திரையுலகம் எந்திரன் – ஐஸ்வர்யாராய் பேட்டி

எந்திரன் – ஐஸ்வர்யாராய் பேட்டி

enthiran

நம் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நடிகைகளால் திருமணத்திற்கு முன்பு வரைதான் நாயகியாக வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

என்னைப் பொறுத்த வரை திருமணத்திற்கு முன்பு இருந்த வரவேற்பு திருமணத்திற்கு பிறகும் இருக்கிறது. டைரக்டர்களும் எந்தவித பயமும் இல்லாமல் பிரமாண்ட படங்களில் நடிக்க வைக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடிப்பேன். எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இதனால்கூட எனது படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன்.

எனக்கு ரஜினிசாரின் ஸ்டைல், நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த நிறைய தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் அவரது ஸ்டைல் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கேமரா முன்பு அவர் சிறிது தூரம் நடந்து சென்று “டக்”கென திரும்பி லேசாக ஒரு சிரிப்பு சிரிக்கும்போது நம்மை அறியாமல் கைதட்ட தோன்றும். நடிப்பில் அப்படி ஒரு ஈர்ப்பு. வசீகரம்.

இதனால்தான் ரசிகர்கள் அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் விசில் அடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். அவரிடம் இருந்து நான் நடிப்பில் நிறைய டெக்னிக்குகள் கற்றுக்கொண்டேன். அவருடன் படப்பிடிப்பில் இருந்தபோது கண்ணாடியை சுழற்றி மாற்ற பழக முயன்றேன். ஆனால் அவர் செய்யும் கண்ணாடி சுழற்றும் ஸ்டைல் எனக்கு சுத்தமாக வரவில்லை.

ஒருவேளை நான் இதை கற்றிருந்தால் கணவர் அபிஷேக்பச்சனுக்கும் சொல்லி கொடுக்கலாம் என்று நினைத்தேன். அது முடியாமல் போய்விட்டது. எனது குரு டைரக்டர் ஷங்கர். அவருடன் ஜீன்ஸ் படத்தில் பணியாற்றிய போது எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருந்தாரோ அதேபோல் தற்போதும் இருக்கிறார். அவருக்கு சினிமா தொழிலில் அதிக வெறி உள்ளது. அவர் இன்னும் நிறைய சாதிப்பார்.

டைரக்டர் மணிரத்னம் சாரின் இயக்கத்தில் நடித்த ராவணன் படம் தோல்வி அடைந்தது. படத்தில் எனக்கு அளித்த பாத்திரத்தில் நன்றாக நடித்தேன். அதில் மன நிறைவு இருந்தது. ஆனால் ரசிகர்கள் இப்படத்தை ஏற்கவில்லை. எந்த படமும் வெற்றி பெற வேண்டுமானால் ரசிகர்களுக்கு கதை பிடிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் தீர்ப்பை நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி