சென்னை,:-‘துலாபாரம்’ படத்தில் நடித்ததன் மூலம் அகில இந்திய சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘ஊர்வசி’ விருது பெற்றவர் நடிகை சாரதா. சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்துவரும் ‘ஊர்வசி’ சாரதா குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா சென்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின், அவர் விஜயவாடாவில் இருந்து காரில் ஐதராபாத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய காருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு கார் திடீரென்று விபத்துக்குள்ளாகி, தலைகுப்புற புரண்டது. பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த ‘ஊர்வசி’ சாரதாவின் கார் விபத்துக்குள்ளான கார் மீது மோதியது. அதில், அதிர்ஷ்டவசமாக சாரதா உயிர் தப்பினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி