அதன்பின்னரும் மார்ச் மாதம் 16-ந்தேதிக்குள் ஊதிய உயர்வு தொடர்பான உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மார்ச் 16-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய நேரிடும் என்று கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 நாட்கள் வேலைநிறுத்தம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், இதனால் வங்கியின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கும் என்றும் பொதுத்துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேசமயம் தடையில்லாத சேவைகளை முடிந்த அளவுக்கு தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தம் நடைபெறுமானால் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் வங்கிகள் செயல்படாமல் இருக்கும் நிலை ஏற்படும். மார்ச் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைநிறுத்தத்தையும் சேர்த்து மொத்தம் 5 நாட்களுக்கு வங்கிகள் முடங்கும் அபாயம் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி