ஐதராபாத்:-ஐதராபாத் ஷாமிர்பேட் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் இரவு நேர மது விருந்து நடப்பதாக சைபராபாத் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஷாமிர்பேட்டில் உள்ள துர்காபள்ளி பகுதியில் இருக்கும் அந்த கோழிப்பண்ணைக்குள் சென்று பார்த்த போது, அதிகாலை நேரத்தில் சுமார் 26 பேர் அளவுக்கதிகமான போதையுடன், ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தவர்களை கைது செய்தனர்.
இதில் பெண்கள் 12 பேரும் அடங்குவர் என்று தெரிவித்த ஷாமிர்பேட் காவல்நிலைய ஆய்வாளரான டி.என்.பாப்ஜி, அதில் 3 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட 14 ஆண்களும் ஐதராபாத்தை சுற்றியுள்ள தொழில் அதிபர்கள் என்று கருதப்படுகிறது. இந்த விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ரஞ்சன் என்பவர் தப்பியோடிவிட்டார். ஆனால் அவரது பெண் கூட்டாளி 12 பெண்களில் ஒருவராக கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து 2 லட்ச ரூபாய் பணம், செல்போன்கள் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள், மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக பாப்ஜி மேலும் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி