செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெறாது – மைக் ஹஸ்சி!…

உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெறாது – மைக் ஹஸ்சி!…

உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெறாது – மைக் ஹஸ்சி!… post thumbnail image
மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், இந்திய அணி உத்வேகம் நிறைந்ததாகும். அணியில் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக விளங்கும் காலம் விரைவில் வரும். என்னை பொறுத்தமட்டில் இந்த உலக கோப்பையில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதே எனது கணிப்பாகும். உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பான பல அணிகள் உள்ளன. இப்போதே எந்த அணி வெற்றி பெறும் என்று கணிப்பது முடியாத காரியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி