நகரியை அடுத்த சத்திரவாடாவில் நேற்று மதியம் நடிகை ரோஜா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெயில் ‘சுள்’ளென்று அடித்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்தப்பகுதியில் வீடு வீடாக நடந்து சென்ற அவர், கட்சிச்சின்னமான ‘மின்விசிறி’க்கு ஓட்டளிக்குமாறு வாக்காளர்களை கேட்டார்.அப்போது ரோஜா திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கட்சி தொண்டர்கள், அருகில் உள்ள வீட்டுக்குள் தூக்கிச்சென்று படுக்க வைத்தனர். டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.விரைந்து சென்ற மருத்துவ குழுவினர், ரோஜா உடல்நிலையை பரிசோதித்தனர்.
வெயில் உஷ்ணம், உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக மயங்கி விழுந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அங்கேயே அவருக்கு 2 பாட்டில் ‘குளுகோஸ்’ ஏற்றப்பட்டது.தொடர்ந்து அவர் 2 மணி நேரம் ஓய்வு எடுத்தார். அதற்குப்பின் ரோஜா உடல்நலம் தேறினார். கட்சி நிர்வாகிகள் அவரை ஓய்வு எடுக்குமாறு ஆலோசனை கூறினர்.ஆனால் ரோஜா அதற்கு மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து அங்கிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று ‘மின்விசிறி’ சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி