செய்திகள் முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!…

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!…

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!… post thumbnail image
மெக்சிகோ:-மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் உள்ள சான் பெட்ரோ ஹம்லூல நகர மேயர் ஜோயல் வாஸ்க்வெஸ் ரோஜஸ் இவர் முதலையை திருமணம் செய்து கொண்டார். இதற்கான திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதலைக்கு வெள்ளை கவுன் அணிவித்து கொண்டுவரபட்டது. அங்கு எல்லோர் முன்னிலையிலும் மணமகன் முதலையுடன் உள்ளூர் மக்கள் முன் நடனமாடினார்.

இது குறித்து உள்ளூரை சேர்ந்த ஒருவர் கூறும் போது, இது உள்ளூர் பாரம்பரிய வழக்கமாகும். உள்ளூர் மீனவர்களுக்கு பசிபிக் கடலில் மீன்கள் நிறைய கிடைக்க இத்தகைய திருமணத்தை மேயர் நடத்தி உள்ளார். இது எங்கள் முன்னோர்களால் விட்டு செல்லப்பட்ட அரிய பொக்கிஷமாகும்.இந்த இளம் தமபதிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.விழாவில் நடனமும் வான வேடிக்கையும் நடைபெற்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி