திரையுலகம்

திரையுலகம்

எந்திரன் இசைப் பணி… இரண்டுமணி நேரம்தான் தூங்கினேன்! – ரஹ்மான்

எந்திரன் இசைப் பணி மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தின் இசையமைப்பின்போது இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கினேன், என்றார் ஏ ஆர் ரஹ்மான். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து நாளை உலகம் முழுவதும் வெளியாகும் எந்திரன் படம் குறித்து ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தினகரன் நாளிதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி: இசைப்புயல் ரகுமான் அதிகம் பேசாதவர். தனது இசை பேசப்பட வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக கருதி கடுமையாக உழைப்பவர். அதனால்தான் இரட்டை ஆஸ்கர் விருதுகளை வென்றெடுக்க முடிந்தது. அப்படிப்பட்ட செயல்வீரர்களுக்கு பேச நேரம் கிடைக்காதுதான். ஆனாலும், ரஜினியும் ஷங்கரும் எந்திரன் பட தயாரிப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டதை சுட்டிக் காட்டி, அடுத்ததாக உங்கள் பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என சொன்னதும் கூச்சத்துடன் புன்னகைத்தார். அப்போது சிதறிய முத்துக்கள்.. “எந்திரன் படத்துல எல்லாமே பிரமாண்டமா இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். பாடல்கள் ஒவ்வொன்னையும் ஒரு வகையான உணர்வோட படமாக்கி இருக்கார் ஷங்கர். படத்தோட மையக் கருத்துக்கு பின்னணி இசையும் பொருத்தமா அமையணும்னு அவர் எதிர்பார்த்தார். படத்துல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைய இருக்குறதனால ரசிகர்கள் ஒன்றி போயிடுவாங்க.. அந்த இடத்துல சவுண்ட் பெருசா இருந்தாதான் கவனிப்பாங்க.. ஸோ, பெருசா செய்யணும்னு ஆசைப்பட்டோம். அதனால என்ன ஆச்சுன்னா, லண்டன் சென்னை மும்பைனு மூணு இடத்துல பின்னணி இசை சேக்குற மாதிரி ஆயிருச்சு.. அதுக்கு ரொம்ப செலவாகும்னு சொன்னோம். சன் பிக்சர்ஸ் தயங்காம அதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க.. அதுக்கு நன்றி சொல்லணும். லண்டன்ல பாத்தீங்கன்னா 100 இசைக் கலைஞர்களை வச்சு ரெக்கார்ட் பண்ணிருக்கோம். அங்க டோல் பவுண்டேஷன்னு சொல்லிட்டு ஃபேமஸான ஒரு டோல் குரூப் இருக்கு. அவங்க இந்த படத்துக்கு வேலை செஞ்சுருக்காங்க. ரொம்ப தள்ளிப்போக கூடாது, படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணணும்னு சொன்னதால கடுமையா வேலை செஞ்சிருக்கோம்.. சீக்கிரமாவும் முடியணும் ரொம்ப நல்லாவும் வரணும்னா அவ்ளோ உழைச்சாதான முடியும்.. அந்த வேலை நடந்தப்ப ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் தூங்கினோம்னா நீங்களே பார்த்துக்குங்க… ‘சிவாஜி’ படம் பண்ணும்போது செக்கோஸ்லோவியாவுல உள்ள பிராக்ல ரெக்கார்ட் பண்ணினோம். அங்க சிம்ஃபனி இசைக் கலைஞர்கள் கிடைப்பாங்க. ஆனா, எந்திரன்ல இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய், பிராஸ்ங்கற இசைக் குழுவை பயன்படுத்தியிருக்கோம். பாடல்கள் எல்லாமே பிரமாண்டமா பிரமாதமா வந்திருக்கு. லண்டன்ல இருக்கிற பிராஸ் செக்ஷன், என்னோட ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் இவங்கல்லாம் நிறைய ஹெல்ப் பண்ணிருக்காங்க. இதுதவிர நிறைய மாடர்ன் டெக்சர்ஸ் மியூசிக் பண்ணியிருக்கோம். நீங்க எல்லாருமே ரொம்ப ரசிப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு…”, என்றார்.

திரையுலகம்

ரம்லத்துக்கு பயந்து பலத்த பாதுகாப்பு டன் ஷூட்டிங்கில் பங்கேற்ற நயன்!

பிரபுதேவாவின் மனைவி ரம்லத் மற்றும் பெண்கள் அமைப்புகள் தாக்கக் கூடும் என்ற பயம் காரணமாக, பலத்து பாதுகாப்புடன் விளம்பரப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நயன்தாரா. நயன்தாரா-பிரபுதேவா காதல் மிகத் தீவிரமாகி, திருமணத்தில் வந்து நிற்கிறது. திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்க ரம்லத்துக்கு ரூ.3 கோடி ரொக்கமும், அண்ணாநகரில் உள்ள வீட்டையும் கொடுத்து சமரசம் செய்து விட்டதாக ஏற்கனவே வதந்தி பரவியது. நயன்தாரா ரூ.85 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை பிரபுதேவா மூலம் ரம்லத்துக்கு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதையெல்லாம் ரம்லத் மறுத்துள்ளார். அவர் புகார் அளித்தால் நயன்தாரா, பிரபு தேவா இருவரையும் கைது செய்வோம் என்று போலீசாரும் கூறியுள்ளனர். ரம்லத் புகார் தராவிட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் சங்கங்கள் கூறி வருகின்றன. நயன்தாராவுக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக நேற்று நயன்தாரா சென்னை வந்தார். வழக்கமாகத் தங்கும் பார்க் ஓட்டலை விட்டுவிட்டு, ரகசிய இடத்தில் தங்கிய அவர், கேளம்பாக்கத்தில உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். 3 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. சென்னையில் உள்ள பிரபல ஜவுளி விற்பனை நிறுவனம்தான் இந்த விளம்பர படத்தை தயாரிக்கிறது. பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு இந்தப் படத்தில் அவர் நடிக்கிறார். காரணம் கடனில் சிக்கியுள்ள பிரபு தேவாவுக்கு உதவுவதற்காக என்று கூறப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பில் ரம்லத் மற்றும் பெண்கள் சங்கத்தினர் புகுந்து ரகளையில் ஈடுபடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், நயன்தாராவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் படப்பிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்டு உள்ளனர்.

திரையுலகம்

வானம் பிரஸ் மீட் – சிம்புவின் வாயை கிளறிய நிருபர்கள்

“வானம் படத்தின் நடிகர்கள் – தொழில்நுட்பக் கலைஞர்கள் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். சிலம்பரசன், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் கிரிஷ், பட அதிபர் வி.டி.வி.கணேஷ் மற்றும் படக்குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுப் பேசினர். படம் குறித்தும் படத்தின் நாயகி குறித்தும் சிம்பு கூறுகையில் : “விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளிவந்த பிறகு 150 நாட்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் சும்மா உட்கார்ந்திருந்தேன். நடுவில் நான் ஒப்புக்கொண்ட “கோ பட விவகாரம் உங்களுக்கே தெரியும். “போடா போடி படப்பிடிப்பும் தள்ளிப்போய் விட்டது. அப்போதுதான் அல்லு அர்ஜுன் நடித்த “வேதம் என்ற தெலுங்கு படத்தை பார்த்தேன். வித்தியாசமான படம். மிக அருமையான திரைக்கதை. பாதி படம் பார்த்தபோதே இந்த படத்தை தமிழில் நாம் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தேன். என் நண்பர் கணேஷ் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார். படத்தில் பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால் என்று நட்சத்திர கூட்டம் நிறைய இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் ஈடுகட்டும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வேறு ஒரு சிலம்பரசனை பார்த்தது போல், ‘வானம் படத்தில் இன்னொரு சிலம்பரசனை பார்க்கலாம்… என்றார். உங்களை விட அனுஷ்கா உயரமானவர் என்கிறார்களே, என்று ஒரு நிருபர் கேட்க, “அது குள்ளமானவர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி ( சூர்யாவை கலாய்க்கிறாராம் ). நான் வேண்டுமானால் பக்கத்தில் நிற்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்… என்று கூறிய சிம்பு, அனுஷ்காவை அழைத்து பக்கத்தில் நின்று காட்டினார். சிம்பு உயரமாகத்தான் இருந்தார். அடுத்து “நீங்கள் அனுஷ்காவின் ரசிகர் என்கிறீர்கள். மற்ற கதாநாயகிகளிடம் இல்லாத அம்சம் அனுஷ்காவிடம் இருப்பதாக நினைக்கிறீர்களா? என்று சிம்புவின் வாயைக் கிளறினார் இன்னொரு நிருபர். அதற்கு சிம்பு சொன்ன பதில் : “நான் அவ்வளவு எளிதில் யாருடைய ரசிகராகவும் மாற மாட்டேன். முன்பு ஜோதிகாவின் ரசிகராக இருந்தேன். ‘அருந்ததி படம் பார்த்ததில் இருந்து அனுஷ்காவின் ரசிகராக மாறிவிட்டேன். பொதுவாக ஒரு படத்தை கதாநாயகன்தான் தோளில் தூக்கி சுமப்பார். ஆனால், ஒரு முழு படத்தையும் கதாநாயகி அனுஷ்கா தோளில் தூக்கி சுமந்திருந்தார். அதனால்தான் நான் அனுஷ்காவின் ரசிகராக மாறினேன்… என்றார். ஒரு நடிகையை அழைத்துப்போய் “இவளைத்தான் நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். ஆசீர்வாதம் செய் என்று உங்கள் அம்மாவிடம் சொன்னதாக ஒரு தகவல் பரவியதே, உண்மையா என்ற கேள்விக்கு, “ஏங்க… இதெல்லாம் ஓவர். அப்படி யாரையும் நான் அழைத்துப்போகவில்லை. அது வெறும் வதந்தி… என்றார். வானம் படத்தில் பரத்துடன் சேர்ந்து நடிக்கிறார் சிம்பு. இதே போல தனுஷுடன் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன். அதில் தயக்கமில்லை, என்றார்.

திரையுலகம்

கமல் படத்தில் 'களவாணி' ஓவியா!

களவாணி படத்தில் தனது அழகு மற்றும் துடிப்பான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தைக் களவாடிய ஓவியா, கமல் ஹாஸனின் மன்மதன் அம்பு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கடைசி காட்சியையே ஓவியா தோன்றுவது போலத்தான் எடுத்து முடித்துள்ளாராம் கே எஸ் ரவிக்குமார். ஓவியாவுக்கு என்ன ரோல்? கண்டிப்பாக கமலுக்கு ஜோடியாக அவரைப் போட முடியாது என்பதால், மாதவனின் ஜோடியாக நடிக்க வைத்துள்ளனர். “கமல் சார் படத்தில் தலை காட்டுவதே பெருமைக்குரிய விஷயம்தானே”, என்ற வழக்கமான பல்லவியையே நம்மிடமும் பாடினார் ஓவியா. இந்தப்படத்தில் இன்னொரு நடிகர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவர், கமல் மகளுக்கு நாயகனாகிவிட்ட சூர்யா . 7-ம் அறிவு படத்தின் இரண்டு நாள் கேப்பில் இந்த ரோலை முடித்துக் கொடுத்தாராம். “இது மட்டுமல்ல… இன்னும் சில ஆச்சர்யங்களும் படத்தில் உள்ளன” என்கிறார் கே எஸ் ரவிக்குமார். வேற என்னவாக இருக்கும்? மேலும் சில முன்னணி நடிகர்களும் கெஸ்ட் ரோலில் வரப்போகிறார்களோ! நன்றி : http://thatstamil.oneindia.in/movies/heroines/2010/09/28-kalavani-oviya-kamal-film.html

திரையுலகம், முதன்மை செய்திகள்

ஐஸ்வர்யா ராயைப் பார்த்ததும் எல்லாம் மறந்து போச்சு!-ரஜினி

தினகரன் நாளிதழில் இன்று வெளியாகியுள்ள ரஜினியின் பேட்டி: “முதன் முதலா ‘எந்திரன்’ பட ஷூட்டிங்… முதல் ஷாட்டுன்னு வச்சுக்கோங்களேன். மச்சுபிச்சு மலையில கிளிமஞ்சாரோ பாடல். மச்சுபிச்சு மலை மேல போனோம். அங்க டான்ஸ் ஷூட். முதல்ல பெரிய மூவ்மென்ட்டுன்னு சொல்லிட்டாரு ராஜு மாஸ்டர். என்ன ஏதுன்னு கேட்டா, பண்ணிடலாம்னு, டைரக்டர்கிட்டயும் சொல்லிட்டாங்க. மொதல்ல கஷ்டமான மூவ்மென்ட்ஸை பண்ணிட்டா, அப்புறம் ஈசியாயிடும்னாங்க. சரி, ஐஸ்வர்யா ராய் வர்றதுக்கு லேட்டாகும்&அவங்க அன்னைக்குதான் இந்தியாவுல இருந்து வர்றாங்க. நாம மேக்கப்போட்டு பிராக்டிஸ் பண்ணிரலாம்னு 20, 30 வாட்டி பிராக்டிஸ் பண்ணிட்டு ரெடியா இருந்தேன். அதுக்கப்புறம் ஐஸ்வர்யா ராய் வந்தாங்க. பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். பெரிய மூவ்மென்ட், ரொம்ப டைம் எடுத்துப்பாங்க… அப்படின்னு நெனைச்சா, மூவ்மென்ட் பார்க்கலாம்னு சொன்னாங்க. மூவ்மென்ட் பார்த்த உடனேயே டேக்குன்னு சொல்லிட்டாங்க. நான், என்னடா இது? ரிகர்சல்தான் பார்ப்பாங்கன்னு நினைச்சா, டேக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்சேன். அப்புறம் டைரக்டர், மாஸ்டர் எல்லாரும் வந்து ரிகர்சல் பார்த்திரலாம்னாங்க. ஐஸ்வர்யா ராய் ரிகர்சல் பண்ணினாங்க… சூப்பர்ப். நான் 40 வாட்டி ரிகர்சல் பண்ணியிருக்கேன். பாடி ஸ்டடியா இருக்கு. மைன்ட் ஆஃப் ஆயிடுச்சு. சவுண்டும் கேட்க மாட்டேங்குது, ஒண்ணும் கேட்க மாட்டேங்குது. என்னடான்னு நினைச்சா, முதல்ல நல்லா வந்திட்டிருந்தது எல்லாமே மறந்து போச்சு எனக்கு. ஐஸ்வர்யா ராய் வந்து, ‘இது கஷ்டமான மூவ்மென்ட், டான்சர்களே கஷ்டப்படுறாங்க. நீங்க இவ்வளவு தூரம் பண்ணியிருக்கீங்களே’னு என்னை எங்கரேஜ் பண்ணினாங்க. முதல் ஷாட் ஒ.கே ஆன உடனேயே எல்லாரும் கை தட்டி னாங்க. எக்ஸலண்ட் பாட்டு. அங்க ஆடுன பிரேசில்ல இருந்து வந்த ஒவ்வொரு டான்சரும் ஐஸ்வர்யா மாதிரி இருந்தாங்க. அந்த உடம்புலயே ரிதம் இருக்கு. அங்க காஸ்ட்யூம் கரெக்ட் பண்றவங்களும் டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க அவங்களுக்கு டீ, காபி கொடுத்துட்டு போறவங்களும் டான்ஸ் ஆடிட்டு அப்படியே போனாங்க. நான் இதுலயே ஷாக் ஆயிட்டேன். நல்ல அனுபவம். நீங்க அதை படத்துல பாருங்க…”, என்று கூறியுள்ளார்

திரையுலகம்

ஐரோப்பாவின் பிரமாண்ட 'கொலோஸியம்' அரங்கில் ரஜினியின் எந்திரன்…

ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய திரையரங்கமான கொலோஸியம் கினோ-1 (Colosseum) -ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு வெளியாகும் முதல் இந்தியப் படம் ரஜினியின் எந்திரன் மட்டுமே. இந்தக் காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. இந்த அரங்கம் நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் அமைந்துள்ளது. Matrix, அவதார் போன்ற சரித்திரப் புகழ்பெற்ற படங்கள் இங்கே வெளியாகியுள்ளன. மேற்கத்திய நாடுகளில் ஒரு திரையரங்கில் 700 இருக்கைகளே அதிகம் என்ற நிலைதான் இப்போது உள்ளது. அந்த பாணியைத்தான் இன்றைக்கு இந்தியாவிலும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் கொலோஸியம் அரங்கம் 975 இருக்கைகள் கொண்டது. அதிநவீன முறையில், சர்வதேச தரத்திலான (THX) ஒலியமைப்புடன் கட்டப்பட்ட இந்த அரங்கம்தான் ஐரோப்பாவிலேயே பெரியதாகும். இந்த அரங்கில் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிப் படங்களை வெளியிடுவதில்லை. காரணம் அவற்றை ஒரு காட்சி கூட முழுமையாக ஓட்ட முடியாது என்பதே. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக வெளியாகும் இந்திய/தமிழ் திரைப்படம் என்றால் அது எந்திரன் மட்டுமே. நார்வேயில் உள்ள தமிழரான வசீகரன் சிவலிங்கத்தின் வி.என் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து இந்த சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதுகுறித்து வசீகரன் கூறுகையில், “கொலோசியத்தில் ரஜினி சாரின் எந்திரன் தமிழ்ப் படம் திரையிடுவது மிகுந்த பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்த வாய்ப்பை எங்களுக்குத் தந்த ஜாக் ஏ ராஜசேகரின் ஃப்யூஷன் எட்ஜ் மீடியா மற்றும் ஐங்கரன் நிறுவனத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..” என்றார். அவரிடம் எந்திரன் படத்துக்கான வரவேற்பு எப்படி உள்ளது என்று கேட்ட போது, ‘பிரமிபக்கத்தக்க வகையில் உள்ளது. நார்வேயில் மொத்தம் 14000 தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் அதிகபட்சம் 20 சதவீதத்தினர்தான் திரையரங்குகளுக்குப் போய் படம் பார்ப்பார்கள். பொதுவாக தமிழ்ப் படம் போட்டால் 1400 பேர் வரை வருவார்கள். இதனால் சின்ன தியேட்டர்களாகப் பார்த்து ரிலீஸ் பண்ணுவோம். ஆனால் இது சூப்பர் ஸ்டார் படமாச்சே. எதிர்ப்பார்ப்பும் எக்கச்சக்கம். எனவேதான் இந்த பெரிய தியேட்டரில் வெளியிடுகிறோம். மிகக் குறுகிய நேரத்தில் 75 சதவீதம் டிக்கெட்டுகளை விற்றுவிட்டோம். அட, சில நார்வே மக்கள் கூட எந்திரனுக்கு டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நார்வேயைப் பொறுத்தவரை இது முன்னெப்போதும் நிகழாத சாதனைதான்…” என்றார். இந்த கொலோஸியம் அரங்கில் சிறப்புக் காட்சி முடிந்ததும், 300 இருக்கைகள் கொண்ட வேறு திரையரங்கில் எந்திரன் காட்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார். எந்திரன் படம் குறித்து வசீகரன் கூறுகையில், “நிச்சயம் இந்தப் படத்தால் தமிழ் சினிமாவுக்குப் பெருமை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேஜிக் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதல்ல. உலகம் முழுவதையும் வசீகரப் படுத்தும் சக்தி கொண்டவர் அவர். இந்தப் படம் மிகச் சிறந்த படைப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் உலக சினிமாவில் எந்திரன் புதிய சாதனைப் படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை,” என்றார் நன்றி :http://thatstamil.oneindia.in/movies/specials/2010/09/27-rajini-enthiran-released-europe-biggest-theater.html

திரையுலகம்

பகலவன்-தமிழீழப் போராளியாக விஜய்!

விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் பகலவன் படத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் சீமான். தமிழக மீனவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கியும் காயப்படுத்தி துன்புறுத்தியும் வரும் இலங்கை கடற்படையை கண்டித்து சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான். இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது போலீஸ். தற்போது அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சிறையில் இருந்தபடியே சில திட்டங்களைத் தீட்டியுள்ள சீமான், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வருகிறார். ஈழப்போரில் திராவிட கட்சிகள் ஆரியருக்கு உதவி செய்ததன் மூலம் ஈழத் தமிழர்களை எப்படியெல்லாம் கொன்றுகுவித்தது என்பதை விளக்கும் புத்தகம் ஒன்றை அவர் சிறைக்குள்ளேயே எழுதி வருகிறார். திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டு தொப்புள்கொடி உறவான தமிழர்களை அழிக்க, மறைமுகமாக ஆரியர்களுக்கு செய்த உதவிகள் என்னென்ன என்று விளக்கமாக அதில் எழுதியுள்ளார் சீமான். இப்புத்தகத்திற்கு “ஆரியம் வெல்ல…திராவிடம் செய்த உதவி” என்றே அவர் தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறையை விட்டு விடுதலையாகி வெளியே வந்ததும் இப்புத்தக வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார். அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் படத்தை மிகவும் பரபரப்பாக உருவாக்கப் போகிறார். இதற்கான திரைக்கதையை சிறைக்குள்ளேயே எழுதி முடித்துவிட்டார் சீமான். படத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் நிறையவே இருக்குமாம். தமிழீழப் போராளிகளை ஆதரிக்கும் இளைஞன் வேடத்தில் விஜய் நடிக்கிறார். சமீபத்தில் தன்னைக் காண சிறைக்கு வந்த பகலவன் பட தயாரிப்பாளர் தாணுவுக்கு திரைக்கதையை விவரித்துள்ளார் சீமான். அதில் சிலிர்த்துப் போன தாணு, தமிழீழ போராட்டத்துக்கு தனது பங்களிப்பாக இந்தப் படம் அமையும் என்று கூறியுள்ளார். சீமான் விடுதலையானதும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம். தணிக்கைக் குழுவினரின் கெடுபிடியையும் மனதில் கொண்டு மிக எச்சரிக்கையுடன் இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார் தம்பி சீமான் என்று தாணு குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தியுடன் சந்திப்பு, அசின் விவகாரம் போன்றவற்றால் விஜய்க்கு தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்கவும் இந்தப் படம் உதவும் என நம்புகிறார்கள். இந்தப் படப்பிடிப்பு நடக்கும்போதே, நாம் தமிழர் கட்சியின் பிரமாண்ட மாநாட்டை நடத்தி தனது பலத்தைக் காட்டவும் முடிவு செய்துள்ளார் சீமான். நன்றி : http://narumugai.com/?p=13492

திரையுலகம்

மங்காத்தா-அதிரடி அறிவிப்பு

அஜித் நடிக்கும் மங்காத்தா படத்தின் படபிடிப்பு தொடங்குமுன்பே அதைப் பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பூச்சாண்டி காட்டியது போதும் என்று நினைத்தாரோஎன்னவோ, மங்காத்தா படப்பிடிப்பை அடுத்த மாதம் 20-ம் தேதி முதல் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்காக தல அஜீத் புது கெட்அப்பில் வருகிறாராம். அதை பார்க்க வேண்டுமென்றால் பட்பிடிப்பு வரை காத்திருக்க வேண்டும் என்று வெங்கட் பிரபு சஸ்பென்ஸ் வைக்கிறார். மேலும், இது எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியும் கிடையாது. இது சொந்தமாக எழுதிய சுத்தமான ஒரிஜினல் அக்மார்க் கதை. இதன் படப்பிடிப்பு பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடக்கவிருக்கிறது என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். மங்காத்தாவில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா, லட்சுமி ராய், வேதிகா என்று மூன்று பேர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி :http://narumugai.com/?p=13502

திரையுலகம்

வேலாயுதத்துக்கு அடுத்து… விரைவில் விஜய் அறிவிப்பு!

வேலாயுதம் படத்துக்குப் பிறகு விக்ரம் குமார் இயக்கும் படத்திலும், அதற்கடுத்து சீமான் இயக்கத்தில் பகலவனிலும் நடிக்கிறார் விஜய். இந்த இரு படங்களையும் குறுகிய காலத்தில் முடித்து வெளியிடவேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய் நடித்த காவலன் படம் தீபாவளிக்குப் பிறகு வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்ததாக ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு யாவரும் நலம் விக்ரம் குமார் இயக்குகிறார். நடிகர் விக்ரம் நடிக்கவிருந்த படம் இது. ஏ எம் ரத்னம் தயாரிக்கிறார். தனக்கு கில்லி என்ற பெரிய வெற்றிப் படம் தந்த ரத்னத்துக்கு உதவி, விஜய் தானாகவே முன்வந்து நடித்துத் தரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முடிந்ததும் சீமான் இயக்கத்தில் பகலவனில் நடிக்கிறார். இதற்கிடையே 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படம் எப்போது துவங்கும் என்பது குறித்து ஏதும் ஐடியா இல்லாததால், கைவசம் உள்ள படங்களை முடிப்பதில் வேகம் காட்டுகிறார் விஜய். 2011-ல் இவற்றை முடித்துவிட்டு இரண்டு பெரிய பட்ஜட் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். நன்றி : http://thatstamil.oneindia.in/movies/specials/2010/09/26-vijay-velayutham-kaavalan-line-up.html

Scroll to Top