செய்திகள்,திரையுலகம் கிங்க்ஸ்மேன் : தி சீக்ரெட் சர்வீஸ் (2015) திரை விமர்சனம்…

கிங்க்ஸ்மேன் : தி சீக்ரெட் சர்வீஸ் (2015) திரை விமர்சனம்…

கிங்க்ஸ்மேன் : தி சீக்ரெட் சர்வீஸ் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
சாதாரண மக்களுக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு பிரபலமான தையற்கடை போன்று தோற்றமளிக்கும் ‘கிங்ஸ்மேன்’ நிறுவனத்தின் பின்புறம் ஒரு மிகப்பெரிய சீக்ரெட் சர்வீஸையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் நாசவேலைகளை அவர்களுக்கே தெரியாமல் கண்டுபிடித்து அதனை அளிப்பதுதான் இந்த ரகசிய ஏஜென்ட்களின் தலையாய கடமை. இந்த ‘கிங்ஸ்மேன்’ சர்வீஸுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு பயங்கரமான பரீட்சைகள் வைக்கப்படும். அது அத்தனையிலும் வெற்றிபெறுபவர்கள் மட்டுமே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவார்கள். அந்த பரீட்சைக்கு தேர்வு செய்யப்படுவதே அரிதான வாய்ப்புதான். அப்படி ஒரு வாய்ப்பை பெறுகிறார் நாயகன் லீ (ஜோனோ டேவிஸ்). அந்த நிறுவனத்தில் ஏஜென்ட்டாக இருந்த தனது தந்தையின் மறைவால் நாயகன் லீக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் எல்லா பரீட்சைகளிலும் ஜெயிக்கும் லீ கடைசி தேர்வில் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வதால் தோற்கிறார்.

அதேநேரம், அமைதியாக இருக்கும் இந்த பூமியை கலவரபூமியாக்க, நாசவேலை ஒன்றில் ஈடுபடுகிறான் ‘வேலன்டைன்’ (சாமுவேல் எல்.ஜாக்ஸன்) எனும் கோடீஸ்வரன். தன் மொபைல் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சிம்மை வழங்கி, அதில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம் எனும் திட்டத்தையும் அறிவிக்கிறான். இதனால் வேலன்டைன் கொடுக்கும் இலவச சிம்மை மக்கள் போட்டி போட்டு வாங்கி பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். பெரும்பாலான மக்கள் இந்த சிம்மை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியதும் செல்போன் ‘அலைகற்றை’ மூலமாக வைரஸ் கிருமி ஒன்றை அனுப்பி மனிதர்களின் மனங்களில் வன்முறை உணர்ச்சியைத் தூண்டி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாக வைக்கிறான் வேலன்டைன். வேலன்டைனின் இந்த நாசவேலையைத் தெரிந்துகொள்ளும் ‘கிங்ஸ்மேன்’ ஏஜென்ட்ஸ் அதனை முறியடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இந்தத் திட்டத்தில் லீயும் பங்கெடுத்து வெற்றிகரமாக எப்படி சாதிக்கிறான் என்பதே ‘கிங்ஸ்மேன்’ படத்தின் க்ளைமேக்ஸ்.

‘கிங்ஸ்மேன்’ படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக ஹியூமரையும் சேர்த்திருக்கிறார்கள். இதனால் படம் பார்க்கும் ரசிகர்கள் தியேட்டரில் ஆர்ப்பரித்த வண்ணம் படத்தை ரசிக்கின்றனர். குறிப்பாக ஏஜென்ட்டாக வரும் கோலின் ஃபிர்த் கையில் வைத்திருக்கும் சாதாரண குடையை திடீரென ஆயுதமாக மாற்றி சண்டைபோடும் காட்சியில் தியேட்டர் அதிர்கிறது. அதேபோல் வில்லி சோஃபியா பௌடெல்லாவின் விசித்திர செயற்கைக் கால்களும் படத்தில் ஆக்ஷன் விருந்து படைத்திருக்கிறது.
விறுவிறு ஆக்ஷனையும், கலகல காமெடியையும் இணைத்து இப்படத்தை இயக்கியிருப்பவர் ‘எக்ஸ்&மென்’, ‘கிக் ஆஸ்’ படப்புகழ் மேத்யூ வான். 129 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இங்கே வெளியிட்டுள்ளது.இப்படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நட்சத்திரங்கள் கச்சிதமான நடிப்பை வழங்கி ரசிகர்களிடம் கைதட்டல்களை அள்ளுகிறார்கள். குறிப்பாக ஏஜென்ட்களாக நடித்திருக்கும் கோலின் ஃபிரித், இளம் ஏஜென்ட்டாக வரும் ஜோனோ டேவிஸ், வில்லன் சாமுவேல் ஜாக்ஸன், அவரின் உதவியாளர் சோஃபியா பௌடெல்லா ஆகியோர் ரசிகர்களை பெரிய அளவில் வசீகரித்திருக்கிறார்கள். வசனங்கள், பின்னணி இசை, எடிட்டிங், கிராபிக்ஸ் என எல்லாமே ஒரு ஆக்ஷன் படத்திற்குரிய அளவில் உச்சபட்ச அளவில் கைகொடுத்திருக்கின்றன.

மொத்தத்தில் ‘கிங்ஸ்மேன் : தி சீக்ரெட் சர்வீஸ்’ அதிரடி…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி