூர், வினய் சர்மா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது.

செய்திகள், முதன்மை செய்திகள், விளையாட்டு

மரடோனாவின் முன்னாள் காதலிக்கு கைது வாரண்ட்!…

துபாய்:-அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவானான டீகோ மரடோனாவின்(53) தனிப்பட்ட வாழ்க்கை நாடகத்தை ஒத்த திருப்பங்களைக் கொண்டது. இதன் சமீபத்திய திருப்பமாக விளையாட்டை மேம்படுத்துவதற்கான சிறப்புத் தூதுவராக தன்னை நியமித்திருந்த துபாய்க்கு கடந்த மாதம் சென்ற அவர் அங்கு தன்னுடன் வாழ்ந்த முன்னாள் காதலியான ரோகியோ ஒலிவா(22) மீது திருட்டு புகார் ஒன்றினை அளித்தார். இந்த புகாரில் ஒலிவா தன்னிடமிருந்து கைக்கடிகாரங்கள், வைர காதணிகள் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதியன்று ஒலிவா மீது கைது வாரன்ட் ஒன்றை துபாய் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படுவதற்காக அவரை துபாய்க்கு திரும்ப கொண்டுவர வேண்டுமென்று இண்டர்போல் உதவியை நாடியுள்ளதாக அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். மரடோனாவைப் போலவே கால்பந்து வீராங்கனையான ஒலிவா தற்போது அர்ஜென்டினாவில் தான் உள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அவர் மரடோனா தன்னைத் தாக்கியதாகக் கூறுகின்றார்.ஆனால் இருவரும் கடந்த மாதம் பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஒன்றாகக் காணப்பட்டதாகவும், அவர்களுக்கிடையே நடைபெற்ற சமரச முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

செய்திகள், திரையுலகம்

டான் ஆப் த ஏப்ஸ் (2014) திரை விமர்சனம்…

குரங்குகளை வைத்து பரிசோதனை செய்வதற்கான கிருமிகள் வெளியே பரவி உலகிலுள்ள மனித இனமே அழியும் சூழ்நிலை உருவாகிறது. இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்கள் மட்டும் உயிர் பிழைக்கின்றனர். இவர்கள் கலிபோர்னியாவின் சிதைந்த நகரத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் அத்தியாவசிய தேவைக்கு மின்சாரம் அவசியம் தேவைப்படுவதால், காட்டுக்குள் சேதமடைந்த அணைக்கட்டில் இருக்கும் நீர்மின்சக்தி இயந்திரத்தை இயக்கிவிட்டால் சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். நகரத்துக்குள் இருந்து காட்டுக்கள் தனது சகாக்களுடன் வந்த சீசர் குரங்கு, மனைவி, மகன் என தனது சகாக்களுடன் சந்தோஷமாக வேட்டையாடி, வாழ்ந்து வருகிறது. அந்த குரங்குகள் கூட்டத்துக்கே சீசர் தான் தலைவனாக திகழ்கிறது. மனித இனமே அழிந்துவிட்டது என்று நினைத்து அவர்கள் உயிர் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், அணைக்கட்டை பார்வையிட காட்டுக்குள் வரும் மனிதர்களை கண்டு ஆச்சர்யப்படுகிறது சீசரின் கூட்டம். அவர்களை சுற்றி வளைத்து, இனிமேல் காட்டுக்குள் வரக்கூடாது என எச்சரித்து விட்டு விடுகிறது சீசர். ஆனாலும், அவர்களை ரகசியமாக கண்காணிக்கவும் உத்தரவிடுகிறது. அதன்படி, அதே கூட்டத்தில் சீசரின் நம்பிக்கைக்கு பாத்திரமான கூபா என்ற குரங்கு, அவர்கள் பின்னால் தொடர்ந்து நகரத்துக்குள் சென்று அவர்களை ரகசியமாக கண்காணிக்கிறது. காட்டுக்குள் திரும்பிய கூபா நகரத்துக்குள் மனிதர்கள் வசித்து வருகிறார்கள் என்று கூறுகிறது. உடனே சீசர் தன்னுடைய கூட்டத்துடன் நகரத்துக்கு சென்று மனிதர்களை மீண்டும் காட்டுக்குள் வரக்கூடாது என எச்சரித்து விட்டு வருகிறது. இருந்தாலும், தங்களது அத்தியாவசிய தேவைக்கு மின்சாரம் தேவைப்படுவதால், மனித குரங்குகள் மீது போரிட்டு அந்த அணையை கைப்பற்றலாம் என முடிவெடுக்கிறார் அந்த நகரத்தின் தலைவர். ஆனால், அவருடன் இருக்கும் ஜேசனோ தான் அந்த குரங்குகளின் தலைவரான சீசருடன் சுமூகமாக பேசி தீர்வு காண்கிறேன் என்று சொல்கிறார். அதற்காக மூன்று நாட்கள் தவணை கேட்டுவிட்டு காட்டுக்குள் போகிறார்.காட்டுக்குள் சென்று சீசருடன் சமரசம் பேசுகிறார். சீசரோ நாம் இதற்கு மறுப்பு தெரிவித்தால் மனிதர்கள் நம் மீது போர் தொடுக்கக் கூடும். அதனால் பல உயிர்களை இழக்கக்கூடும் என்ற எண்ணத்தில் இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடிவெடுக்கிறது. ஆனால், சீசரின் நண்பனான கூபாவுக்கோ இதில் துளியும் விருப்பமில்லை. சீசரோ துப்பாக்கிகளை எங்களிடம் கொடுத்துவிட்டு, அணையில் பணிகளை மேற்கொள்ள சொல்கிறது.அதன்படி, இவர்களும் துப்பாக்கிகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அணையில் பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு சீசரின் சகாக்களும் உதவி செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் ஜேசனின் கூட்டாளி ஒருவர் ஒரு துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பது அவர்களுக்கு தெரிய வர அவர்களை காட்டைவிட்டு வெளியேற உத்தரவிடுகிறது சீசர். இதற்கிடையில், குரங்குகள் அணையில் பணிகளை மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்காவிட்டால், அவர்கள் மீது படையெடுக்க நகரத்தை சேர்ந்தவர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக, ஆயுதக் கிடங்கில் இருக்கும் துப்பாக்கிகளை சோதித்து பார்க்கின்றனர். இதை ரகசியமாக கண்காணிக்கும் கூபா, அவர்கள் நம் மீது போர் தொடுக்க தயாராகி வருகின்றனர் என்று தவறாக நினைத்துக் கொள்கிறது. இதனை, சீசரிடம் வந்து கூபா சொல்ல, அதனை சீசர் நம்ப மறுக்கிறது.இறுதியில், குரங்குகள் மின்சாரத்தை எடுக்க சம்மதம் தெரிவித்ததா? கூபா சொன்னது போல் மனிதர்கள் அவர்கள் மீது படையெடுத்தார்களா? அல்லது குரங்குகள் மனிதர்கள் மீது படையெடுத்தனவா? என்பதே மீதிக்கதை.மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் குரங்குகளை மிகவும் தத்ரூபமாக உருவாக்கியிருக்கிறார்கள். இவைகள் சண்டை போடும் காட்சிகள் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மனிதர்களைப் போலவே குரங்குகளும் குதிரைகளில் ஏறி வலம் வருவது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. அதே போல், நகரமும், காடுகளும் பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறது. ஒவ்வொன்றும் பிரம்மாண்டாக தெரிந்தாலும், படம் ஏனோ விறுவிறுப்பாக செல்ல மறுக்கிறது. குரங்குகளை அதன் பாஷையிலேயே பேச வைத்திருப்பது அருமை. மொத்தத்தில் டான் ஆப் த ஏப்ஸ் தொழில்நுட்பம்……….

Scroll to Top