இதனால் நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை சமீபகாலமாக நீடித்து வருகிறது. மத்திய அரசால் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் நேதாஜி விமான விபத்தில் பலியாக வில்லை. கொல்லப்பட்டார் என்று அவரது முன்னாள் பாதுகாவலர் ஜக்ராம் யாதவ் பரபரப்பான தகவலை வெளியிட்டு உள்ளார். இந்திய தேசிய ராணுவத்தில் சிப்பாயாக இருந்த 93 வயதான அவர் இதுபற்றி கூறியதாவது:– நேதாஜியும், முக்கிய அதிகாரிகளும் சுதந்திர போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதை வீரர் என்ற முறையில் நான் அடிக்கடி கேட்டுள்ளேன்.
1945–ம் ஆண்டு நாங்கள் சிட்டகாங் சிறையில் இருந்த போது நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டதாக செய்தி வந்தது. இந்த செய்தியை நாங்கள் யாரும் நம்பவில்லை. இந்திய தேசிய ராணுவ வீரர்களை தவறாக வழி நடத்த அவரது மரணம் பற்றிய செய்தி பரப்பப்பட்டது. சீனாவின் விடுதலைக்கு பிறகு 1949–ல் சீன தூதுவர் ஒருவர் அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு வந்தார். அவர்தான் நேதாஜி ரஷியாவில் இருப்பதாகவும், இந்தியா திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். இதுபற்றி நேருவுக்கு தெரிவித்தபோது அதை நிராகரித்தார். நான் மட்டுமல்ல எனது தலைமையில் உள்ள எல்லோரும் நேதாஜி கொல்லப்பட்டதாகவே கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஜக்ராம் யாதவ் 1943–44–ம் ஆண்டில் 13 மாதம் நேதாஜிக்கு பாதுகாவலராக இருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி