தென்கொரியா தலைநகர் சியோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். பொதுவாக ரத்த நாளங்களில் கடின தன்மை அல்லது ரத்து குழாய்கள் சுரங்குவதால் அடைப்பு ஏற்படும். அதனால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது.
ஆனால் தினமும் 3 முதல் 5 கப் காபி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறை என கண்டறிந்துள்ளனர். காபியில் உள்ள வேதி பொருட்கள் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்கி ரத்த ஓட்டம் சீராக ஓட வழிவகை செய்கின்றன. அதனால் மாரடைப்பு ஏற்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி