திரையுலகம்

திரையுலகம், முதன்மை செய்திகள்

எந்திரன் – மச்சு பிச்சு மலையில் நான் -ரஜி‌னி‌

‘எந்திரன்’ படத்தில் இடம்பெறும் ‘கிளிமஞ்சாரோ’ பாடல் ஷூட்டிங், பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலையில் நடந்தது. அந்த அனுபவம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது. முதன் முதலா ‘எந்திரன்’ பட ஷூட்டிங்… முதல் ஷாட்டுன்னு வச்சுக்கோங்களேன். மச்சுபிச்சு மலையில கிளிமஞ்சாரோ பாடல். மச்சுபிச்சு மலை மேல போனோம். அங்க டான்ஸ் ஷூட். முதல்ல பெரிய மூவ்மென்ட்டுன்னு சொல்லிட்டாரு ராஜு மாஸ்டர். என்ன ஏதுன்னு கேட்டா, பண்ணிடலாம்னு, டைரக்டர்கிட்டயும் சொல்லிட்டாங்க. மொதல்ல கஷ்டமான மூவ்மென்ட்ஸை பண்ணிட்டா, அப்புறம் ஈசியாயிடும்னாங்க. சரி, ஐஸ்வர்யா ராய் வர்றதுக்கு லேட்டாகும். அவங்க அன்னைக்குதான் இந்தியாவுல இருந்து வர்றாங்க. நாம மேக்கப்போட்டு பிராக்டிஸ் பண்ணிறலாம்னு 30, 40 வாட்டி பிராக்டிஸ் பண்ணிட்டு ரெடியா இருந்தேன். அதுக்கப்புறம் ஐஸ்வர்யா ராய் வந்தாங்க. பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். பெரிய மூவ்மென்ட், ரொம்ப டைம் எடுத்துப்பாங்க… அப்படின்னு நெனைச்சா, மூவ்மென்ட் பார்க்கலாம்னு சொன்னாங்க. மூவ்மென்ட் பார்த்த உடனேயே டேக்குன்னு சொல்லிட்டாங்க. நான், என்னடா இது? ரிகர்சல்தான் பார்ப்பாங்கன்னு நினைச்சா, டேக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்சேன். அப்புறம் டைரக்டர், மாஸ்டர் எல்லாரும் வந்து ரிகர்சல் பார்த்திரலாம்னாங்க. ஐஸ்வர்யா ராய் ரிகர்சல் பண்ணினாங்க… சூப்பர்ப். நான் 40 வாட்டி ரிகர்சல் பண்ணியிருக்கேன். பாடி ஸ்டடியா இருக்கு. மைன்ட் ஆஃப் ஆயிடுச்சு. சவுண்டும் கேட்க மாட்டேங்குது, ஒண்ணும் கேட்க மாட்டேங்குது. என்னடான்னு நினைச்சா, முதல்ல நல்லா வந்திட்டிருந்தது எல்லாமே மறந்து போச்சு எனக்கு. ஐஸ்வர்யா ராய் வந்து, ‘இது கஷ்டமான மூவ்மென்ட், டான்சர்களே கஷ்டப்படுறாங்க. நீங்க இவ்வளவு தூரம் பண்ணியிருக்கீங்களே’னு என்னை எங்கரேஜ் பண்ணினாங்க. முதல் ஷாட் ஒ.கே ஆன உடனேயே எல்லாரும் கை தட்டினாங்க. எக்ஸலண்ட் பாட்டு. அங்க ஆடுன, பிரேசில்ல இருந்து வந்த ஒவ்வொரு டான்சரும் ஐஸ்வர்யா ராய் மாதிரி இருந்தாங்க. அவங்க உடம்புலயே ரிதம் இருந்தது. அங்க காஸ்ட்யூம் கரெக்ட் பண்றவங்களும் டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க அவங்களுக்கு டீ, காபி கொடுத்துட்டு போறவங்களும் டான்ஸ் ஆடிட்டே போனாங்க. நான் இதுலயே ஷாக் ஆயிட்டேன். நல்ல அனுபவம். நீங்க அதை படத்துல பாருங்க.

திரையுலகம்

எந்திரன் – ஐஸ்வர்யாராய் பேட்டி

நம் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நடிகைகளால் திருமணத்திற்கு முன்பு வரைதான் நாயகியாக வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

திரையுலகம், முதன்மை செய்திகள்

எந்திரன் – ரஜி‌னி‌ கி‌டா‌ர்‌ வா‌சி‌க்‌கும்‌ பா‌டல்‌…

எந்‌தி‌ரன்‌ படத்‌தி‌ல்‌ ‘காதல் அணுக்கள்’ பாடலை படமாக்கியது குறித்த தனது உணர்வுகளை பகிர்ந்துகொள்கிறார் இயக்‌குநர்‌ ஷங்கர்…

திரையுலகம், முதன்மை செய்திகள்

3000 ரூபாய் ஏலம் போன எந்திரன் டிக்கெட்!

அரியலூரில் தியேட்டர் நடத்தி வருபவர் கார்த்திக். உலகமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையுடன் எந்திரன் படத்தை கொண்டாடிக் கொண்டிருப்பதை

திரையுலகம், முதன்மை செய்திகள்

எந்திரன் – சிறப்பு விமர்சனம்

தொழில் நுட்பத்தில் இன்னமும் பெரிய அளவு நிபுணத்துவம் வளராத ஒரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள், இன்று செய்நேர்த்தியில் முன்னிலையில் இருக்கும் ஹாலிவுட்டுக்குச் சவால் விட்டுள்ளனர், எந்திரன் என்ற படத்தின் மூலம்.

திரையுலகம்

கமல் கருத்து… மைனாவில் மாறியது க்ளைமாக்ஸ்

படம் பார்த்துட்டு நான் ரெண்டு நாள் தூங்கல, என்று தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டிய மைனாவுக்கு இலவசமாகவே ஏக பப்ளிசிட்டி. இந்தப் படத்தை கமல்ஹாசனும் பார்த்துள்ளார். பார்த்தவர் தன் கருத்தையும் இயக்குநர் பிரபு சாலமனிடம் பகிர்ந்து கொண்டாராம். இவ்வளவு அழுத்தமான க்ளைமாக்சை மக்கள் மனம் தாங்கி ஏற்றுக் கொள்வார்களா? ரத்தமும் சதையுமான ஒரு படத்தில் ரணமும் வலியும் இருப்பது சகஜம்தான் என்றாலும் அது கொஞ்சம் அளவுக்கு மீறியதாக இருக்கிறதோ என்று தனது ஐயத்தை தெரிவித்தாராம் கமல். முடிந்தால் க்ளைமாக்சை மாற்றுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இதனால் சற்று குழம்பிப் போன இயக்குநர் சாலமன், சிண்டைப் பிய்த்துக் கொண்டுள்ளார். இறுதியில், படத்தின் க்ளைமாக்ஸை மாற்றிக் கொள்ளலாமே என படத்தின் உரிமையாளரான உதயநிதியும் கூறிவிட, வேறு வழியின்றி க்ளைமாக்ஸை மாற்றப் போகிறாராம் சாலமன்.

திரையுலகம்

மன்மதன் அம்பு சில சுவாரசியங்கள்…

தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கெட்டப், செட்டப் என்று ஏதாவது புதுமைகளை புகுத்துவது கமலின் வழக்கம். அந்தப் பாணியை ‘மன்மதன் அம்பு’ படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார் கமல். இதில் கே.எஸ்.ரவிக்குமார் வேறு இணைந்துள்ளார். கேட்கவா வேண்டும் சுவாரசியத்திற்கு. உதய நிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மன்மதன் அம்புவின் கதை, திரைக்கதையை, காதல், காமெடி கலந்து வடிவமைத்துள்ளார் கமல். டைமிங் காமெடியில் கலக்கும் கிரேசி மோகன், நகைச்சுவை ததும்பும் வசனங்களால் மன்மதன் அம்புக்கு கூர் திட்டியுள்ளார். விரைவு, துள்ளியம், அம்சமான இயக்கம் என படத்தை சொன்ன தேதிக்குள் எடுத்துக் கொடுத்துவிட்டார் ரவிக்குமார். இதுதான் அவரின் சிறப்பு. இவரின் இந்தத் திறமைக்காகதான் ‘தசாவதாரம்’ படத்தையே இவரை இயக்கச் சொன்னார் கமல். தசாவதாரத்துடன் ஒப்பிடுகையில் மன்மதன் அம்பு எம்மாத்திரம் அவருக்கு என்று சொல்லிவிடலாம். ஆனால் மன்மதன் அம்பிலும் சில சிறப்பம்சங்கள் உள்ளனவாம். ரவிக்குமாரின் இயக்கத்திற்கு சரியான வேலைவாங்கும் வகையில்தான் மன்மதன் அம்பு அமைந்தது என்கிறது படக்குழு. கமல் இதில் 30 வயது இளைஞனாய் காதல் அம்பு விடுகிறார். (நிஜத்திலேயே கமல் அப்படித்தானே இருக்கிறார்…) மாதவன், திரிஷா, சங்கீதா ஆகியோர்களின் கூட்டணி ரசிகர்களுக்கு சிற(ரி)ப்புக் கொண்டாட்டமாக அமையும். இந்தக் கூட்டணியில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஓவியா (களவாணி பட நாயகி). படத்தின் கடைசி காட்சியையே ஓவியா தோன்றுவது போலத்தான் எடுத்து முடித்துள்ளாராம் கே.எஸ்.ரவிக்குமார் மேலும், படத்தில் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்து அந்த ரோலையே பெஸ்ட் ரோலாக்கியுள்ளாராம் சூர்யா. அவர், ‘ஏழாம் அறிவு’ படத்தில் ஸ்ருதி கமலஹாசனுடன் நடித்துவரும் வேளையில், இரண்டு நாள் கால்ஷீட்டில் இந்த ரோலை முடித்துக் கொடுத்திருக்கிறார். இவர்கள் போக இந்தப் படத்தில் இன்னும் சில முன்னணி நடிகர்கள் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபற்றி இப்போது சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். திரிஷாவின் அம்மா உமாவும்கூட இதில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிஷா இதில் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். அவரது இனிமையான குரலில் மயங்கியவர்கள் கமல், மாதவன், ரவிக்குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும், படம் வெளிவந்தப் பிறகு தமிழ் ரசிகர்களும். இனிமையான குரலுடனும், கமலிடம் கற்றுக்கொண்ட தமிழ் உச்சரிப்புடனும் கலக்கியிருக்கிறார் திரிஷா. அவரின் கூடுதல் கவர்ச்சியும் இதில் அசத்தல்தான். மன்மதன் அம்பு படத்தின் முதல் இரு கட்டப் படப்பிடிப்புகள் ஐரோப்பாவிலும், சொகுசு கப்பலிலும் நடந்தன. இறுதிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்துள்ளது. ஐரோப்பா, கொடைக்கானல் என குளுகுளு பிரதேசங்களின் அழகினை கண்ணுக்கு விருந்தாக்கவிருக்கிறார் ஒளிபதிவாளர் மனுஷ் நந்தன். கச்சிதமான படத்தொகுப்பு-ஷான் முகமது. இசை-தேவி ஸ்ரீபிரசாத். தசாவதாரத்தில் பின்னணி இசையில் கலக்கிய இவர். இதில் மொத்த இசையிலும் தனிராஜ்யம் அமைத்துள்ளார்.படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் போஸ்ட் புரெடக்‌ஷன் வேலைகள் தொடங்க உள்ளன. குறிப்பிட்டத் தேதிக்குள் விரைவாகவும், சிறப்பாகவும் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை கொண்டாடும் விதத்தில் சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நிறைவு விழா விருந்தை நடந்தினார் ரவிக்குமார். படக்குழுவினர் அனைவரும் இந்த விருந்தில் கலந்துகொண்டு உற்சாகமாக கொண்டாடினர். அப்போது படத்தை டிசம்பரில் வெளியிட்டுவிடும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார் ரவிக்குமார். ‘மன்மதன் அம்பு’ காதல் பிளஸ் காமெடி விருந்து விரைவில் திரையில்.

திரையுலகம், முதன்மை செய்திகள்

ரஜினியோடு மோத விரும்பாத கமல், விஜய்!

விஜய் படம் இல்லாத தீபாவளி பட்டாசு இல்லாத தீபாவளி மாதிரி என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்வதுண்டு. வரிசையாகத் தோல்விப் படங்களைச் சந்தித்த விஜய், காவலன் மூலம் தனது கணக்கை நேர் செய்ய விரும்பினார். இதனால் தீபாவளிக்குக் காவலனைத் திரைக்குக் கொண்டுவந்துவிடுவது என்று முடிவு செய்தே படத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் எந்திரன் ரிலீஸ் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டத்தில் இப்போது கில்லி ஹீரோவும் தனது படத்தை டிசம்பருக்குத் தள்ளி வைத்திருக்கிறார். இதேபோல் கமல் படமும் எந்திரனால் தள்ளி வைக்கப்பட்டிருகிறது. கமலின் மன்மதன் அம்பு திட்டமிட்டபடி முடிந்துவிட்டது. தீபாவளிக்குப் படம் வெளியாவது உறுதி என்று இயக்குனர் தரப்பில் சொல்லிவந்தார்கள். கமலும் இப்போது மன்மதன் படத்துக்கு டப்பிங் பேசிவருகிறார். ஆனால் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நவம்பரில்தான் முடியும்; தீபாவளி ரேஸில் மன்மதன் இல்லை என்று சொல்லிவிட்டாராம் இயக்குனர் ரவிக்குமார். ஆர்யா சார்பில் உதயநிதி ஸ்டாலின் கேட்டுகொண்டதற்கு ஏற்ப எந்திரன் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைத்த சன் பிக்ஸர்ஸ், மன்மதனை டிசம்பர் கடைசி வாரம்தான் வெளியிட வேண்டும் என்று சொல்லிவிட்டதாம்

திரையுலகம்

எந்திரனின் – அமிதாப் இருந்திருந்தால்…? – ஷங்கர்!

எந்திரன் ஒரு அறிவியல் படம் என்ற போதிலும் அதனை பார்ப்பதற்கு அறிவியலினை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என “எந்திரன்” படத்தின் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் விளக்கியுள்ளார். அறிவியலைப் பற்றி கவலைப்படாமல் படத்தினை முழுவதும் ரசிக்கும்படியும் ஷங்கர் கூறியுள்ளார். அறிவியலாளர்களுக்கு “எந்திரன்” மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ள ஷங்கர், இந்திய அளவில், ஏன்? உலக அளவில் கூட எந்திரன் போன்று ஒரு படம் இதுவரை வெளிவந்ததில்லை என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். “எந்திரன்” படத்தில் தற்போது Danny Denzongpa நடித்துள்ள வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு, முதலில் தான் அமிதாப்பச்சனை தான் அணுகியதாக ஷங்கர் அதிர்ச்சியூட்டும் தகவலை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். ரஜினி, ரஹ்மான், ஷங்கர், ஐஸ்வர்யா என ஏற்கனவே இந்தியாவின் அனைத்து பிரபலங்களும் இணைந்துள்ள எந்திரனில் “அமிதாப்பும்” நடித்திருந்தால்…? படம் பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமாய் அமைந்திருக்கும். ஆனால் அமிதாப் வில்லனாக நடிக்க விரும்பவில்லை. அமிதாப் வில்லனாக நடித்த பல படங்கள் தோல்வியை தழுவின. எனவே தான் வில்லனாக நடித்தால் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நோக்கில், அமிதாப்பச்சன் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல்.

திரையுலகம்

த்ரிஷாவை “கிஸ்”ஸடிக்க மறுத்த நடிகர்

இந்தியில் தீபிகா படுகோனேவும், சயீப் அலி கானும் இணைந்து நடித்து சக்கைபோடு போட்ட படம் ‘லவ் ஆஜ் கல்’. அதனுடைய தெலுங்கு ரீ-மேக்கில் த்ரிஷாவும், பவன் கல்யாணும் நடித்து வருகிறார்கள். இந்தி படத்தில் மிகப்பிரபலமான ஒரு உதட்டோடு உதடி உரசும் கிஸ் சீன் ஒன்று உள்ளது. அதன் சாராம்சம் எதுவும் குறையாமல் தெலுங்கில் அப்படியே எடுக்க விரும்பினாராம் அதன் இயக்குனர் ஜெய்ந்த் பிரான்ஜீ. எப்படியோ த்ரிஷாவிடம் பேசி அந்த சீனை பற்றிய முக்கியத்துவத்தையும் விளக்கி சம்மதிக்க வைத்துவிட்டார். ஆனால் ஹீரோ பவன் கல்யாணிடம் சொல்லியபோது அவர் தனது இமேஜூம் மற்றும் அரசியம் வாழ்க்கையும் பாதிக்கப்படும். அதனால் கண்டிப்பாக முடியாது என்று மறுத்துவிட்டாராம். அதனால் அதற்கு இணையான மாற்று சீனை யோசித்து வருகிறாராம் இயக்குனர். பவன் கல்யாண் சிரஞ்சீவியின் சகோதரர் என்பதும், அவருடைய கட்சியான பிரஜா ராஜ்ஜியத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Scroll to Top