செய்திகள்,திரையுலகம் ‘காக்கி சட்டை’ திரைப்படம் – 50 நாளில் 50 கோடி வசூல்!…

‘காக்கி சட்டை’ திரைப்படம் – 50 நாளில் 50 கோடி வசூல்!…

‘காக்கி சட்டை’ திரைப்படம் – 50 நாளில் 50 கோடி வசூல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், பி.மதன் தமிழகம் முழுக்க வெளியிட்டார். பிப்ரவரி 27 அன்று வெளியான காக்கி சட்டை படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவும் மற்ற நாட்களில் 60 சதவிகித ஆடியன்ஸ் உடன் காக்கி சட்டை படம் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

கயல் படத்தைத் தயாரித்த வகையில் மதனுக்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை ஈடுகட்டி மேலும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது காக்கி சட்டை. சுருக்கமாக சொல்வது என்றால்…50 நாட்களில் ஏறக்குறைய 50 கோடியை வசூல் செய்திருக்கிறது. இப்படத்தின் வசூலை கணக்கில் கொண்டே ரஜினி முருகன் படத்தை சுமார் 65 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி