July 15, 2014

செய்திகள், திரையுலகம்

விமர்சகர்களை ‘நாய்’ என்று திட்டும் பிரபல இயக்குனர்!…

மும்பை:-இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ‘ஐஸ் க்ரீம்’ என்ற தெலுங்குப் படம் வெளிவந்தது. ஏற்கெனவே பத்திரிகையாளர்களை ஒரு விழாவில் அவமரியாதையாகப் பேசிய வர்மா, இப்போது அவருடைய படத்திற்கு எதிர்மறையான விமர்சனம் வந்துள்ளதால் விமர்சனம் எழுதுபவர்களை ‘நாய்’ என்றெல்லாம் கேவலமாக எழுதி பத்திரிகையாளர்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாகியுள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கி கடைசியாக வெளிவந்த சில படங்களைப் போலவே ‘ஐஸ் க்ரீம்’ படத்திற்கும் மிகப் பெரிய வரவேற்பு இல்லையாம். அதோடு, வெளிவந்த விமர்சனங்களும் படத்தைக் கடுமையாகக் குறை கூறியிருந்ததால் ராம் கோபால் வர்மா வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். அதைத் தொடர்ந்து அவருடைய சமூக வலைத்தளத்தில் விமர்சகர்களைக் குறை கூறியிருக்கிறார்.என் படத்திற்கு விமர்சனம் எழுதியவர்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். அவர்கள் என்னுடன் வெளிப்படையான விவாதம் ஒன்றில் பங்கேற்க வருவார்களா ?. பெரும்பாலான விமர்சகர்களுக்கு ஒரு காமிராவின் தலை முதல் கால் வரை எதுவுமே தெரியாது. அப்படி என்னுடன் யாரும் விவாதத்தில் ஈடுபட வரவில்லையென்றால், அவர்கள் இருட்டுக்குள் உட்கார்ந்து கொண்டும் குறைக்கும் நாய்கள் போன்றவர்கள்தான். ஒரு படத்தை விமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. ஐஸ் க்ரீம் படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும் போது படம்வெளியான முதல் நாளன்றே லாபத்தை சம்பாதித்துவிட்டது.இந்தப் படத்தில் ‘ஃபிளோ கேம், ஃபிளோ சவுன்ட்’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளேன். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பங்களால் மாற்று சினிமா உருவாக வாய்ப்புள்ளது. ஒரே ஒரு அரங்கில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்துள்ளேன். இந்த படத்தின் முதல் நாள் வசூலைப் பார்த்து விமர்சகர்கள் பொறமைப்பட்டுவிட்டனர்எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகள், திரையுலகம்

தெலுங்கு படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யாவின் படங்களுக்கு ஆந்திராவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இங்கு சுமாராக போன படங்கள் கூட தெலுங்கில் மிகுந்த வரவேற்பை பெருகின்றன. இதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் சூர்யாவை நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். இதற்கு சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டார். விரைவில் அவர் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும். இதுகுறித்து சூர்யா கூறியிருப்பதாவது: தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது அந்த மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன். என்னுடைய படங்களுக்கு அவர்கள் அளித்து வரும் ஆதரவு மகத்தானது. எனது டப்பிங் படங்களை நேரடி படங்கள் போன்று ரசித்துப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நேரடியாக ஒரு படம் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. ஓகே சொல்லிவிட்டேன். ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் சூர்யா.

செய்திகள், திரையுலகம்

காதலில் விழுந்தார் நடிகை ரெஜினா!…

சென்னை:-‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் நடிகை ரெஜினா. அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் அப்படியே ஆந்திரா பக்கம் தாவி விட்டார். அங்கு செம கிளாமராக நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். அதோடு சமீபத்தில் அவர் நாயகியாக நடித்து வெளிவந்த ‘ரா ரா கிருஷ்ணய்யா’ படத்தில் நாயகன் சந்தீப்புடன் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த முத்தக் காட்சிக்காகவும் இருவருக்குமிடையேயான ‘லக் கெமிஸ்ட்ரி’யும் ஆந்திர இளைஞர்களைக் கவர்ந்து விட்டதாம்.கிளாமராகவும் நடிக்கத் தயார், முத்தக் காட்சியிலும் நடிக்கத் தயார் என திரையுலகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு ரெஜினா நடந்து கொள்வதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து தற்போது நான்கு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் ரெஜினாவுக்கும், சந்தீப்புக்கும் திரையில் இருந்த காதல் கெமிஸ்ட்ரி இப்போது நிஜ வாழ்விலும் பற்றிக் கொண்டதாம். இருவரும் தீவிரமாகக் காதலித்து வருகிறார்கள் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

செய்திகள்

இறந்ததாக கூறப்பட்ட 3 வயது குழந்தை இறுதி சடங்கின்போது கண் விழித்ததால் பரபரப்பு!…

மணிலா:-பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பயபாஸ் பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி கடுமையான காய்ச்சலுக்குள்ளானாள். அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த வெள்ளிக்கிழமை சிக்கிச்சைக்க்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதனையடுத்து, அந்த சிறுமியின் பிரேதத்தை கண்ணீருடன் வீட்டுக்கு எடுத்து வந்த பெற்றோர், இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அருகாமையில் உள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் இறந்த சிறுமியின் ஆன்மா சாந்தியடைய ஜெபக் கூட்டம் நடந்த போது, சவ அடக்கம் செய்யும் ஊழியர் ஒருவர், சவப்பெட்டியின் மூடியை திறந்தார்.அப்போது, அந்த சிறுமியின் தலை லேசாக திரும்பியது. மெதுவாக கண் விழித்து, மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். இந்த அதிசயத்தை கண்டு நெகிழ்ந்துப் போன அவர், உடனடியாக சிறுமியின் தந்தையை அழைத்து இந்த நல்ல சேதியை தெரிவித்தார். உடனடியாக, அன்பு மகளை சவப்பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, மார்போடு அணைத்தபடி ஆனந்தக் கண்ணீர் வடித்த தந்தை, அருகாமையில் உள்ள வேறொரு நவீன ஆஸ்பத்திரியில் அவளை அனுமதித்தார்.தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமி, காய்ச்சலின் வீர்யத்தால் ‘கோமாட்டோஸ்’ என்னும் மயக்க நிலைக்கு சென்று விட்டதாகவும், இதை புரிந்துக் கொள்ளாத டாக்டர் அவள் இறந்துப் போய் விட்டதாக தெரிவித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

‘மஞ்சப்பை’ பட இயக்குனருக்கு ஐந்து லட்சம் அன்பளிப்பு!…

சென்னை:-இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘மஞ்சப்பை‘ இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அது மட்டுமல்ல படம் தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வதற்கான உரிமை பல லட்சங்களுக்கு விலை போயுள்ளது. ஆனால், வழக்கம் போலவே முதல் பட இயக்குனர் என்பதால் தயாரிப்பாளர் சற்குணம் இயக்குனர் ராகவனுக்கு மிகவும் குறைவான சம்பளத்தையே வழங்கினாராம். படத்தை வாங்கி வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய்களை லாபமாகப் பார்த்துள்ளது.இயக்குனர் ராகவனுக்குப் பெரிதாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதை அறிந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி அவரை அழைத்து ஐந்து லட்சம் ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தாராம். ‘மஞ்சப்பை’ படம் ஏறக்குறைய 9 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அப்படியிருக்க இயக்குனருக்கு வெறும் ஐந்து லட்சம் மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இயக்குனர் ராகவன் இதை அன்பளிப்பாகக் கருதாமல் அடுத்த படத்திற்கான அட்வான்ஸாகத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி வருகிறாராம்.

செய்திகள், திரையுலகம்

காதல் திருமணம் செய்ய விரும்பும் நடிகை தமன்னா!…

சென்னை:-இன்றைய ஹீரோயின்கள் பலரும் மனதுக்குப் பிடித்தவரைக் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வார்கள். தற்போது அந்த வரிசையில் நடிகை தமன்னாவும் இடம் பெற்றுள்ளார்.என்னைக்காவது ஒரு நாள் நானும் திருமணம் செய்து கொள்வேன். ஆனால், அது கண்டிப்பா காதல் கல்யாணமாதான் இருக்கும். மனசுக்குப் பிடிச்ச ஒருத்தரைக் காதலிச்சி, அப்பா, அம்மா சம்மதத்தோடத்தான் அந்த திருமணம் நடக்கும். அவங்க சம்மதம் இல்லாம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஆனால், இந்த காதல், கல்யாணம் இதுக்கெல்லாம் இன்னும் ரொம்ப நாளாகும், என்று சொல்லியிருக்கிறார்.தமிழில் எந்த புதுப்படத்திலும் நடிக்கவில்லையென்றாலும், ஹிந்தியில் அக்ஷய் குமார் ஜோடியாக தமன்னா நடித்துள்ள ‘இட்ஸ் என்டர்டெயின்மென்ட்’ படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது.

செய்திகள்

போதையில் மாணவர்களுடன் ஆபாச நடனம் ஆடிய பள்ளி ஆசிரியை!…

புளோரிடா:-அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள புளோரிடா கீ மேன் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாகவும், ஸ்பாட்பால் பயிற்சியாளராகவும் இருக்கும் கவ்ர்ட்னி ஸ்பெருல் என்ற ஆசிரியை கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி முடியும் கடைசி நாளில் மாணவர்களை கடற்கரை ஒன்றிற்கு அழைத்து சென்று பார்ட்டி ஒன்று வைத்துள்ளார். அந்த பார்ட்டியில் அவர் மது அருந்தி உள்ளாடை மட்டும் அணிந்து மாணவர்கள் முன் ஆபாச நடனம் ஆடியுள்ளார். இந்த சம்பவம் தற்போது மாணவன் ஒருவனின் மூலம் வெளியே தெரிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேபரே டான்ஸ் ஆடும் ஆசிரியையை மாணவன் ஒருவன் வீடியோ எடுத்து உள்ளான்.பள்ளி நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து விசாரணை செய்து ஆசிரியை 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த ஆபாச நடன நிகழ்ச்சியை கேள்விப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்து ஆசிரியைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செய்திகள், திரையுலகம்

நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணையும் விஜய்!…

சென்னை:-கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இப்படம் இவருக்கு நல்ல வெற்றியை தந்தாலும் ஒரு நிலையான இடத்திற்காக போராடிக்கொண்டிருந்தார்.இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் ரிலிஸான அரிமாநம்பி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தது மட்டுமின்றி, நல்ல வசூலையும் செய்தது. அடுத்து இவர் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தை ‘ராடன்’ நிறுவனம் சார்பாக ராதிகா தயாரிக்கிறார். இதில் இவரது ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா பணியாற்றயிருக்கின்றனர். இது காதல் கதையம்சம் கொண்ட கதையாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

சுதந்திர தினத்தில் வெளியாகும் சிங்கம் ரிட்டர்ன்ஸ்!…

மும்பை:-ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டான சிங்கம், இந்தியில் அதே பெயரில் 2011ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து அதே ஹரி, சூர்யா காமினேஷனில் வெளிவந்து ஹிட்டான சிங்கம் 2 இப்போது இந்தியில் சிங்கம் ரிட்டர்ன் என்ற பெரியல் ரீமேக் ஆகிறது. இதில் அஜய்தேவ்கான், கரீனா கபூர் நடித்து வருகிறார்கள். ரோகித் ஷெட்டி இயக்குகிறார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடபட்டு லைக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறது. படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். காக்கி சீருடை அணிந்தவர்களைப்போல பொதுமக்களும் தேச பற்றுடன் நடந்து கொண்டால் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக பொருள். சிங்கம் ரிட்டன்ஸ் டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அஜய் தேவ்கன் டுவிட்டரில் எழுதியிருக்கிறார்.

செய்திகள், முதன்மை செய்திகள், விளையாட்டு

கேப்டன் பதவியிலிருந்து டோனி விலக வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கருத்து!…

பெங்களூர்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் சமீபத்தில் முடிந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.இந்நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன்சேப்பல் கூறியுள்ளார்.பெங்களூர் வந்து இருந்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:– டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை நிச்சயமாக டோனி சிறந்த கேப்டன் இல்லை. 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு மட்டுமே அவர் சிறந்த கேப்டன்.இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பயணத்தில் அனைத்து டெஸ்டிலும் தோற்ற பிறகு அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் நீடித்து இருப்பது ஆச்சரியமே. ஆஸ்திரேலியாவில் இப்படி நடந்து இருந்தால் கேப்டன் உடனடியாக நீக்கப்பட்டு இருப்பார். இந்திய அணி தலைமைக்கு புதிய ரத்தம் தேவை. டெஸ்ட் கேப்டன் பதவிக்கு வீராட் கோலியே தற்போது பொருத்தமானவர். அவருக்கு வழிவிடும் வகையில் டோனி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய தேர்வுக் குழுவினர் கடுமையான முடிவு எடுக்க வேண்டும். கோலிக்கு தற்போது 27 வயது தான் ஆகிறது. அவரால் 4 அல்லது 5 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட முடியும்.இவ்வாறு இயன்சேப்பல் கூறியுள்ளார்.

Scroll to Top