செய்திகள் கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!…

கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!…

கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!… post thumbnail image
ரோம்:-கடந்த 2012ம் ஆண்டில் கோஸ்டா கன்கார்டியா என்ற சொகுசு கப்பல் இத்தாலி கடலில் பயணம் செய்தது. அதில் ஊழியர்கள் உள்பட 4262 பேர் பயணம் செய்தனர். அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது பாறையின் மீது மோதியது. இதனால் கடலில் மூழ்க தொடங்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். கப்பலில் இருந்த 4229 பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்களில் கப்பல் ஊழியர்களும் அடங்குவர்.

இருந்தும், இந்த விபத்தில் 32 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். இந்த விபத்துக்கு கப்பல் கேப்டன் பிரான் செஸ்கோ ஷெட்டினோ காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. அவரது அஜாக்கிரதையால் தான் இந்த விபத்து நடந்ததாக புகார் கூறப்பட்டது. எனவே, அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணை சுமார் 19 மாதங்கள் நடந்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், கப்பல் கேப்டன் பிரான்செஸ்கோ ஒரு கொலை குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அவருக்கு 16 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. முன்னதாக அவருக்கு 26 ஆண்டு தண்டனை வழங்கும் படி அரசு தரப்பு வக்கீல்கள் வாதாடினர். இருந்தும் கோர்ட்டு அவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதில் 10 ஆண்டுகள் கொலை குற்றத்துக்காகவும், 5 ஆண்டுகள் கப்பல் உடைந்து சேதம் ஏற்படுத்தியதற்காகவும், ஒரு ஆண்டு தனது பயணிகளை காப்பாற்றாமல் கைவிட்டதற்காகவும் வழங்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி