திருப்பதி :- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் புனிதமாக கருதி வாங்குவது லட்டு பிரசாதம். ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுவது உண்டு.
ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் 4 பேர் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில் நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்களது டிக்கெட்டுக்கு 4 லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
அதில் ஒன்றை எடுத்து சாப்பிட பிரித்த போது லட்டுக்குள் பெரிய கல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புனிதமாக கருதி சாப்பிட இருந்த பிரசாதத்தில் கல் கிடந்ததால் அவர்கள் மனவேதனை அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஏற்கனவே லட்டு பிரசாதத்தில் இரும்பு நட்டு, போல்டு கிடப்பதாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் பிரசாதத்தில் கல் கிடந்ததாக வந்த புகார் தேவஸ்தான அதிகாரிகளுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி