February 18, 2014

செய்திகள், திரையுலகம்

கமல்ஹாசனின் மருதநாயகத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார் ?…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் Fox Star Studios இணைந்து தயாரித்த ‘குக்கூ‘ படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன், சூர்யா, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கேயார் பேசும்போது Fox Star Studios போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் முதலீடு செய்வது உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் சினிமா மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமின்றி உலக அளவில் வியாபாரம் ஆகக்கூடியது.கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் போன்ற படத்தை Fox Star Studios நிறுவனம் நினைத்தால் கண்டிப்பாக திரைக்கு கொண்டுவரலாம். அதற்கு அந்த நிறுவனமும், கமல்ஹாசனும் முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். கேயார் சொன்ன யோசனையை தாம் பரிசீலிப்பதாக Fox Star Studios நிர்வாக இயக்குனர் கூறியதாகவும் தெரிகிறது. எனவே மருதநாயகம் குறித்த முறையான அறிவிப்பை கமல்ஹாசன் ரசிகர்கள் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் கடந்த 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் முன்னிலையில் பூஜை போடப்பட்டது. ஒருசில காட்சிகளும், எடுக்கப்பட்டு டிரைலரும் வெளியிடப்பட்டது. ஆனால் படத்தின் இமாலய பட்ஜெட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கண்டிப்பாக கமல் மனது வைத்தால் மருதநாயகம் வெளிவரும் என விழாவுக்கு வந்த அனைவரும் கூறினர்.

செய்திகள், திரையுலகம்

‘அஞ்சான்’ படத்தில் சமந்தாவின் பெயர் ‘ஜீவா’!…

மும்பை:-சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.தமிழில் ஒரே சமயத்தில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்கிறார். இதில் ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சமந்தா கேரக்டரின் பெயர் வெளியாகியுள்ளது. அவர், படத்தில் ஜீவா கேரக்டரில் வருகிறாராம். அஞ்சான்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன் கூட பணியாற்றிவர் மறைந்த ஒளிப்பாதிவாளர் ஜீவா.அவரது நினைவாகதான் சமந்தாவுக்கு இந்தப் படத்தில் ஜீவா என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

செய்திகள், திரையுலகம்

‘கோலி சோடா’ பட நடிகை மீது தாக்குதல்!…

சென்னை:-திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகள் ரேணு (20). இவர் அண்மையில் வெளியான ‘கோலிசோடா‘ திரைப்படம் மற்றும் “உதிரிபூக்கள்’, “அழகி’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர். ரேணு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே சொத்து பிரச்னை உள்ளதாம்.இந்த பிரச்னையின் விளைவாக எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் ரேணு குடும்பத்தினரை வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.ஞாயிற்றுக் கிழமையும் அங்கு வந்த எதிர் தரப்பினர், வீட்டை உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி ரேணு குடும்பத்தினரிடம் தகராறு செய்ததோடு, ரேணுவையும் அவரது தந்தையையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ரேணு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்வதற்காக ரேணு திங்கள்கிழமை வந்தார்.அங்கிருந்த அதிகாரிகள், திருவல்லிக்கேணி துணை ஆணையரிடம் புகார் தெரிவிக்குமாறு ரேணுவை அனுப்பி வைத்தனர்.

செய்திகள், திரையுலகம்

நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி ‘ரஜினி’ ஒருவருக்கே உண்டு… இயக்குனர் பேட்டி…

சென்னை:-கஹானி தமிழ் ரீமேக் படமான ‘ நீ எங்கே என் அன்பே‘ படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சேகர் கம்முலா, ஒரு நாட்டின் அரசியல் தலையெழுத்தை மாற்றும் சக்தி கொண்ட ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான் என்று கூறினார். கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டாகிய லீடர் திரைப்படத்தின் கதையை எழுதும்போது தான் ரஜினியை மனதில் வைத்தே எழுதியதாகவும், அதை ரஜினி நடிக்க சம்மதித்தால் மட்டுமே தமிழில் இயக்க விரும்புவதாகவும் கூறினார். லீடர் கேரக்டரில் ரஜினியை தவிர வேறு எந்த நடிகர் நடித்தாலும், படம் சொதப்பிவிடும் என்று கூறிய சேகர், ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதக்கூடிய சக்தியுள்ள ஒரே நடிகர் ரஜினிதான் என்று புகழாரம் சூட்டினார். லீடர் படத்தின் தமிழ் ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதாகவும், அதை தெலுங்கில் தயாரித்த ஏ.வி.எம் சரவணன் சாரிடம் காண்பித்தபோது அதை பார்த்து பாராட்டியதாகவும், இதுகுறித்து தான் ரஜினியிடம் பேசுவதாகவும் கூறினார். தெலுங்கு லீடர் படத்தில் ராணா, ரிச்சா கங்கோபத்யா, ப்ரியா ஆனந்த், சுஹாசினி, கோட்டா சீனிவாசராவ் ஆகியோர் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள்

தமிழகத்தில் ரத்ததானம் செய்து உலக சாதனை!…

சென்னை:-முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் 14-ந் தேதியன்று சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மாபெரும் ரத்ததான முகாம்கள் நடைபெற்றன. இதில் உலக கின்னஸ் சாதனையாக 53 ஆயிரத்து 129 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இதற்கு முன்பு, 2010-ம் ஆண்டு இந்தியாவின் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 43 ஆயிரத்து 732 பேர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ததே கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்தது.தற்போது, 53 ஆயிரத்து 129 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ததால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த கின்னஸ் உலக சாதனையை அங்கீகரிக்கும் வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், கின்னஸ் அமைப்பு பிரதிநிதி லுசியா சந்தித்து, கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். அப்போது உரையாற்றிய லுசியா கூறியதாவது:- இந்த சாதனைச் சான்றிதழை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்குவதில் பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன். இந்த ரத்ததான முகாமில் 53 ஆயிரத்து 129 பேர் பங்கேற்றது, ஒரு சாதனை நிகழ்வாக அமைந்துள்ளது.இத்தனை பெரிய நிகழ்ச்சியை திறமையாக ஒருங்கிணைத்து நடத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டுகிறேன். தமிழகத்தின் அனைத்துப் பாகத்தில் இருந்தும் ரத்ததானம் செய்ய மக்கள் வராதிருந்தால், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்காது. இந்த முகாம் மூலம் 18 ஆயிரத்து 439.28 லிட்டர் ரத்தம் பெறப்பட்டுள்ளது. அநேக மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.

செய்திகள், திரையுலகம்

சூர்யாவை ஜென்டில்மேன் என புகழும் சமந்தா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்‘ படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார் சமந்தா.இது குறித்து அவர் கூறியது:அஞ்சான் பட ஷூட்டிங் பரபரப்பாக நடக்கிறது. செட்டில் இருக்கும் எல்லோருமே கடுமையான உழைப்பாளிகள். இது ஒரு பக்கா டீம். சூர்யாவுடன் முதல் முறையாக நடிக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன். கோஆர்ட்டிஸ்ட்களுடன் நடந்துகொள்ளும் முறை, கேமராவுக்கு முன்னால் கேரக்டராக மாறும் திறன் ஆகியவை மட்டுமல்ல. மனிதாபிமானத்தாலும் சூர்யா சிறந்தவராக இருக்கிறார். அவரை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்கிறேன். சமீபத்தில் கோலிசோடா படம் பார்த்தேன். தமிழ் சினிமா நல்லதொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறது. இதுபோன்ற படங்கள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. நல்ல சினிமா உருவாக அர்த்தமுள்ள படங்கள் நிறைய வர வேண்டும். இப்படி சொல்வதால் நான் கமர்ஷியல் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக அர்த்தமில்லை. தெலுங்கில் இந்த வருடம் ரிலீசாக உள்ள எனது எல்லா படங்களுமே ஹீரோயிசம் கொண்ட ஆக்ஷன் படங்கள்தான்.என கூறினார்.

செய்திகள், திரையுலகம்

நடிகை ஐஸ்வர்யாவால், விஜய்சேதுபதி தன் மனைவியை பிரிந்தாரா?…

சென்னை:-‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் விஜய்சேதுபதிக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்று தராத நிலையில் அவரை பற்றி ஒரு வதந்தி கோலிவுட்டில் சமீபகாலமாக பரவி வருகிறது. அதாவது,இந்த இரண்டு படங்களிலும் அவருடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக இருக்கிறார் விஜய்சேதுபதி! அதனால் அவரது வீட்டுக்காரம்மா கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்னும் வதந்திதான் அது! இதுப்பற்றி விஜய்சேதுபதியின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தபோது… யார் சொன்னது? அதெல்லாம் கிடையாது. நேற்றுகூட தன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனையும், பிரிகேஜி படிக்கும் மகளையும், மனைவியையும் பைக்கில் அழைத்து கொண்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்கு இரண்டு ரவுண்ட் அடித்தார் என்றனர்! குடும்பத்துடன் பைக்கில் போய் ரொம்பநாள் ஆச்சு என்பதால் ஹெல்மட் உதவியுடன் இப்படி ஒரு ரவுண்டாம்! நம்புவோம்! இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையாதே? எனும் கேள்விக்கு விஜய்சேதுபதி தான் பதில் சொல்ல வேண்டும்.

செய்திகள், திரையுலகம்

டபுள் மீனிங் வசனங்களுக்கு குட்பை சொன்ன சந்தானம்!…

சென்னை:-சினிமாவில் நகைச்சுவை என்பது பிளாக் அண்ட் ஒய்ட் காலங்களில் சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதாக இருந்தது. வசனங்களில் யதார்த்தம் அதிகமான பிறகு ஒரு சிலர் ஓவராக பேசி காமெடி செய்துவந்தனர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்றவர்களும் தங்கள் வசனங்களில் ஆபாச கலப்பும், டபுள் மீனிங் இல்லாமலும் பார்த்துக்கொண்டனர். முழுக்க முழுக்க வசனம் பேசியே காமெடியில் திணறடிக்கும் சந்தானம் இடையே இடையே டபுள் மீனிங் வசனங்கள் பேசுவதாக நீண்ட நாட்களாக புகார் இருந்து வருகிறது. சமீபத்தில்கூட ‘என்றென்றும் புன்னகை‘ படத்தில் துணை நடிகை ஒருவரிடம் நக்கலாக பேசிய டபுள் மீனிங் வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தணிக்கைக்கு பிறகும் அந்த வசனம் இடம்பெற்றிருந்ததால் எதிர்ப்பு வலுத்தது. அதை சமாளிக்க முடியாமல் மாற்றி பேசினார். டபுள் மீனிங் வசன பாணியை சந்தானம் முற்றிலும் கைவிட வேண்டும் என்று பலமுறை விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதை அவரது அம்மாவும் வலியுறுத்தி வந்தாராம். தற்போது தன் அம்மாவிடம், வரும் காலத்தில் டபுள் மீனிங் வசனம் பேசுவதில்லை என்று சத்தியம் செய்துகொடுத்திருக்கிறார் என்று அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அவரது சத்தியம் காப்பாற்றப்படுமா என்பது அடுத்தடுத்து வெளிவரும் படங்களில் தெரியவரும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

டுவிட்டரில் நடிகை வெளியிட்ட ஆபாச மெசேஜுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்…

சென்னை:-சமீபகாலமாக பெரும்பாலான நடிகர், நடிகைகள் இணைய தள பக்கங்கள் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். சிலவற்றுக்கு வரவேற்பு கிடைக்கும் அதேவேளையில் இன்னும் சில, அவர்களை பிரச்னையில் சிக்க வைத்துவிடுகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த பட போஸ்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருந்த சமந்தா சமீபத்தில் பிரச்னையை சந்தித்தார். மகேஷ்பாபு, அவரது ரசிகர்கள் சமந்தாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல் ‘யுவன் யுவதி’ பட ஹீரோயின் ரீமா கல்லிங்கல் தற்போது பிரச்னையில் சிக்கி இருக்கிறார்.சமீபத்தில் கணவர் ஆஷிக் அபுவுடன் கடற்கரைக்கு சென்றவர் அங்கு அவருடன் நெருக்கமாக இருந்ததாக இணைய தள பக்கத்தில் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார். இந்த ட்விட்டை கண்டித்து ஏராளமான ரசிகர்கள் மெசேஜ் போட்டிருக்கின்றனர். அதைக்கண்டு ஷாக் ஆன ரீமா தனது மெசேஜுக்கு உடனடியாக விளக்கம் அளித்தார். இதற்கு ஆபாசமாக பொருள் கொள்ளக்கூடாது. மதுபானம் குடித்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அதைத்தான் அப்படி சொல்லி இருந்தேன் என எஸ்கேப் ஆகும்படி விளக்கம் அளித்திருக்கிறார். அத்துடன் கையில் மது கோப்பையுடன் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

செய்திகள், திரையுலகம்

பாடல் வெளியீட்டு விழாவில் தேவிஸ்ரீ பிரசாத் உடன் பாடலாசிரியை மோதல்?…

சென்னை:-கவிஞர் தாமரை எந்த ஒரு படத்திற்கும் அனைத்து பாடல்களையும் எழுத வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஒப்புக்கொள்வார். ஆனால் பிரம்மன் படத்திற்காக சசிகுமார் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பாடலை மட்டும் எழுத சம்மதித்தார். ஆனால் அந்த ஒரு பாடலிலும், தாமரை எழுதிக்கொடுத்த பல்லவிக்கு பதிலாக தேவிஸ்ரீ பிரசாத் தானே எழுதிய டம்மி பல்லவியை ஒலிப்பதிவு செய்துவிட்டாராம்.இந்த விஷயம் தாமரைக்கு பாடல் வெளியீட்டு விழாவின்போது தான் தெரியவந்தது. அதனால் மேடையில் பேசும்போது, ” நான் எழுதும் பாடல் வரிகளில் வேறொருவரின் வரிகளை இணைப்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்றும், எனது பாடலின் வரிகள் முழுவதுமே எனக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கவேண்டும் என்று கூறினார். விழா மேடையில் வெளிப்படையாக இந்த புகாரை தாமரை கூறியதால் சிறிது நேரம் பரபரப்பானது.

Scroll to Top