பூலோகம்

செய்திகள், திரையுலகம்

அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…

சென்னை:-சித்தியுடன் பிரச்சினை, டைரக்டர் களஞ்சியத்துடன் பிரச்சினை போன்ற காரணங்களால் அவர் இனிமேல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடிப்பார். தமிழுக்கு வர மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுராஜ் இயக்கும் ஜெயம்ரவி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் அஞ்சலி. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் அஞ்சலி. இதே படத்தில் இன்னொரு மாடர்ன் ரோலுக்கு நடிகை தேடி வந்தவர்கள், மெட்ராஸ் படத்தில் நடித்துள்ள கேத்ரின் தெரசாவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், அது ரொம்ப மெச்சூரிட்டியான வேடம். தமிழில் இன்னும் கேத்ரின் தெரசா நடித்த படமே வெளியாகாத நிலையில், அவரை நம்பி பவர்புல் வேடத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் இப்போது அந்த படத்துக்கு திரிஷாவை புக் பண்ணியுள்ளனர். ஏற்கனவே ஜெயம்ரவியுடன் பூலோகம் படத்தில் த்ரிஷா நடித்திருப்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி எதிர்பாராதவிதமாக த்ரிஷா அப்படத்தில் கமிட்டாகியிருப்பதால் பலத்த அதிர்ச்சியில் இருக்கிறார் அஞ்சலி. காரணம், அவர் தன்னை விட பெரிய நடிகை என்பதோடு வெயிட்டான வேடத்தில் நடிப்பதால், ஏற்கனவே தான் த்ரிஷாவுடன் நடித்த மங்காத்தா படத்தைப்போன்று இந்த படத்திலும் அவரே முக்கிய நாயகியாகி தன்னை ஓரங்கட்டி விடுவாரோ என்று கடும் கலவரத்தில் இருக்கிறார் அஞ்சலி.

செய்திகள், திரையுலகம்

மீண்டும் இணையும் ஜெயம் ரவி, திரிஷா கூட்டணி!…

சென்னை:-உனக்கும் எனக்கும் படத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட, பெரிதும் பேசப்பட்ட காதல் ஜோடி ஜெயம் ரவியும், திரிஷாவும் தற்போது பூலோகம் படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். வெகு நாட்களுக்கு பிறகு இந்த ஜோடியின் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் பூலோகம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, சுராஜின் அடுத்த படத்திலும் 3வது முறையாக இந்த ஜோடி ஒன்று சேர உள்ளது. பெரிடப்படாத இந்த புதிய படத்தில் நடிப்பதற்கு முதலில் காஜலையே சுராஜ் அனுகியதாகவும், ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காதால் பின்னர், கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்ரினை ஒப்பந்தம் செய்ததாகவும் பல கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்புக்கள் கடந்த மாதம் சென்னையில் துவங்கப்பட்டது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலியும் நடிக்கிறார். கோலிவுட்டில் தான் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு அந்த படம் மிகப் பெரிய ஹிட் கொடுக்கும் என த்ரிஷா நம்புவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள், திரையுலகம்

அஜீத் படத்தை முன்வைத்து பட அதிபர்களை மிரட்டும் நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றென்றும் புன்னகை. ஜீவாவுடன் அவர் நடித்த அந்த படத்தையடுத்து ஜெயம்ரவியுடன் பூலோகம் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் ரவுடித்தனம் பண்ணிக்கொண்டு திரியும் ஜெயம்ரவியை ஒரு பாக்சராக உருவாக்கும் பவர்புல்லான வேடத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா. அதையடுத்து, இப்போது அஜீத்தின் 55வது படத்திலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். கதைப்படி இளவட்ட அஜீத்துக்கு ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார்.இந்நிலையில், வேறு புதிய படங்களில் இன்னும் கமிட்டாகாத த்ரிஷாவை, குயின் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க நடிகர் தியாகராஜன் அழைத்து பேசினாராம். அப்போது, ஜெயம்ரவி படத்தை அடுத்து, இப்போது தல அஜீத்துடன் நடிக்கிறேன். அதனால் என் மார்க்கெட் இன்னும் கெட்டியாகவே உள்ளது. அதனால், ஒன்னேகால் கோடி சம்பளம் தந்தால் நடிக்கிறேன் என்று முதல் சுற்று பேச்சுவார்த்தையிலேயே தனது நிலையை ஓப்பன் பண்ணி விட்டாராம் த்ரிஷா. அதைக்கேட்டு மிரண்டு போன தியாகராஜன், மேற்கொண்டு த்ரிஷாவிடம் எதுவும் பேசவில்லையாம். தொடர்ந்து பரிசீலனை நடக்கிறதாம்.

செய்திகள், திரையுலகம்

ஆகஸ்ட் மாதத்தை குறி வைக்கும் 37 படங்கள்!…

சென்னை:-சமீப காலமாக அதிக அளவில் படங்கள் தயாராகி வருகின்றன. தயாரான படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் அதிகரித்து வருகிறது. தியேட்டர் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு அடுத்த மாதத்தைக் குறி வைத்து 37 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. கடந்த 18ம் தேதி வெளியான வேலையில்லா பட்டதாரி படமும் சதுரங்க வேட்டையும் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் 25ம் தேதி வெளியாக வேண்டிய சில படங்கள் அடுத்த மாதத்துக்குத் தள்ளிப்போனது. அவற்றையும் சேர்ந்து, அஞ்சான், காவியத்தலைவன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், வானவராயன் வல்லவராயன், 49 ஓ, கன்னக்கோல், சண்டியர், சரபம், ஜிகிர்தண்டா, பட்டைய கிளப்பணும் பாண்டியா, சிநேகாவின் காதலர்கள், ஆள், பூலோகம், பரணி, ஆ, தகடு தகடு, மொசக்குட்டி, சேர்ந்து போலாமா, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, வாலிப ராஜா, அரண்மனை, வாலு, மெட்ராஸ், கங்காரு, புலிப்பார்வை, இரும்புக்குதிரை, சலீம், காதலைத்தவிர வேறொன்றுமில்லை, வெண்நிலா வீடு, சோன்பப்டி, திருடன் போலீஸ், தொட்டால் தொடரும், பூலோகம், கடவுள் பாதி மிருகம் பாதி, காமராஜர் மற்றும் ஆங்கிலப் படங்களான ஹெர்குலீஸ் ரிட்டர்ன், தி எக்ஸ்பெண்டபிள் 3 ஆகிய 37 படங்கள் ஆகஸ்ட் மாத ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இன்னும் சில டப்பிங் படங்களும் இந்த லிஸ்டில் சேரும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த மாதம் பெரிய படமான அஞ்சான் ரிலீஸ் ஆவதால் அதற்கு முன்போ பின்போ படத்தை ரிலீஸ் செய்ய பலர் நினைக்கின்றனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

மீண்டும் தள்ளிப்போனது பூலோகம் வெளியீடு!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்த பூலோகம் படம் முடிவடைந்து பல மாதங்களாக வெளிவராமலே இருந்தது. இது குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனை சந்தித்து நியாயம் கேட்கச்சென்ற ஜெயம்ரவியை சந்திக்காமலே திருப்பி அனுப்பினார் ரவி. அதன் பிறகு ஜெயம்ரவியின் அப்பாவான எடிட்டர் மோகன் இதுகுறித்து ஆஸ்கார் ரவியுடன் பஞ்சாயத்து பண்ணியதில், இம்மாதம் பூலோகம் படத்தை வெளியிடுவதாக உறுதியளித்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு இம்மாதம் வெளியீடு என்று பூலோகம் படத்தின் விளம்பரங்கள் நாளிதழ்களில் வந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் அதே பட நிறுவனம் தயாரித்த திருமணம் எனும் நிக்காஹ் படமும் இம்மாதம் ரிலீஸ் என்று சொல்லப்பட்டு வந்தது. பூலோகம், திருமணம் எனும் நிக்காஹ் இரண்டில் ஏதாவது ஒரு படத்தை மட்டுமே இம்மாதம் வெளியிட முடியும் என்ற நிலை ஏற்பட்டதும், திருமணம் எனும் நிக்காஹ் படத்தை ஜூலை 24 அன்று வெளியிடுவது என்று முடிவெடுத்துவிட்டார் தயாரிப்பாளர். எனவே பூலோகம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போடப்பட்டுவிட்டது. ஜூலை 24 அன்று வெளியாகவிருக்கும் திருமணம் எனும் நிக்காஹ் படம் வெற்றியடைந்தால் அடுத்த ஓரிரு வாரங்களில் பூலோகம் படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை திருமணம் எனும் நிக்காஹ் வெற்றியடையாவிட்டால் பூலோகம் படத்தை மீண்டும் கிடப்பில் போட்டுவிடுவார் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

செய்திகள், திரையுலகம்

நயன்தாராவுடன் சேர்ந்து கெட்டுப்போன நடிகை திரிஷா!…

சென்னை:-முன்பெல்லாம் தான் நடிக்கிற படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அவசியம் வந்து விடுவார் திரிஷா. ஆனால் நடிகை நயன்தாரா தான் நடிக்கிற படங்களின் எந்த விழாக்களிலும் பங்கேற்காததைப் பார்த்து இப்போது த்ரிஷாவும் டேக்கா கொடுத்து வருகிறார். ஆனால் இப்படி தாங்கள் நடிக்கிற படங்களை புறக்கணிக்கும் இந்த நடிகைகள் இரண்டு பேரும் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யா தயாரித்துள்ள அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார்கள். இவர்கள் இரண்டு பேருக்குமே எந்த விதத்தில் சம்பந்தம் இல்லாத அந்த படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டதோடு, அது எங்கள் குடும்ப விழா என்றும் மார்தட்டிக்கொண்டனர். இதைக்கேட்டு கோடம்பாக்கத்திலுள்ள பல டைரக்டர்கள், தயாரிப்பாளர்களும் மேற்படி நடிகைகள் மீது காண்டாகி உள்ளனர். இந்தநிலையில், ஜெயம்ரவிக்கு ஜோடியாக தான் நடித்துள்ள பூலோகம் படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தது, அதில் திரிஷா கலந்து கொள்ளவில்லை. அதுபற்றி ஜெயம்ரவியிடம் கேட்டதற்கு, அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவரை அங்கிருந்து அழைத்து வரவேண்டுமென்றால் செலவு செய்ய வேண்டுமே என்றுதான் விட்டு விட்டோம் என்று சமாளித்தார்.திரிஷாவின் இந்த போக்கு கோடம்பாக்கத்தில் அவருக்கான எதிர்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.

செய்திகள், திரையுலகம்

நடிகர் ஜெயம் ரவியை அவமானப்படுத்திய பிரபல தயாரிப்பாளர்!…

சென்னை:-ஜெயம் ரவி நடித்த பூலோகம் படம் விரைவில் வெளிவரவிருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இப்போதைக்கு வெளிவராது என்று சொல்லப்பட்ட பூலோகம் படம் வெள்ளித்திரைக்கு வர திடீரென வேகம் பிடித்ததற்கு பின்னால் பலருக்கும் தெரியாத ஒரு சம்பவம் இருக்கிறது.அது என்ன வென்றால், பூலோகம் படத்தில் நடித்து முடித்துவிட்டு, அது வெளிவராமல்போனதால் மனக்கஷ்டத்தில் இருந்த ஜெயம் ரவி இது பற்றி பேசுவதற்காக பூலோகம் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவியை சந்திக்க சென்றிருக்கிறார். தன் வருகையை ஏற்கனவே தெரிவித்துவிட்டு சென்ற ஜெயம் ரவியை, என்ன காரணத்தினாலோ சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்திருக்கிறார் ஆஸ்கார் ரவி. அதன் பிறகும் அவரை சந்திக்காமல், தற்போது பிஸியாக இருப்பதாகவும், பிறகு தானே போனில் பேசுவதாகவும் ஆபிஸ்பையனிடம் சொல்லி அனுப்பி உள்ளார் ஆஸ்கார் பிலிம்ஸ். அவமானத்தில் முகம் சிவந்துபோன ஜெயம்ரவி கிளம்பி வந்து தன் அப்பா எடிட்டர் மோகனிடம் சொல்ல, அவர் போனிலேயே ஆஸ்கார் ரவியை வறுத்தெடுத்திருக்கிறார். அதன் பிறகு தன் செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஆஸ்கார் ரவி, பூலோகம் படத்தை விரைவில் வெளியிட முயற்சி செய்வதாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகே பூலோகம் படத்தை வெள்ளித்திரைக்குக் கொண்டு வரும் வேலையில் இறங்கி உள்ளனர்.

செய்திகள், திரையுலகம்

பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் பேனரில் தற்போது தயாராகியுள்ள படங்கள் ஐ, பூலோகம். இந்த படங்கள் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு திரைக்கு வரத் தயாராக உள்ளன. இதில் ஜெயம் ரவி நடித்துள்ள பூலோகம் படத்தில் ஜெயம்ரவி வடசென்னை பாக்சராக நடித்திருப்பது போன்று, ஐ படத்தில் விக்ரமும் பாக்சராகத்தான் நடித்துள்ளாராம். ஆனால் பூலோகம் படத்தில் பாக்சிங் சண்டையை மையப்படுத்தியே கதை செல்ல, ஐ படத்திலோ மருத்துவ துறையில் நடைபெறும் ஊழல்களை படமாக்கியிருக்கிறாராம் ஷங்கர். இந்த விதத்தில்தான் இரண்டு படமும் வேறுபடுகிறதாம்.அதோடு, ஜெயம்ரவி நடிக்கும் பூலோகம், 25 கோடியில் தயாராகியிருக்கிறது. ஆனால் விக்ரமின் ஐ படமோ 100 கோடியை எகிறி விட்டதாம்.

செய்திகள், திரையுலகம்

ஹீரோயின் வாய்ப்புக்காக எடை குறைத்த நடிகை!…

சென்னை:-அஜீத் நடித்த ஆழ்வார் படத்தில் அவரது தங்கையாக நடித்தவர் ஸ்வேதா. அதன் பிறகு வள்ளுவன் வாசுகி, மீராவுடன் கிருஷ்ணா, இதயம் திரையரங்கம் படத்தில் நடித்தார். கடைசியாக நடித்த நான்தான் பாலா படம் சமீபத்தில் ரிலீசானது. சற்று எடை கூடுதாக இருந்த ஸ்வேதாவுக்கு அதனாலேயே பல படவாய்ப்புகள் பறிபோனது. இதனால் தனது எடையை 5 கிலோ வரை குறைத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-கூடுதல் எடையால் சில வாய்ப்புகள் தவறியது உண்மைதான். அந்த கேரக்டருக்கு ஒல்லியான பெண் வேண்டும் என்பதால்தான். இப்போது 5 கிலோ வரை எடை குறைத்து விட்டேன். பயணங்கள் தொடரும், கம்பன் கழகம், வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறேன். பூலோகம் படத்தில் டி.வி. நிருபராக நடித்திருக்கிறேன். இதுவரை குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து வந்தாலும் தொடர்ந்து மார்டன் கேரக்டர்களிலும் நடிப்பேன். என்கிறார் ஸ்வேதா.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஐ, ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம், ஜெய் நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. அதோடு, கமல் நடிக்கும் விஸ்வரூபம்-2 படத்தையும் பல கோடி செலவில் தயாரித்து வருகிறது ஆஸ்கார் பிலிம்ஸ். இந்நிலையில், ஆஸ்கார் பிலிம்ஸுக்கு பிரபல வங்கி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் அடிபடுகிறது. ஐ, விஸ்வரூபம்-2 படங்களின் பேரில் அந்த வங்கியில் பல ஆயிரம் கோடி வாங்கினாராம் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி. கடன் வாங்கியபோது 2014 ஜனவரியில் விஸ்வரூபம்-2 ரிலீஸ் என்றும், 2014 ஏப்ரலில் ஐ படம் ரிலீஸ் என்றும் சொன்னாராம். அவர் சொன்னபடி இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆகவில்லை. எனவே பணத்தை திரும்ப செலுத்தினால் தான் ஐ, விஸ்வரூபம்-2 உட்பட ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களை ரிலீஸ் பண்ண முடியும் என்ற சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். பணத்தை செலுத்தாதவரை மேற்கண்ட படங்களை வெளியிட முடியாதபடி வங்கி தரப்பிலிருந்து தடை ஆணை வாங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Scroll to Top