சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த 2ம் தேதி ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 312 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து நேற்று ரூ.20 ஆயிரத்து 160 ஆக விற்றது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ224 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 936 ஆக உள்ளது. கிராமுக்கு ரு.28 குறைந்து ரு.2,492–க்கு விற்கிறது.
கடந்த 5 நாளில் பவுனுக்கு ரூ.376 குறைந்துள்ளது. இது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது. பங்கு சந்தையில் அதிக முதலீடு, சர்வதேச சந்தை நிலவரம் ஆகிய காரணங்களால் தங்கம் விலை சரிந்து வருவதாக தெரிகிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.420 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.35 ஆயிரத்து 965 ஆகவும், ஒரு கிராம் ரூ.38.50 ஆகவும் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி