செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் புற்றுநோயை விட மாசு கலந்த தண்ணீரால் அதிக பெண்கள் மரணம்: ஆய்வில் தகவல்!…

புற்றுநோயை விட மாசு கலந்த தண்ணீரால் அதிக பெண்கள் மரணம்: ஆய்வில் தகவல்!…

புற்றுநோயை விட மாசு கலந்த தண்ணீரால் அதிக பெண்கள் மரணம்: ஆய்வில் தகவல்!… post thumbnail image
நியூயார்க்:-சர்வதேச அளவில் பெண்கள் மார்பக புற்று நோயால் மரணம் அடைகின்றனர். அதற்கு அடுத்த படியாக எய்ட்ஸ், நீரிழிவு போன்ற நோய்களாலும் இறக்கின்றனர். ஆனால் இவற்றை விட மாசு கலந்த அழுக்கு தண்ணீரால் தான் மிக அதிக அளவில் மரணம் அடைவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் சீட்டலை மையமாக கொண்டு இயங்கும் சுகாதார ஆய்வு நிறுவனம் சமீபத்தில் நடத்திய சர்வேயில் கண்டு பிடிக்கப்பட்டது. சுகாதாரமற்ற பொது கழிவறைகள் மற்றும் சுத்தம் இல்லாத அழுக்கு படிந்த மாசு கலந்த தண்ணீர் போன்றவற்றால் இருதய நோய்கள், பக்கவாதம், மூச்சு கோளாறு நோய்கள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

இதன் மூலம் சர்வதேச அளவில் ஆண்டொன்றுக்கு சுமார் 8 லட்சம் பெண்கள் மரணத்தை தழுவுகின்றனர். எனவே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி