இதர பிரிவுகள்

இதர பிரிவுகள்

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

நலம் தரும் தாவரங்கள்-கற்பூரவல்லி

கற்பூரவல்லி புதர்ச் செடிவகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப்பெயரும் சிலப்பகுதிகளில் வழங்கப்படுகிறது. அடர்ந்த புதர்களில் பெரும்பாலும் தேன் கூடுகளைக் காண முடியும் .தண்டுகளை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டால் முளைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த வகையிலேயே கற்பூரவல்லி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நகரத்தில் வசிப்பவர்கள் இந்தச் செடியைத் தொட்டியிலும் வளர்த்துப்பயன் பெறலாம். கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். இலையில் சுரக்கும் ஒரு விதமான ஆவியாகும் தன்மையுடைய நறுமண எண்ணெய் இந்த மணத்திற்கு காரணமாகும். கற்பூரவல்லி காசநோய், கபக்கட்டு, அம்மைக்கொப்புளம் ஆகியவைகளைக்கட்டுப்படுத்தும். குழந்தை மருத்துவத்திலும் உயர்ந்த இடத்தை வகிக்கிறது.மழைக்காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்தை தவிர்க்க ,கற்பூரவல்லி இலையை பஜ்ஜி செய்து சாப்பிடலாம். கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு பிழிந்து நல்லெண்ணெய் சேர்த்துக் குழப்பி நெற்றியில் பூச தலைவலி குணமாகும். ஜலதோசம் கட்டுப்பட இரண்டு நாட்கள் காலை, மாலை வேளைகளில் கற்பூரவல்லி இலைச்சாறு 1/4 டம்ளர் அளவுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். தொடரும்………

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல்

தனித்துவம் வாய்ந்த குரல் வளத்தைப் பெற்ற பிரபல இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் 1913ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாத் நகரில் பிறந்தார். இந்துஸ்தானி இசை மேல் இவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தாய் இந்துஸ்தானி மேதை கிருணாச்சாரியாவிடம்இசை கற்க ஏற்பாடு செய்தார். ஆரம்பக் கல்வி மட்டுமே கற்ற இவர் ,தத்தோபன்ட் தேசாய் ,சவாய் கந்தர்வா உள்ளிட்ட ஜாம்பவான்களிடம் இசை கற்று சிறந்த இசைக்கலைஞர் எனப் போற்றப்பட்டார். பல நகரங்களில் இந்துஸ்தானி இசைக் கச்சேரிகள் நிகழ்த்தி , நாடு முழுவதும் இவரது புகழ் பரவியது. 70 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த இவரது இசைப்பங்களிப்பிற்காக 1962ஆம் ஆண்டு கர்நாடக சங்கீத் நிருத்யா அகாடமி விருது பெற்றார் . பத்மபூசண், பத்ம விபூசண்,வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றார். பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்த காலக்கட்டத்தில் , தான் சிறந்த பாடகியாக வரவேண்டும் என்ற வைராக்கியத்துடனும் , பல தடைகளை எதிர்த்து கடுமையாகப் போராடி வற்றி பெற்ற கங்குபாய் ஹங்கல் 96வது வயதில் (2009) மறைந்தார்.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

நலம் தரும் தாவரங்கள்!

துளசி: எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம் . துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல்,வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் , புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். துளசி இலைக்கு மன இறுக்கம் , நரம்புக்கோளாறு, ஞாபகச்சக்தி இன்மை ,ஆஸ்துமா ,இருமல் மற்றும் பிற நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.துளசி இலைச்சாறில் தேன்,இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

இதர பிரிவுகள்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர் பாதுகாப்பு தினம் மார்ச்-4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966 இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. பிறகு 1971 ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும் பாதுகாப்பு உணர்வுடனும் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இதர பிரிவுகள்

இளைஞர்கள் வளர்க்கிறார்கள்

பிரலபமாகும் அபிநந்தனின் மீசை! பாகிஸ்தான் பிடியில் சிக்கி மீண்ட சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தனின் துணிச்சலுக்கு பாராட்டு கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் , அவரது மீசையும் பிரபலமாகிவிட்டது. இளைஞர்கள் பலர் அதே பாணியில் மீசையை வளர்க்க தொடங்கிவிட்டனர். சமூ வலைத்தளங்களிலும் அபிநந்தனின் மீசையை பற்றிய கருத்து பரிமாற்றங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அந்த மீசை ஒரு பிராண்ட் அடையாளமாக மாறி வருகிறது இது குறித்து ரமேஷ் தாஹிலியானி என்ற வாலிபர் கூறுகையில் , அபிநந்தனின் துணிச்சலை நமது நிஜவாழ்க்கையில் கடைபிடிக்கமுடியாது . ஆகவே,அவரது பிற சிறப்புகளில் ஒன்றைபின்பற்றலாம் என்ற எண்ணத்தில் , அவரது மீசையை வளர்க்க முயற்சிக்கிறோம் . அவரது மீசை ,பெருமைக்கும், வீரதீரத்துக்கும் அடையாளமாக திகழ்கிறது என்றார்.

இதர பிரிவுகள்

உலக வனவிலங்கு தினம்

அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் வன விலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருவில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய சூழலில் தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என மனிதனால் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணரும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளையும் விலங்குகளையும் காப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதர பிரிவுகள்

பரபரப்பான ஒரு நிமிடம்

நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நம் மூளையைத்தான் முதலில் பலப்படுத்திக்கொள்ளவேண்டும்- மாக்சிம் கார்க்கி. உழைப்பினால் கிடைத்த பொருளுக்கு உள்ள கவுரவம் , கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது.- ஹென்றி போர்டு வாழ்க்கை வெகு தொலைவில் இருந்து பார்க்கும் போது மகிழ்ச்சி கரமானது. அருகில் இருந்து பார்க்கும் போது துயரமானது-சார்லி சாப்ளின். உலகம் பொறுமை, பொறாமை என இருவேறாகப் பிரிந்து, நின்றாலும் பொறுமையே பொறாமையை வெல்லும் என்பது உறுதி.-திரு.வி.க. திறமையின் மூலம் புகழ் பெறலாம். ஆனால் ஒழுக்கத்தின் மூலமே ஒருவன் சிறந்த மனிதனாக முடியும்.– ஆபிரகாம் லிங்கன். மற்றவர்களை எடை போடுவதில் காலத்தை வீணாக்க வேண்டாம்.ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போகும்.- அன்னை தெரசா. அறிவுக்கே தெரியாத பல காரணங்கள் இதயத்தில் இருக்கின்றன.-பாஸ்கல். உலகத்தை வெல்வதைவிட சுயநலத்தை வெல்வதே சிறந்த வெற்றி.- புத்தர்.

இதர பிரிவுகள்

என்றும் புகழ் மங்கா சிறப்புக்குரியவர்கள்

ரா.பி.சேதுப்பிள்ளை எழுத்தாலும் செந்தமிழ்ச் பேச்சாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த தினம் இன்று (மார்ச்-2) அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் திருநெல்வேலி மாவட்டம் ராசவல்லிபுரத்தில் (1896) பிறந்தவர்.மூதுரை, நல்வழி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களை சிறு வயதிலேயே கற்றார்.பாளையங்கோட்டை தூய சேவியர் பள்ளியில் உயர்நிலைக் கல்வி , திருநெல்வேலி இந்து கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவரது தமிழ் இன்பம் என்ற நூலுக்கு இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. செய்யுளுக்கென்றே கருதப்பட்ட அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத்தொடர் என்ற அனைத்தையும் உரைநடையிலும் கொண்டு வந்தவர்.சொல்லின் செல்வர் என்று புகழப்பட்டார். குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் என்றால் முதலில் நினைவுக்கு வருவது குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான்.வயலின் இசையால் , தனது ரசிகர்களை 61 ஆண்டுகளாக மெய்மறக்க வைத்து, அத்துறையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த இவர் ( மார்ச்-2) இன்று பிறந்தார். இவர் பெற்ற விருதுகள்: கலைமாமணி விருது, சங்கீத கலா சிகாமணி விருது, சங்கீத நாடக அகாதமி விருது, இசைப் பேரறிஞர் விருது , பத்மஸ்ரீ விருது இவர் மறைந்தாலும் இவரின் இசை காற்றில் இன்றும் ஒலித்துக் கொண்டேதான் உள்ளது.

இதர பிரிவுகள், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’! – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்

சென்னையில் நடந்து வரும் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் இடத்தில் பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் ஜூலை 2-ம் தேதி முதல் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில் இன்று காலையே பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடம் முழுமையாக நிரம்பின. இதனால் காலை 11 மணி மற்றும் மதியம் 2 மணிக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் உள்ளே விடாமல் காக்க வைக்கப்பட்டனர். தகுந்த முறையில் தகவல் தெரிவிக்காததால் கலந்தாய்வு நடக்கும் பகுதியில் பெற்றோர்களும், மாணவர்களும் நீண்ட நேரம் நின்றனர். மாலை 3 மணி முதல் 4 மணி வரை பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 4 மணி அளவில் கலந்தாய்வு நடத்தும் அதிகாரிகள் உரிய விளக்கம் கொடுக்க முனைந்தனர். ஆனால், `மருத்துவக்கல்லூரியில் இடம் இல்லாதபோது எங்களை ஏன் அழைத்தீர்கள்? எங்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தவில்லை, சென்னைக்கு அழைத்து எங்களைக் கலந்தாய்வு அறைக்கு அனுப்பவும் இல்லை, காலை பதினொரு மணியில் இருந்து காத்திருக்கிறோம். எந்தவிதமான தகவலும் இல்லை. போதுமான அளவு இருக்கைகள் இல்லை என்பதால், இந்த மண் மேட்டின் மீது அமர வைத்து கடைசியில் ஊருக்குக் கிளம்புங்கள் என்று சொல்வது நியாயமா?’ என்று பொரிந்து தள்ளினர் பெற்றோர்கள். தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர்களிடம்,“பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக நிரம்பி விட்டன. நீங்கள் கிளம்பலாம். மற்றவர்கள் கலந்தாய்வுக்குச் செல்லும் வகையில் வழிவிட்டு உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர், கலந்தாய்வுப் பிரிவு அதிகாரிகள். மாணவர்களும், பெற்றோர்களும் விரக்தியில் கலந்தாய்வில் கலந்துகொள்ள எடுத்துவந்த 500 ரூபாய்க்கான வரைவோலையை என்ன செய்வது என்று தெரியாமல் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்தனர். இதுகுறித்து மருத்துவச் சேர்க்கை கூடுதல் செயலாளர் மருத்துவர் செல்வராஜிடம் பேசினோம். “இன்று 1,943 பேர் அழைக்கப்பட்டனர். பொதுப்பிரிவில் நீட் மதிப்பெண் 429 வரை பெற்றவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலும் 361 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு சுயநிதிக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிற்படுத்தப்பட்டப் பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் 375 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு நீட் மதிப்பெண் 344 பெற்றவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் 132 இடங்கள், பல்மருத்துவக் கல்லூரியில் 16 இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா (அண்ணாமலைப் பல்கலைக்கழக) மருத்துவக் கல்லூரியில் 25 இடங்கள், சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரியில் 10 இடங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி பிரிவைச் சார்ந்த பிரிவினருக்கு சென்னையைத் தவிர இதர மாவட்ட மருத்துவக் கல்லூரியில் பெரும்பாலான இடங்கள் உள்ளன” என்றார். நாளை நடக்கும் கலந்தாய்வுக்கு யார் வரலாம் என்பது குறித்து முன்னரே தகவல் வழங்கினால் உதவியாக இருக்கும் என்று கலந்தாய்வில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இதைக் கூடுதல் செயலாளர் செல்வராஜின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோது, “இன்று காலை 11.45 மணி அளவில் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ, ராஜா முத்தையா மெடிக்கல் கல்லூரி மற்றும் இதர சுயநிதிக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரம்பி விட்டன. இதனால் இனி உள்ளவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவார்கள். பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் மட்டும் இடங்கள் உள்ளன. இந்த இடங்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் கலந்தாய்வுக்கு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதர பிரிவுகள், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

11 குழாய்கள்….! 11 பேர் மரணம்…! டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன?

டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் மரணத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அந்தக் குடும்பத்தில் உள்ள நபர் ஒருவர், 11 டைரிகளை இதுவரை எழுதிவைத்திருக்கிறார். இதன்மூலம், ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன’ என்கின்றனர் போலீஸார். டெல்லி புராரி பகுதியில், கடந்த 1-ம் தேதியன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். இதில், 10 பேர் கை, கால், கண்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையிலும், ஒருவர் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இவர்களின் கூட்டு மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடவுள் நம்பிக்கையில் இறந்த குடும்பத்தினர், விநோத பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தது தெரியவந்துள்ளது. வீட்டை சோதனை செய்ததில், வீட்டின் பின்பக்கச் சுவரில் 11 குழாய்கள் மர்மமான முறையில் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் பதிவாகிய சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், `11 பேரின் மரணத்தில் எந்தக் கொலை முயற்சியும் நடக்கவில்லை. குடும்பத்தின் மூத்த மருமகள், தனது மகளுடன் சென்று நாற்காலிகளை வாங்கி வருவதும், தூக்கில் தொங்குவதற்காக சிறுவர்கள் வயர்களைக் கொண்டுசெல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. அந்த நாற்காலிகள் மற்றும் வயர்களைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கியுள்ளனர்’ எனத் தெரிவித்தனர். அந்த வீட்டை, இன்று மேலும் சோதனை செய்ததில், 11 டைரிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த டைரிகள் அனைத்தும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே தொடர்ந்து 11 ஆண்டுகளாக எழுதி வந்துள்ளார். அந்த டைரியில், `ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வையுங்கள்; அந்தத் தண்ணீரின் நிறம் எப்போது மாறுகிறதோ, அப்போது நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்; இந்தச் சடங்குகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் அவிழ்க்க வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `டைரியில் எழுதிய வரிகளுக்கும் மரணத்துக்கும் எதோ ஒருவகையில் தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது’ என்றார். இன்னும் மர்மங்கள் தொடரும்..

Scroll to Top