அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தி.மு.க கூட்டணியில் நீடிப்பது குறித்து திருமாவளவன் பேட்டி…!

தி.மு.க கூட்டணியில் நீடிப்பது குறித்து திருமாவளவன் பேட்டி…!

தி.மு.க கூட்டணியில் நீடிப்பது குறித்து திருமாவளவன் பேட்டி…! post thumbnail image
சென்னை :- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. முன்னதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கல்வி உரிமை மாநாடு சேலத்தில் ஆகஸ்டு 17–ந்தேதி நடைபெறுகிறது. இதில் தனியார் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு, அரசாணை –92 நடைமுறைபடுத்துதல், தமிழ்வழி கல்வி, ஆதிதிராவிடர் பள்ளிகளை சிறப்பு பள்ளிகளாக மேம்படுத்துதல் பற்றி விளக்கப்படும். தற்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறோம்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதா? தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து ஆகஸ்டு மாதம் 20–ந்தேதிக்கு மேல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்து உள்ளேன்.

கட்சியை மறுசீரமைக்கவும், புதிய உறப்பினர்களை சேர்க்கவும் திட்டமிட்டு உள்ளோம். ஜூலை 4–ந்தேதி தருமபுரி இளவரசன் நினைவேந்தல் நாளாகும். அந்த நிகழ்ச்சிக்கு செல்ல தமிழக அரசு தடை போடுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதை திரும்ப பெற வேண்டும், தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டிக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள், மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்து கொள்ள அனுமதி தரவேண்டும். கச்சத்தீவு விவாகரத்தில் கடந்த அரசு எடுத்த முடிவையே இந்த அரசும் எடுத்து வருகிறது. இதை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி