புதுடெல்லி:-ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற முக்கிய தலைவர்கள் பயணங்கள் செய்கின்றனர். அந்த வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கித்தொகை ரூ.600 கோடி அளவுக்கு குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சகங்கள் இந்த அளவுக்கு கட்டணப்பாக்கி வைத்துள்ளன. இது தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களின் கவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எடுத்துச்சென்றுள்ளது. ஏராளமான நஷ்டம் காரணமாக மூழ்கும் நிலையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 2004 நிதி ஆண்டில் இந்த நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 388 கோடி நஷ்டத்தை சந்தித்தது. தொடர் நஷ்டங்களுக்கு பின்னர், கடந்த டிசம்பரில்தான் இந்த நிறுவனத்துக்கு ரூ.14.6 கோடி நிகர லாபம் கிடைத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி