செய்திகள்,பரபரப்பு செய்திகள் உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!

உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!

உயிரை கொடுத்து 250  பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !! post thumbnail image
விமான பயணிகளின் உயிரை இந்தோனேஷியாவில் சுனாமியின் போது காப்பாற்றுவதற்காக வேலை செய்த நபர் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார்.இது அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினால் இதுவரை 840 பேர் இறந்துள்ளனர்.பலர் படுகாயமடைந்துள்ளனர்.வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கத்தினால் பல வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டது.பல வீடுகள் சேதமடைந்தன.840பேர் பலியாகி உள்ளனர். 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில்,கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுலசேஸி தீவில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டு இருக்கிறது. அதில் 220 பயணிகள் இருந்துள்ளனர். அங்கு அப்போது விமான நிலைய ஏர் டிராபிக் இயக்குனராக அந்தோனியஸ் குணவான் ஆகுங் என்பவர் இருந்துள்ளார்.விமானம் எடுக்கப்படும் முன் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் அனைவரும் ஓடிவிட்டனர்.ஆனால்,குணவான் ஆகுங் மட்டும் ஓடாமல்
விமானத்தினை வழிபடடுத்தியுள்ளார்.விமானம் புறப்பட்ட பின் அவசரமாக படிகளில் இறங்கி கீழே வந்துள்ளார். ஆனால் கீழ் இறங்கும் போது விழுந்து இவர் கால் உடைந்துள்ளது.

பின்னர் நிலநடுக்கம் காரணமாக மாரடைப்பு வந்து அவர் இறந்துள்ளார்.வெகு நேரம் கழித்து தான் இந்த செய்தி வெளியே வந்துள்ளது.இது அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி