கண்களில் கருவளையத்தை நீக்க வெள்ளரிக்காய் துண்டுகளையும்,மெல்லியதாக சீவிய உருளைக்கிழங்கைப் பயன்படுத்துங்கள். அதிலும் அவற்றை கண்களின் மேல் பத்து நிமிடங்கள் வைத்திருங்கள். கண்களுக்குக் கீழ் உள்ள இரத்த நாளங்களை மென்மையாக்கி, கருவளையம் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.
செல்லுலைட்டை நீக்க முடியாது என்று தான் பலர் நம்புவார்கள். பிரேசில் நாட்டுப் பெண்கள் தமது உடலில் மணலைக் கொண்டு தேய்த்துக் கொள்வார்கள். செல்லுலைட்டைப் பொருத்தவரையில், டிரை பிரஷ் செய்வது மிகச்சிறப்பானது. இது இயற்கையானதும் கூட. எனவே செல்லுலைட்டுக்கு குட்பை சொல்ல வேண்டுமென்றால், மணலைத் தேய்த்துக் கொள்ளுங்கள்.
வெடிப்புற்ற உதடுகளை சரி செய்ய ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். வறண்ட மற்றும் அரிப்பூட்டும் சருமத்தைக் குணப்படுத்த இது மிகச்சிறந்த தீர்வாகும். மேலும் இது சருமத்தையும் உதடுகளையும் கண்டிஷன் செய்து பளபளக்கவும் செய்யும்.
ஸ்காண்டிநேவியன் பெண்கள் மாசு மருவில்லாத பளபளப்பான சருமத்திற்குப் பெயர் பெற்றவர்கள். சருமப் பராமரிப்புக்கு நீர் ஒரு முக்கியமான காரணியாகும். குளிக்கும் போது நீராவியால் முகத்தினை சுத்தப்படுத்துவது, முகத்திலுள்ள அடைபட்ட சருமத் துவாரங்களை திறக்க உதவும். அத்துடன் துவாரங்களில் இருக்கும் மாசுக்களையும் நீக்கும். ஆகவே முகத்தில் நீராவிப் படுமாறு செய்து பின் குளிர்ந்த நீரால் அடிக்கவும். அதிலும் குளிர்ந்த நீரால் இருபது முறை அடிப்பது நல்ல பலனைத் தரும்.
பொடுகினால் அவதிப்படுகிறீர்களா? நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவுடன், யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது டீ ட்ரீ எண்ணெய்யை சில சொட்டுக்கள் கலந்து பயன்படுத்துங்கள். பிறகு பொடுகுக்கு குட்பை தான். இருந்தாலும் நறுமணமிக்க ஆயிலைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். வேண்டுமானால் ஸ்கால்ப்பில் சில சொட்டுக்கள் விட்டு மசாஜ் செய்யுங்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி