காங்கிரஸ் கட்சி தலைவரான பட்நாயக் முதன் முதலாக கடந்த 1980 ஆம் ஆண்டு ஒடிசா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 1989 ஆம் ஆண்டு வரை முதல்வர் பதவியை தொடர்ந்து வகித்து வந்தார். மீண்டும் 1995 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்து 4 ஆண்டு காலம் முதல்வராக பதவி வகித்தார். அதன் பின் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அசாம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு 5 ஆண்டு காலம் அப்பதவியில் நீடித்தார். பின்னர் தனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு திரும்பினார்.
பட்நாயக் மறைவிற்கு ஒடிசா கவர்னர் ஜமீர் மற்றும் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒடிசா அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் மாநிலத்தில் ஒரு வார துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி