பாரீஸ்:-வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பாரீஸ் நகரில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வசதி படைத்தவர்கள் மானிய எரிவாயு சிலிண்டரை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை ஏற்றுக்கொண்ட நல்ல உள்ளம் படைத்த 2 லட்சம் பேர் ஒரே வாரத்தில் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர்.
அடுத்ததாக கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி மானிய சிலிண்டரை ‘சரண்டர்’ செய்தோரின் எண்ணிக்கை 3½ லட்சமாக உயர்ந்தது. இது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. இதில் கிடைக்கும் நிதி அரசு கஜானாவுக்கு செல்லாது. ஆனால், இன்னமும் மர விறகால் அடுப்பு எரிக்கும் மக்களுக்கு இந்த மானிய சிலிண்டர் வழங்கப்படும். இதன் மூலம் மரங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி