செய்திகள்,திரையுலகம் பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…

பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…

பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!… post thumbnail image
சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் பேனரில் தற்போது தயாராகியுள்ள படங்கள் ஐ, பூலோகம். இந்த படங்கள் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு திரைக்கு வரத் தயாராக உள்ளன. இதில் ஜெயம் ரவி நடித்துள்ள பூலோகம் படத்தில் ஜெயம்ரவி வடசென்னை பாக்சராக நடித்திருப்பது போன்று, ஐ படத்தில் விக்ரமும் பாக்சராகத்தான் நடித்துள்ளாராம்.

ஆனால் பூலோகம் படத்தில் பாக்சிங் சண்டையை மையப்படுத்தியே கதை செல்ல, ஐ படத்திலோ மருத்துவ துறையில் நடைபெறும் ஊழல்களை படமாக்கியிருக்கிறாராம் ஷங்கர். இந்த விதத்தில்தான் இரண்டு படமும் வேறுபடுகிறதாம்.அதோடு, ஜெயம்ரவி நடிக்கும் பூலோகம், 25 கோடியில் தயாராகியிருக்கிறது. ஆனால் விக்ரமின் ஐ படமோ 100 கோடியை எகிறி விட்டதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி