திரையுலகம்

திரைப்படப்பாடல், பாடல்கள், முதன்மை செய்திகள்

புலியும் அவ்வேடனும்… நட்பாய்…

புலியும் அவ்வேடனும்
புயலும் ஒரு ஓங்களும்
புனலும் மடைவாயிலும்
புழமும் பெரும் பூக்காயும்

செய்திகள், திரையுலகம்

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஸ்டன்ட் நடிகர் கைது!…

சென்னை:-சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஒரு கும்பல் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி பாலியல் தொழில் தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ரகசிய விசாரணையில் இறங்கினர்.அவர்களுக்கு, வடபழனியில் ஸ்டூடியோ அருகே இருக்கும் ஆடம்பர பங்களாவில் பாலியல் தொழில் நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சினிமா ஸ்டன்ட் நடிகர் பாம்பே குமாரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு துணையாக இருந்த மேலும் 3 பேரும் பிடிபட்டனர். 4 இளம் பெண்களையும் அவர்களிடம் இருந்து போலீசார் மீட்டனர். போலீஸ் விசாரணையில் குமார் என்ற பாம்பே குமார் தமிழ் மற்றும் இந்தி படங்களில் ஸ்டன்ட் நடிகராக நடித்து வந்தார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி அவர், இளம்பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியதும் தெரிய வந்தது.

செய்திகள், திரையுலகம்

சினி பீல்டில் எனக்கு நண்பர்கள் இல்லை என கூறும் நடிகை!…

சென்னை:-ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. இந்தியிலும் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. இதையடுத்து மீண்டும் படிக்க முடிவு செய்துள்ளார். ஆடுகளம் படத்தில் எனக்கு பாராட்டு கிடைத்தது. ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். இதனால் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தில் முழு கவனம் செலுத்த முடிகிறது. எனது நிறைய நண்பர்கள் சினிமா துறையை விட்டு வெளியில்தான் இருக்கிறார்கள். சினிமாவில் எனக்கு அதுபோல் நண்பர்கள் வட்டம் கிடையாது. நானும் பெரிதாக யாரிடமும் பழகுவது இல்லை.நடிப்பு முடிந்ததும் எனது சொந்த வேலையை பார்க்கவே ஆர்வம் காட்டுவேன். இன்ஜினியரிங் படிப்பு முடித்தபிறகு நடிக்க வந்தேன். தற்போது மீண்டும் படிப்பு மீது ஆர்வம் கொண்டிருக்கிறேன். எனது மேற்படிப்பில் மீண்டும் கவனம் செலுத்த உள்ளேன். நான் எதையும் வெளிப்படையாக பேசுபவள். மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். மனதுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு உதட்டளவில் வேறுமாதிரி பேசுபவர்களை பிடிக்காது. அவர்களை சந்திப்பதைகூட தவிர்த்து விடுவேன்.இவ்வாறு கூறினார்.

செய்திகள், திரையுலகம்

சினிமா எனக்கு நிறைய பாடம் கத்துக்குடுத்துச்சு ‘விரக்தி’யில் பேசிய நயன்தாரா!…

சென்னை:-சர்ச்சை நடிகைகளில் எப்போதுமே நயன்தாராவுக்கு இடமுண்டு. வந்த புதிதில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர் தொடர்ந்து சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த காதல் சிக்கல்களில் மாட்டிசின்னா பின்னாமானார்.அதிலிருந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இப்போதும் கூட ஆர்யா மாதிரியான ஹீரோக்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்படுகிறார். இதற்கிடையே தனது சினிமா ஃலைப்பை பற்றி பேசியிருக்கிறார் நயன்தாரா.அதில் அவர் கூறியிருப்பதாவது:-சினிமா உலகத்தில நான் நிறைய கத்துக்கிட்டேன். நம்ம வாழ்க்கையில பிரச்சினை வர்றதே அதுல இருந்து பாடம் கத்துக்கத்தான். சினிமா உலகம் எப்படி பணம், புகழைக் கொடுக்குதோ அதுக்கும் மேல நிறைய பாடங்களைக் கொடுக்கும். அந்த வகையில் நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் சமாளிக்கிறதா நினைக்க வேண்டாம். இப்போ நிறைய படங்கள் தொடர்ச்சியா பண்ணிட்டே இருக்கேன். திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவே இல்ல. இந்த நிமிஷம் ரொம்ப நிறைவா என்னோட வேலையை செஞ்சுகிட்டு இருக்கேன். கல்யாணத்துக்காக நான் காத்திருக்கலை.ஆனா, அதேநேரம் கல்யாணத்தைத் தவிர்க்க விரும்புற ஆளும் நான் இல்லை. எல்லாம் நடக்குறப்ப நல்லபடி நடக்கும். என்று கூறியிருக்கிறார்.

செய்திகள், திரையுலகம்

நமீதாவைப் பார்க்க சென்றவர்கள் விழுந்தடித்து ஓட்டம்…

சென்னை:-தனது ஆஜானபாகு உடம்பை மூலதனமாகக் கொண்டு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நமீதா. பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் இளைஞன் என்ற படத்தில் வில்லியாக அவதாரமெடுத்தார். ஆனால் அந்த முயற்சி நமீதாவுக்கு பலன் கொடுக்கவிலலை. இருப்பினும் கோடம்பாக்கத்திலேயே முகாமிட்டு சின்னத்திரையில் முகம் காட்டியபடி, கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டுபொழுதை கழித்து வருகிறார். இதற்கிடையே தனது பெயரளவில் ஏதாவது பரபரப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக, தற்போதைக்கு அரசியல் என்ற அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கும் நமீதா, தேசிய அளவிலான ஒரு பிரதான கட்சியில் தான் இணையப்போவதாகவும் ஒரு செய்தியை காத்துவாக்கில் கசிய விட்டுக்கொண்டிருக்கிறார். இந்தமாதிரி ஏதாவது பரபரப்பு செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தாலும் அவருக்கு புதிதாக படங்கள் கிடைத்தபாடில்லை. அதனால் இப்போது கடின உடற்பயிற்சி மூலம் உடல் எடையை 25 கிலோ வரை குறைத்திருப்பதாக புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் நமீதா. அதை நம்பி அவரை பார்க்கச்சென்றவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாம். காரணம், முன்பு இருந்ததற்கு கடுகளவும் குறையாத அதே கம்பீரமான தோற்றத்துடன் காட்சி கொடுக்கிறாராம் நமீதா. அதைப்பார்த்து நமீதாவ பார்க்கிறதுக்கு பிந்துகோஷ்க்கே அக்கா மாதிரியில்ல இருக்கு என்று வீடுதேடி சென்றவர்கள் விழுந்தடித்து ஓடி வந்து விட்டார்களாம்.

செய்திகள், திரையுலகம்

நடிகை வீணா மாலிக் சினிமாவில் இருந்து ஓய்வு…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானை சேர்ந்த சினிமா நடிகை வீணாமாலிக். இவர் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பிரபலமானார். சமீபத்தில் வீணா மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் சினிமாவுக்கு தான் முழுக்கு போடப் போவதாக அறிவித்தார். மேலும்,தான் ஒரு போதும் கவர்ச்சி படங்களில் நடிப்பதில்லை என்றும் சமூக சேவைகளிலும்,சமூக நல திட்டங்களிலும் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

செய்திகள், திரையுலகம்

அழுமூஞ்சி என பெயர் எடுத்த நடிகை…

சென்னை:-எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் எல்லாம் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்கள். வந்ததும் மேக்கப் போட்டுக்கொண்டு அன்றைக்கு படமாகும் காட்சிகளின் டயலாக்குகளை தெரிந்து கொண்டு ரிகர்சலை தொடங்கி விடுவார்கள். அதையடுத்து சொன்னபடி 9 மணிக்கே கேமரா முன்பு வந்து விடுவார்கள். அதேபோல் 6 மணிக்கு பேக்கப் ஆனதும் இயக்குனர், தயாரிப்பாளர், கேமராமேன் தொடங்கி அனைவரிடமும் சொல்லிவிட்டே ஸ்பாட்டை விட்டு வெளியேறுவார்கள். அந்த அளவுக்கு அவர்களிடம் தொழில் பக்தி இருந்தது. ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாகி விட்டது. பெரும்பாலான நடிகர்-நடிகைகள் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு வருவதே இல்லை. அப்படியே வந்தாலும், செல்போனில் கடலை போடுவதுதான் அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில் பல நடிகைகள் இருக்க, இப்போது வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் படங்களில் நடித்த மனீஷாயாதவும் இணைந்துள்ளார்.அதாவது, ஒருநாள்கூட சொன்ன நேரத்திற்குள் ஸ்பாட்டுக்கு வர மாட்டாராம். அதேபோல் பேக்கப் ஆகும் 6 மணி வரை படப்பிடிப்பில் இருக்கவே மாட்டாராம். ஷாப்பிங் போகனும், நண்பர்களை பார்க்கப்போகனும் என்று ஏதாவது காரணத்தைச்சொல்லிவிட்டு எஸ்கேப்பாகி விடுகிறாராம். இதனால் ஒருநாள் இரண்டுநாள் பொறுத்துக்கொள்ளும் டைரக்டர்கள். சில நாட்களில் முக்கியமான காட்சியை படமாக்கும்போதும் வழக்கம்போல் மனீஷா தாமதமாக வருவதால் கோபத்தின் உச்சத்துக்கே சென்று விடுகிறார்களாம். கோபத்தின் வெளிப்பாடாக கடின வார்த்தைகளால் சிலசமயங்களில் மனீஷாவை சுட்டெரித்து விடுகிறார்களாம். அதைக்கேட்டு ஆடிப்போகும் மனீஷா, இனிமேல் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் சார். இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிடுங்க, ப்ளீஸ்… ப்ளீஸ் என்று பள்ளி மாணவி போன்று பதறுபவர், டைரக்டர்கள் ஓவர் டோஸ் விட்டால் அழுதே விடுகிறாராம். இதனால் அதன்பிறகு அவரை சகஜநிலைக்கு கொண்டு வருவதற்குள் மேற்கொண்டும் மணிக்கணக்கில் நேரம் பிடிக்கிறதாம். அந்த அளவுக்கு அழுமூஞ்சியாக இருக்கிறாராம் மனீஷா.அதனால் இப்போதெல்லாம் யாராவது மனீஷா பற்றி பேச்செடுத்தாலே, யாரு அந்த அழுமூஞ்சி நடிகையா? என்று கேட்கும் அளவுக்கு கோடம்பாக்கத்தில் மனீஷாவின் புகழ் பரவிக்கிடக்கிறது.

திரையுலகம், முதன்மை செய்திகள்

உத்தம வில்லனுடன் இணையும் அப்பாடக்கர்

கமல்ஹாசன் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்துக்கான ஆரம்ப கட்ட படப்பிடிப்பு

Scroll to Top