செய்திகள்,தொழில்நுட்பம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் மனிதர்களின் ஆயுளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் – கூகுள் தகவல்!…

மனிதர்களின் ஆயுளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் – கூகுள் தகவல்!…

மனிதர்களின் ஆயுளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் – கூகுள் தகவல்!… post thumbnail image
கலிபோர்னியா:-கூகுள் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறை தவிர மற்ற பிற துறைகளிலும் பெரும் முதலீடுகளை செய்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மரபணு, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிப்பது அதாவது முதுமையை தடுக்கும் துறைகளில் அதிக கவனம் செலுத்திவருகிறது.

இந்த ஆய்வுகளை தலைமையேற்று நடத்திவரும் பில் மார்ஸ் தங்கள் ஆய்வு பற்றி கூறுகையில், மனிதர்களின் வாழ்நாட்களை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். சாவை தடுக்க முடியாது. ஆனால், கண்டிப்பாக நீண்ட நாட்கள் வாழ வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. இதுவரை மனிதர்களின் ஆயுளை 120 ஆண்டுகள் வரை நிச்சயமாக நீட்டிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறி வந்த நிலையில், கூகுள் அதை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி