அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!…

அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!…

அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!… post thumbnail image
பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே கடந்த அரை நூற்றாண்டு காலமாக இருந்து வந்த பகைமை உணர்வு மாறி, நட்புணர்வு மலரத்தொடங்கி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பனாமா சிட்டியில் நேற்று முன்தினம் நடந்த உச்சிமாநாட்டின்போது, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவும் சந்தித்தனர். கை குலுக்கினர். பேசினர். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ஒபாமா கருத்து தெரிவிக்கையில், கியூபா அதிபருடனான சந்திப்பு, இரு நாடுகளுடனான உறவில் ஒரு திருப்புமுனை என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறும்போது, இரு நாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன. கியூபாவில் ஜனநாயகத்தை, மனித உரிமைகளை நிலைநாட்டும்படி வலியுறுத்துவேன். கடந்த 4 மாதங்களாக கியூபாவுடனான அமெரிக்க உறவில் நிகழ்ந்துள்ள அதிரடி மாற்றங்களை அமெரிக்க மக்களும், கியூபா மக்களும் ஆதரிக்கின்றனர் என குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி