செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: 10 பேர் பலி!…

நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: 10 பேர் பலி!…

நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: 10 பேர் பலி!… post thumbnail image
பியோனஸ் ஏர்ஸ்:-தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினாவில் பிரான்சை சேர்ந்த ஒரு தனியார் டி.வி. பிரபலங்களை வைத்து ஒரு ‘ஷோ’ காட்சியை படம் பிடித்தது. அதன்படி ஹெலிகாப்டரில் பறக்கும் பிரபலங்கள் அதில் பறந்த படியே தரையில் இருக்கும் தங்களது தங்குமிடம் மற்றும் உணவு பொருட்களை படம் பிடிக்க வேண்டும். அக்காட்சி அர்ஜென்டினாவில் வடமேற்கில் உள்ள லாரி ரியோஜா மாகாண மலைப்பகுதியில் நடந்தது. இதில் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு வீரர்கள் உள்பட 8 பேர் கலந்து கொண்டனர்.

இவர்கள் 2 ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இவர்களது ஹெலிகாப்டர்கள் வில்லா கேஸ்டெல்லி என்ற இடத்தில் சென்ற போது 2 ஹெலிகாப்டர்களும் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளாகின.இதனால் தரையில் விழுந்து அவை நொறுங்கின. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 10 பேர் பலியாகினர். அவர்களில் 3 பேர் பிரான்சின் பிரபலமான விளையாட்டு வீரர்கள். புளோரன்ஸ் ஆர்தாயுட் பாய்மர படகு வீராங்கனை ஒருவரும் ஆவார். மற்றொருவர் காமில் முபாத். இவர் ஒலிம்பிக் நீச்சல் வீரர்.

இன்னொருவர் அலெசிஸ் வாஸ்டின். ஓலிம்பிக் குத்துச்சண்டை வீரர். இவர்கள் தவிர மேலும் 5 பேர் பிரான்சை சேர்ந்தவர்கள். இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் பிரான்கோயில் ஹோலண்டே உறுதி செய்தார்.விபத்தில் பலியான நீச்சல் வீரர் காமில் முபாத் 2012–ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கம் வென்றவர். அலெசிஸ் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி