இதர பிரிவுகள்

இதர பிரிவுகள்

இதர பிரிவுகள், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் !! `நான்தான் எஸ்.ஐ பாண்டியன்’…

சென்னை செங்குன்றத்தில் போலீஸ் சீருடையில் சென்ற கூலிப்படையினர், லாரி அதிபர் கணேசன் என்பவரை கடத்தினர். துரிதமாகச் செயல்பட்டு கடத்தல் கும்பலை போலீஸார் கைதுசெய்தனர். சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கணேசன். லாரி அதிபர். அதோடு, பல பிசினஸ் செய்துவருகிறார். கடந்த 2-ந் தேதி இரவு கணேசன் வீட்டுக்கு 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தார். போலீஸ் சீருடையில் இருந்த நபர், `தன்னை எஸ்.ஐ., பாண்டியன் என்று கணேசனிடம் அறிமுகம்செய்துகொண்டார். பிறகு, உங்கள் லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும்’ என்று கூறி காரில் அவரை அழைத்துச்சென்றனர். போலீஸ் நிலையத்துக்குச் செல்லாமல் கார் வேறு இடத்துக்குச் சென்றது. இதனால் கணேசன், காரில் இருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார். உடனே, காரில் இருந்தவர்கள் கணேசனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். வீட்டை விட்டுச் சென்ற கணேசனைக் காணவில்லை என்று அவரின் உறவினர்கள் செங்குன்றம் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸார் விசாரித்தனர். இந்த நிலையில், கணேசனின் செல்போனிலிருந்து அவரின் வீட்டுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நாங்கள்தான் கணேசனைக் கடத்தியுள்ளோம். 25 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், கணேசனைக் கொலைசெய்து தலையை வீட்டின் வாசலில் போட்டுவிட்டுச் சென்றுவிடுவோம் என்று மிரட்டினர். இதைக்கேட்ட கணேசனின் உறவினர்கள் பீதியடைந்தனர். இந்தத் தகவலை போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக கடத்தல் கும்பலை பொறி வைத்துப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தைக் கொடுக்க கணேசனின் உறவினர்கள் சம்மதித்தனர். அதன்படி கடத்தல்காரர்கள் கூறிய இடத்துக்கு பணத்துடன் சென்றனர். அப்போது, அங்கு வந்த நான்கு பேரை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்தனர். அதோடு, இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரையும் போலீஸார் பிடித்தனர். அவர்களிடமிருந்து கணேசனையும் போலீஸார் மீட்டனர். பிடிப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி, அவர்களைக் கைதுசெய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கணேசனின் வீட்டுக்கு போலீஸ் சீருடையில் சென்றவர் திருப்போரூரைச் சேர்ந்த சுமன். 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர்தான் இந்த கடத்தலுக்குத் திட்டம் வகுத்தவர். கடத்தலுக்கு தலைவனாகச் செயல்பட்டது, செங்குன்றம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்த வடகரை சக்தி, கடத்தலுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர். செங்குன்றத்தைச் சேர்ந்த சிவா, எண்ணூரைச் சேர்ந்த மதன்குமார், ஆந்திராவைச் சேர்ந்த கணேஷ், குரோம்பேட்டையைச் சேர்ந்த அசோக், செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜேஷ், சதீஷ்குமார். இவர்கள் எல்லோரும் கூலிப்படையினர். இந்த வழக்கில் எட்டுப் பேரை கைதுசெய்துள்ளோம். இந்த வழக்கில் கந்தன் என்பவர் தலைமறைவாக உள்ளார். போலீஸ் சீருடையில் சென்று கணேசனைக் கடத்தியதுகுறித்து விசாரித்துவருகிறோம். மேலும் சுமன், சிறுவயதில் கணேசனிடம் வேலைபார்த்துள்ளார். இதனால், அவரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதைப் பார்த்த சுமன்தான் கடத்தலுக்குத் திட்டம் போட்டுள்ளார். கடத்தல் கும்பலிடமிருந்து கத்தி, போலீஸ் சீருடை, கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்” என்றனர். போலீஸ் சீருடையில் லாரி அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

இதர பிரிவுகள், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

துணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்!

சென்னை அண்ணாநகரில் திருடனைத் துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். சென்னை அண்ணாநகரில் பெண் டாக்டர் ஒருவரிடம் நோயாளிபோல வந்த திருடன் அவரின் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பினார். டாக்டரின் அலறல் சத்தம் கேட்டு திருடனை தனியொருவனாக விரட்டிச் சென்று அண்ணாநகரைச் சேர்ந்த சிறுவன் சூர்யா மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். இந்தத் தகவலையறிந்த கமிஷனர் ஏ.கே.விஸ்வாநாதன், சூர்யாவை நேரில் அழைத்து பாராட்டினர். அப்போது அவருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட டாக்டரும் சிறுவன் சூர்யாவை பாராட்டியதோடு வெகுமதியும் கொடுத்தார். சூர்யா, நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் சிரமப்படுவதாக விகடன் டாட் காமில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்தநிலையில் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக் பணியை பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சம்பவம் நடந்தபோது சிறுவன் சூர்யாவுக்கு 17 வயது. இதனால் அவரை எந்த வேலையிலும் சேர்க்க இயலாது. இதனால், 18 வயது வரை காத்திருந்தோம். அவருக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் தனியார் நிறுவனத்தில் சிபாரிசு செய்து ஏ.சி மெக்கானிக் வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்” என்றனர். இந்தப் பணியில் சேர்ந்த சூர்யாவுக்கு பணிக்கான ஆர்டரை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதில் தனியார் நிறுவன சீருடையுடன் வந்த சூர்யாவுக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில், சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவள மேம்பாட்டுத்துறை) சீனிவாசன் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வழங்கினார். தொடர்ந்து, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் சார்பில் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. மேலும், தனியார் கல்விக்குழுமம் சார்பில் ஒரு லட்சத்துக்கான காசோலையும் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஜெயராம், தெற்குமண்டல கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் (மேற்கு) விஜயகுமாரி, அண்ணா நகர் துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதர பிரிவுகள், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்… தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு

சென்னை ராயப்பேட்டையில் தகராறு நடக்கும் இடத்துக்கு தனி ஒருவனாகச் சென்ற காவலர் ராஜவேலுவை ரவுடிக் கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போன் கால் வந்தது. அதில் பேசியவர், `ராயப்பேட்டை பி.எம். தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகில் உள்ள பகுதியில் சில ரவுடிகள் மது அருந்திக்கொண்டு அவ்வழியாகச் செல்பவர்களிடம் தகராறு செய்துகொண்டிருக்கின்றனர்’ என்று கூறினார். தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட முதல்நிலை காவலர் ராஜவேலுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்றார். அப்போது, அங்கு சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து செல்லும்படி ராஜவேலு கூறியுள்ளார். அப்போது, தனியாக சிக்கிக்கொண்ட காவலர் ராஜவேலுவை மது அருந்தியவர்கள் தாக்கினர். அவர்களுடன் ராஜவேலு, தனியொருவனாகப் போராடினார். ஆத்திரமடைந்த அந்தக்கும்பல் அரிவாள், கத்தியால் ராஜவேலுவை சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் அந்தக்கும்பல் ஆட்டோவில் தப்பியது. உயிருக்குப் போராடிய ராஜவேலுவை மீட்ட போலீஸார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜவேலுவின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன. மேலும் அவரின் இடது காது, கன்னத்தில் தலா ஒரு வெட்டுக்காயம் உள்ளது. ராஜவேலுவைத் தாக்கியவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர். அவர்கள், ராயப்பேட்டை காவல் நிலைய ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் உள்ள அரவிந்தன் மற்றும் அவரின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது. தொடர்ந்து, ராஜவேலுவைத் தாக்கிய அரவிந்தன், ஜிந்தா, வேல்முருகன் உள்பட 6 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். கம்பீரம்’ படத்தில் நடிகர் வடிவேலு, கலவரத்தைக் கட்டுப்படுத்த வித்தியாசமான கெட்டஅப்பில் சென்று ஒரு கும்பலிடம் சிக்கிக் கொள்வார். அதுபோலத்தான் ராஜவேலு, தனியாகச் சென்று ரவுடி கும்பலிடம் சிக்கியுள்ளார். சமீபகாலமாக போலீஸாரைத் தாக்கும் சம்பவம் தொடர்கதையாகிவருகிறது. இதனால், பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றும் நிலையில், சென்னை மாநகரக் காவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதர பிரிவுகள், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்..!

திருமணத்திற்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 27 வயதான பிரியங்கா என்பவர் பணியாற்றி வந்தார் …ஆந்திரவை சேர்ந்த இவர் வேலைநேரம் முடிந்த பிறகு அலுவலகத்தில் 9 மடியில் இருந்து கீழே குதித்தார்…ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் உடனே மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரியங்கா உயிரிழந்தார் ….. காவல்துறை உடலை பிரேதப் பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் . கடந்தவாரம் ப்ரியங்காவின் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததே காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை தரப்பினர் கூறுகின்றனர்..

இதர பிரிவுகள், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

இந்தியர்களை குறி வைத்து தற்கொலை தாக்குதல்: ஆப்கனில் 20 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதிலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை இனத்தவர் வசித்து வருகின்றனர். பேரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் நாட்டிற்கு இந்தியா பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நாட்டில் வரும் அக்டோபர் மாதத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இத்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் சீக்கிய மற்றும் இந்துக்கள் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் ஜலலாபாத் நகரில் மருத்துவமனை கட்டத்தை திறப்பு விழாவில் நாட்டின் அதிபர் அஷ்ரப் கானி கலந்து கொண்டார். அவர் சென்ற சில மணி நேரங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.சம்பவத்தில்20 பேர் கொல்லப்பட்டனர். கடைகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை இனத்தவரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மேலும் பொது தேர்தலில் போட்டியிடும் சீக்கிய வேட்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார் என கறினார்.இந்தியர்கள் மீதான தாக்குதலை உறுதிபடுத்தி உள்ள ஆப்கானில் உள்ள இந்திய தூதரகம் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு உலகளாவிய போராட்டம் தேவை என்பதை இந்த தாக்குதல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது “என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இது வரையில் பொறுப்பேற்கவில்லை.

இதர பிரிவுகள், செய்திகள், முதன்மை செய்திகள்

`ஒரு இரும்புத் துண்டு… ஒரு தீக்குச்சி …’ – போலீஸைக் கலங்கடித்த ஏ.டி.எம் கொள்ளையர்களின் வாக்குமூலம்

சிறிய அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவை மூலம் ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவர், எழிலகம் வளாகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முயன்றார். அப்போது இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை. ஆனால், வங்கி அக்கவுன்ட்டில் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ். வந்தது. இதுகுறித்து வங்கியிலும் அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திலும் சீனிவாசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை நடத்தினார். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து சீனிவாசன் மட்டுமல்லாமல் இன்னும் சிலரும் பாதிக்கபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம் முன்பு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அடிக்கடி இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் செல்லும் தகவல் கிடைத்தது. அவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போதுதான் ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து நூதன முறையில் பணத்தை அவர்கள் எடுப்பது தெரியவந்தது. அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். இதற்காக அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, வடமாநில வாலிபர்களின் குட்டு வெளிப்பட்டது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் மையத்தில் கடந்த மூன்று மாதங்களாக மப்டியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஏ.டி.எம் மையத்துக்கு வருபவர்களை இரண்டு வடமாநில வாலிபர்கள் பின்தொடரும் தகவல் கிடைத்தது. இதனால் அந்த வாலிபர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தோம். அப்போது, ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுப்பவர்களுடன் வாலிபர்கள் பேசுவது சிசிடிவி வீடியோ பதிவு மூலம் தெரிந்தது. அடுத்து, பணம் எடுக்க வருபவர்கள் சென்றபிறகு அந்த ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து ஏதோ ஒன்றை அவர்கள் எடுப்பதும், பிறகு பணத்தைப் பெறுவதும் சிசிடிவி வீடியோவில் தெரிந்தது. இதனால் அந்த வாலிபர்களை மடக்கிப்பிடித்தோம். அவர்களிடம் விசாரித்தபோது, பீகார் மாநிலம், கயா மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர்குமார், முன்னாகுமார் என்று தெரிந்தது. அவர்கள் இருவரும் பட்டதாரிகள். பீகாரிலிருந்து விமானத்தில் சென்னை வந்து, ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கைவரிசை காட்டிவருவது தெரிந்தது. கொள்ளையடிப்பது எப்படி என்று அவர்கள் தெரிவித்த தகவல் எங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் இடத்தைத்தான் முதலில் இவர்கள் தேர்வு செய்வார்கள். அதுவும் பழைய ஏ.டி.எம். இயந்திரங்களில்தாம் எளிதில் கைவரிசை காட்ட முடியும். பணத்தை எடுக்க வரும் வாடிக்கையாளரைப் பின்தொடரும் இவர்கள், அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதைப் போல நீண்ட நேரம் காத்திருப்பார்கள். ஆனால், அருகில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுப்பவரைக் கண்காணித்து அவர்களின் பாஸ்வேர்டு ஆகியவற்றை மனதில் பதியவைத்துக் கொள்வார்கள். அதற்கு முன்பு, ஏ.டி.எம் இயந்திரத்தின் கீ போர்டில் சிறிய அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, சிறிய அளவிலான மருந்து அட்டை ஆகியவற்றை நுழைத்துவிடுவார்கள். இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டை தேய்த்தவுடன், பாஸ்வேர்டை கீபோர்டில் போடும்போது அது வொர்க் ஆகாது. இதனால் இயந்திரம் பழுது என்று கருதி வாடிக்கையாளர் வெளியில் சென்றுவிடுவார்கள். உடனடியாக இவர்கள், கீ போர்டில் உள்ள இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டைகளை வெளியில் எடுத்துவிட்டு பாஸ்வேர்டை டைப் செய்து பணத்தை எடுத்துக்கொள்வார்கள். இதுதான் இந்தக் கொள்ளையர்களின் ஸ்டைல். எழிலகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் மட்டுமல்லாமல் சென்னையில் பல இடங்களில் இவர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர். கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் மட்டும் 5 பேர் புகார் கொடுத்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை அவர்களின் அம்மா அக்கவுன்டில் போட்டுள்ளனர். அதை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்ததாக வடமாநிலக் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்” என்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களிடம் சிக்கிய வடமாநில ஏ.டி.எம் கொள்ளையர்கள் மனோகர்குமார், முன்னாகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் பழைய ஏ.டி.எம் இயந்திரங்களில்தான் இவர்கள் நூதன முறையில் கைவரிசைக் காட்டியுள்ளனர். சிந்தாரிப்பேட்டையிலும் இவர்கள் ஏ.டி.எம் இயந்திங்களில் கொள்ளையடித்ததாகக் கூறியுள்ளனர். இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ இதுபோன்று கொள்ளையடித்ததாகத் தெரிவித்துள்ளனர். இவர்களை பின்னாலிருந்து இயக்கும் நெட்வொர்க் குறித்து விசாரித்துவருகிறோம். வழக்கமாக ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் கொடுப்பதுண்டு. அவ்வாறு கொடுக்கப்படும் புகாருக்கு வங்கித் தரப்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால்தான் இந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்” என்றார். வழக்கமாக இரானியக் கொள்ளையர்கள்தாம் விமானத்தில் வந்து கொள்ளையடிப்பார்கள். அந்தப் பாணியை பீகார் மாநில ஏ.டி.எம் கொள்ளையர்கள் பின்பற்றியுள்ளனர். பீகாரிலிருந்து சென்னை வந்த மனோகர்குமார், முன்னாகுமார் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். அங்கிருந்து டிப் டாப் உடையணிந்து இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் மையங்களை முதலில் தேர்வு செய்துகொள்வார்கள். அதுவும் பழைய ஏ.டி.எம் இயந்திரங்களில்தாம் இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டைகளை நுழைக்க முடியும். புதிய ஏ.டி.எம் இயந்திரங்களில் டச் ஸ்கீரின் என்பதால் கொள்ளையடிக்க முடியாது என்றும் அவர்கள் போலீஸிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வங்கித் தரப்பில் பேசியவர்கள், “பொதுவாக ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வரவில்லை என்றால் கேன்சல் பட்டனை அழுத்திவிட்டு அங்கிருந்து வெளியில் வரவேண்டும். ஆனால், சில வாடிக்கையாளர்கள் அதைச் செய்வதில்லை. வாடிக்கையாளர்களின் கவனக்குறைவே கொள்ளையர்களுக்கு பிளஸ் பாயின்ட்டாக அமைகிறது. இப்படியும் கொள்ளையடிப்பார்களா என்று எங்களை யோசிக்க வைத்துள்ளது” என்றனர்.

இதர பிரிவுகள், செய்திகள், முதன்மை செய்திகள்

நக்சலைட்டாக மாறிவரும் குழந்தைகள் !! வீழும் நாடு…

புதுடில்லி : ஐ.நா., பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் பாதுகாப்பு படையினருடன் தாக்குதல் நடத்துவதற்காக நக்சலைட்கள் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து குழந்தைகளை தங்கள் இயக்கத்தில் சேர்க்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது புதிய யுக்தி இல்லை என சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது ஆயுத மோதலில் குழந்தைகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், இந்தியா, சிரியா, ஆப்கானிஸ்தான், ஏமன், பிலிப்பைன்ஸ், நைஜீரியா உள்ளிட்ட 20 நாடுகளில் நக்சலைட்கள் தாக்குதலுக்காக குழந்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் குலுக்கல் முறையில் குழந்தைகளை நக்சலைட்கள் தேர்வு செய்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை குழந்தைகள் மாவோயிஸ்ட் அமைப்புக்களில் சேர்ந்தனர் என்பது குறித்த புள்ளி விபரம் அளிக்கப்படவில்லை. ஆனால், குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுகின்றனர், 16 முதல் 18 வயதானவுடன் நக்சல்கள் அவர்களை தூக்கி சென்று விடுவதாக கூறப்படுகிறது. சிஆர்பிஎப் அதிகாரிகள் கூறுகையில், வீட்டில் ஒரு குழந்தையை தங்கள் இயக்கத்திற்கு கொடுத்து விடும்படி அங்கு வசிப்பவர்கள் நக்சல்களால் வற்புறுத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

இதர பிரிவுகள், செய்திகள், முதன்மை செய்திகள்

“நுண் கிருமி”களுக்கு “கெட் அவுட்” !!!..

நம்முடைய வீடுகளிலும் நோய் நுண் கிருமிகள் உள்ளன. நாம் சில சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறோம். அதாவது வீட்டை தினமும் சுத்தம் செய்தல், நோய் நுண் கிருமிகளை உருவாக்கும் பொருள்களை வீட்டில் இருந்து நீக்குதல் அல்லது அகற்றுதல், சலவை பொருட்களை (டிடர்ஜென்ட்டுகள்) பயன்படுத்துதல் மற்றும் தரையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவைகள். நாம் எவ்வளவு முன்னெச்சரிகையுடன் இருந்தாலும் கூட நம் வீட்டில் நோய் நுண் கிருமிகள் என்பது இருக்கும். சில இடங்களில் இந்த கிருமிகள் தேங்கி இவைகளை அழிக்க பயன்படுத்தப்படும் சுத்தம் செய்யும் மருந்து அல்லது இரசாயன நச்சு பொருட்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். தொந்தரவு தரும் இவ்வகையான நோய் நுண் கிருமிகளால் வீட்டில் பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொண்ட நோய் நுண் கிருமிகள் தங்கி உள்ள இடங்கள் சில சமயங்களில் நாம் நம் துணிகளை தொடர்ந்து துவைப்பதில்லை.அத்தகைய துணிகள் நம் அறை மூலையிலும் அல்லது குளியலறையின் மூலையிலும் குவிந்து கிடக்கும். இந்த துணிகள் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் கொண்ட நோய் நுண் கிருமிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. குவிக்கப்பட்ட அழுக்கு துணிகள் மற்றும் தேய்க்க வேண்டிய துணிகளிலும் தங்கி பெருகுகிறது, இதனால் இது கிருமிகளால் பாதிக்கப்பட்ட இடமாக வீடுகளில் உள்ளது. எப்பொழுதும் துணிகளை தொடர்ந்து துவைப்பது நல்லது, அதுவும் வியர்வை மற்றும் அழுக்கான துணிகளை உடனே துவைப்பது மிகவும் நல்லது. கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளை நாம் எவ்வளவு தான் சுத்தம் செய்து, இரசாயன மருந்துகளை பயன்படுத்தினாலும் கூட அது கிருமிகளை அழிப்பதற்கு போதுமானதாக இருப்பதில்லை. சில மூலை இடுக்குகள் இந்த நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்பட்டு சுத்தம் செய்யபடாமல் இருக்கின்றன. துண்டுகள் (டவல்) நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளன. கழிப்பறை இடங்கள் நோய் நுண் கிருமிகளால் முக்கியமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அதை கவனமாக சுத்தம் செய்தால் நோய் நுண் கிருமிகளில் இருந்தும் தொற்று நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது டூத் ப்ரஷ். டூத் பிரஷ் என்பது நேரடியாக நம்மால் உபயோகிக்கப்படும் ஒரு பொருள். இது நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்பட்டு நமக்கு எளிதில் நோயை பரப்பும். எனவே டூத் பிரஷை தினசரி உபயோகத்திற்கு பிறகு மூடி வைப்பது நல்லது. . துணி துவைக்க உதவும் பால்கனி, பாத்திரங்கள், இன்ன பிற பொருட்கள் போன்றவைகளையும் வீட்டில் கிருமிகளால் பாதிக்கப்பட்ட இடங்களே. பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் சுத்தம் இல்லாத துணி மற்றும் பாத்திரத்துடன் சேர்ந்து எல்லா இடத்தையும் பாதிக்கிறது. சுத்தம் செய்ய பயன்படும் சோப்பு நுரை, சுத்தம் செய்ய உதவும் ப்ரஷ், இன்ன பிற பொருட்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் பாதிக்கப்படுகிறது. இந்த உபகரணங்களை நன்கு சுத்தம் செய்து அதன் பின் உபயோகிக்க வேண்டும். பாக்டீரியா மற்றும் வைரஸ்களை ஒழிக்க பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களை உபயோக்கிக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். குப்பைத் தொட்டியை சுற்றி உள்ள இடமே ஒரு வீட்டில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நுண் கிருமிகளால் மிகவும் பாதிக்கப்படும் இடம். . இதுவே பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நுண் கிருமிகள் இனபெருக்கம் செய்ய சிறந்த இடமாக உள்ளது. எனவே தினமும் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து, அதை சுற்றி இருக்கும் இடத்தில் குப்பைகள் சேராமலும் அகற்ற வேண்டும். இடத்தை சுத்தமாகவும், தேவை இல்லாத குப்பைகள் சேராமலும் பார்த்துக் கொள்ளவும். அதே போல் குப்பைத் தொட்டியை மூடியும், சரியான இடைவெளியில் சுத்தம் செய்தும் வைக்க வேண்டும்.

இதர பிரிவுகள், செய்திகள், முதன்மை செய்திகள்

“ஆண்”களுக்கும் தேவை “அழகு” !!!…

ஒவ்வொரு ஆண் மகனுக்கும் ஷேவிங் செய்வது முழுமையான திருப்தியளிக்கும் விஷயமாகும். ஷேவிங் செய்த பிறகு தோலை மென்மையாக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். பெண்களைப் போல ஆண்களுக்கும் ஃபேஸியல் பேக் கிடைப்பதெல்லாம் இப்பொழுது சகஜமாகி விட்டது. மேலும், மென்மையான மற்றும் சமமான தோல் பகுதியை முகத்தில் கொண்ட ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது ஒரு ஆய்வு! ஷேவிங்கிற்குப் பின்னர், இயற்கையாக முகத்தைப் பராமரிக்க விரும்பினால் ஓட்ஸ், தயிர் ஆகியவற்றுடன் வெள்ளரிக்காயைச் சேர்த்து பயன்படுத்துங்கள். இவற்றை கலவையாக கலந்து தயாரிக்கப்படும் பேஸ்ட் உங்கள் முகத்தோலை குளுமைப்படுத்தவும் மற்றும் மென்மையாக மாற்றவும் செய்யும். ஷேவிங்கிற்குப் பிறகு, சுமார் 30 நிமிடங்களுக்கு இந்த கலவையை முகத்தில் போட்டிருந்தால் நல்ல பலன் கிடைக்கும். கடலை மாவு, பாதாம் எண்ணெய் மற்றும் தண்ணீருடன் சேர்த்து மஞ்சள் பொடியை சேர்த்து கலந்துவிட்டால் உங்களுக்கான ஆஃப்டர் ஷேவ் பேக் ரெடி. இந்த பேக் உங்கள் சருமத்தில் ஷேவிங்கின் போது ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதுடன், முகத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை ஷேவிங் செய்த பின்னும் பயன்படுத்த வேண்டிய பொருள் தேன் ஆகும். தேன் திறமையுடன் தனித்து நின்று செயல்படக் கூடிய ஃபேஸ் பேக் ஆகும். ஷேவிங்கிற்குப் பின்னர் தேனை உங்கள் முகத்தில் தடவிக் கொண்டு, 20-30 நிமிடங்கள் இருக்க வேண்டும். அதன் பின்னர் முதலில் வெதுவெதுப்பான தண்ணீரிலும், பிறகு குளிர்ந்த நீரிலும் முகத்தை கழுவ வேண்டும். வறண்ட சருமம் கொண்ட ஆண்களுக்கு வாழைப்பழ ஃபேஸ் பேக் பலன் தரும். வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து கெட்டியான ஒருகலவையை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஷேவிங்கிற்குப் பின்னர் 10-20 நிமிடங்கள் முகத்தில் தடவி, தோலுக்கு புத்துயிர் கொடுங்கள். பப்பாளியில் உள்ள ‘பப்பாய்ன்’ என்ற சிறப்பு என்ஸைம் இறந்த செல்களை நீக்கவும் மற்றும் தோலின் கழிவுகளை நீக்கவும் செய்யும் திறன் கொண்டதாகும். சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட காயங்கள் அல்லது தோல் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தி உங்கள் தோலை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.

இதர பிரிவுகள், செய்திகள், முதன்மை செய்திகள்

“காதை” கொஞ்சம் “கவனிங்க” !!!..

உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக்கென்று தனியான பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. எனவே, சிறு சிறு துகள்களாக அழுக்குகள் காதுகளுக்குள் சேர்ந்து விட வாய்ப்புகள் உள்ளன. மெழுகு போன்று அந்த அழுக்குகள் சேர்வதால் காது அடைத்துக் கொள்ளவும் கூடும். அழுக்குகளும், குப்பையும் காதை ஆக்கிரமித்துக் கொள்ளும் அபாயமும் உண்டு. சுத்தம் செய்ய சில எளிமையான வகைகள் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சூடாக காய்ச்சி, அதை பயன்படுத்தி காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும். தேங்காய் எண்ணெயை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்குமாறு காய்ச்சத் தொடங்கவும். வெதுவெதுப்பாக இருக்கும் எண்ணெயில் 3-4 துளிகளை காதில் விடவும். இந்த வெதுவெதுப்பான எண்ணெய் கரைப்பானாக செயல்பட்டு காதில் உள்ள மெழுகை கரைத்து, எளிதில் வெளியேறச் செய்யும். இவ்வாறு எண்ணெயை காதுக்குள் விடும் போது, தலையை எதிர்ப்புறமாக திருப்பி வைத்தால், எண்ணெய் காதுக்குள் ஆழமாக உள்ளே செல்லும். இரவு முழுவதும் எண்ணெயை காதுக்குள் வைத்திருக்கும் பொருட்டாக பஞ்சை கொண்டு காதை அடைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் தண்ணீரை விட்டு காதை சுத்தம் செய்யுங்கள் மற்றும் அதிகபட்சமாக இருக்கும் எண்ணெயையும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். மென்மையான பட்ஸ்களைக் கொண்டு காதுகளை தொடர்ந்து சுத்தம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முயற்சியின் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் – மென்மையான பட்ஸ்களை தேர்ந்தெடுப்பது தான். காதையோ அல்லது அதன் உட்பகுதிகளையோ சேதப்படுத்தக் கூடிய பட்ஸ்கள் அல்லது கருவிகளை பயன்படுத்த வேண்டாம். நல்ல தரமான மற்றும் மென்மையான பட்ஸ்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன. இந்த வழிமுறைகளை எல்லாம் பயன்படுத்திய பின்னரும் உங்கள் காதுகளில் உள்ள அடைப்புகள் நீங்காவிடில், இது நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரமாகும். காது வலி மற்றும் மெழுகு உருவாகி கிடத்தல் ஆகியவை காது தொடர்பான நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். காதுகளில் தொடர்ந்து மற்றும் அடிக்கடி வலி ஏற்பட்டால் அது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும். மேலும், மருத்துவர்கள் அவர்களிடமுள்ள கருவிகளைக் கொண்டு உங்கள் காதுகளை சுத்தம் செய்து விடுவார்கள். காதுகளில் உள்ள அழுக்குகளை எளிதில் சுத்தம் செய்ய முடியாது. அதற்கு தொடர்ந்த கவனிப்பும், பராமரிப்பும் அவசியம். உடலின் மற்ற பாகங்களைப் போலவே காதுகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Scroll to Top