இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் நலம் தரும் தாவரங்கள்-கற்பூரவல்லி

நலம் தரும் தாவரங்கள்-கற்பூரவல்லி

நலம் தரும் தாவரங்கள்-கற்பூரவல்லி post thumbnail image

கற்பூரவல்லி புதர்ச் செடிவகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப்பெயரும் சிலப்பகுதிகளில் வழங்கப்படுகிறது. அடர்ந்த புதர்களில் பெரும்பாலும் தேன் கூடுகளைக் காண முடியும் .தண்டுகளை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டால் முளைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த வகையிலேயே கற்பூரவல்லி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நகரத்தில் வசிப்பவர்கள் இந்தச் செடியைத் தொட்டியிலும் வளர்த்துப்பயன் பெறலாம்.

கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். இலையில் சுரக்கும் ஒரு விதமான ஆவியாகும் தன்மையுடைய நறுமண எண்ணெய் இந்த மணத்திற்கு காரணமாகும்.

கற்பூரவல்லி காசநோய், கபக்கட்டு, அம்மைக்கொப்புளம் ஆகியவைகளைக்கட்டுப்படுத்தும். குழந்தை மருத்துவத்திலும் உயர்ந்த இடத்தை வகிக்கிறது.மழைக்காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்தை தவிர்க்க ,கற்பூரவல்லி இலையை பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு பிழிந்து நல்லெண்ணெய் சேர்த்துக் குழப்பி நெற்றியில் பூச தலைவலி குணமாகும். ஜலதோசம் கட்டுப்பட இரண்டு நாட்கள் காலை, மாலை வேளைகளில் கற்பூரவல்லி இலைச்சாறு 1/4 டம்ளர் அளவுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

தொடரும்………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி